அகவிலைப்படியை விடுங்க.. பல ஆயிரம் அரியர் தொகையும் வருது.. எப்போது தெரியுமா? வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலுவையில் உள்ள அகவிலைப்படி (டிஏ) உயர்வு அரியர் தொகையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. மே மாதம் வழங்கப்பட உள்ள சம்பளத்தில் இந்த அரியர் பணம் வழங்கப்படும். நாடு முழுக்க 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மத்திய அரசின் இந்த பணம் வழங்கப்படும்.

bonus dearness allowance

டிஏ உயர்வின் முக்கிய சிறப்பம்சங்கள்:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 42% லிருந்து 46% ஆக உயர்த்தப்பட்டுள்ளது ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை நிலுவையில் உள்ள அரியர் மே மாதம் வெளியிடப்படும்
8.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்
ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இது பொருந்தும்

யாருக்கு பலன் கிடைக்கும்

இந்த முடிவு பல்வேறு துறைகளில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு பலன் அளிக்கும்.. பயனாளிகளின் பட்டியல் இதோ:

மத்திய அரசு ஊழியர்கள் (குரூப் ஏ, பி, சி) மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) பணியாளர்கள் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்
பாதுகாப்பு சேவைகளில் சிவில் ஊழியர்கள்
மத்திய அரசின் ஊதியக் கட்டமைப்பின் கீழ் தன்னாட்சி அமைப்பு ஊழியர்கள்

இதனால் சம்பளம் 720 முதல் 3150 ரூபாய் வரை ஊழியர்களுக்கு சம்பளம் உயரும்.

உங்களுக்கு வரப்போகும் அரியரை கணக்கிடுவது எப்படி?

நிலுவையில் உள்ள மாதங்களின் அடிப்படை ஊதியம் மற்றும் இதுவரை நீங்கள் வாங்கிய டிஏ, இனி வாங்க போகும் டிஏ இடையிலான வேறுபாட்டு ஆகியவற்றை வைத்து டிஏ நிலுவைத் தொகை கணக்கிடப்படுகிறது.

DA நிலுவைத் தொகை = (புதிய DA % - பழைய DA%) × அடிப்படை ஊதியம் × மாதங்களின் எண்ணிக்கை

பின்வரும் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:

அடிப்படை ஊதியம்: ₹35,400
DA உயர்வு: 4%
மாதங்கள்: 4 (ஜனவரி முதல் ஏப்ரல் வரை)
எனவே அரியர் நிலுவைத் தொகை = 0.04 × ₹35,400× 4 = ₹5,664 இந்த எளிய கணக்கீட்டு முறையைப் பயன்படுத்தி ஒவ்வொரு பணியாளரும் தங்கள் சொந்த அரியர் தொகையைக் கணக்கிடலாம்.


எப்போது வழங்கப்படும்?

புதிய டிஏ விகிதத்துடன் திருத்தப்பட்ட சம்பளம் மே 2025 சம்பளத்தில் வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய மாதங்களுக்கான (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) நிலுவைத் தொகையும் மே 2025 இல் மொத்தத் தொகையாக வழங்கப்படும்.

DA உயர்வு அமலுக்கு வரும்: ஜனவரி 1, 2025 திருத்தப்பட்ட சம்பளம்: மே 2025 வழங்கப்படும் நிலுவைத் தொகை: மே 2025 வழங்கப்படும்

சம்பளம் உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் (டிஆர்) 2% உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க பல கோடி ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது. இதோடு அரியர் தொகை தொடர்பான விளக்கமும் தற்போது வெளியாகி உள்ளது.

2% உயர்வு என்பது நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ.360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும்.

7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும். ஜூலை-டிசம்பர் 2024 அகவிலைப்படி 3% அதிகரித்து 53% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இதில் மேலும் 2% உயர்த்தப்பட்டு 55% ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+