கிளாம்பாக்கம் கிளம்பறீங்களா? பெருங்களத்தூர் டூ ஜிஎஸ்டி ரோட்டில இனி ஈஸியா போலாம்.. சென்னைவாசிகள் குஷி
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு எப்போது திறக்கப்படும் என்ற ஆர்வம் சென்னைவாசிகளுக்கு பெருகிவரும் நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
ரூ.400 கோடி செலவில், 40 ஏக்கர் பரப்பளவில், சகல வசதிகளுடன் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.. கடந்த 6 மாதங்களுக்கு முன்பேயே பஸ் ஸ்டாண்டு திறந்திருக்க வேண்டும்.. ஆனால், போதுமான வடிகால் வசதிகள் இல்லாமல் இருப்பதும், மழைநீர் பஸ் ஸ்டாண்டு வாசலிலேயே தேங்குவதும், பெருத்த அதிர்ச்சியை உண்டு பண்ணியிது.

அதாவது, மெயின் ரோட்டிலிருந்து, இந்த பஸ் ஸ்டாண்டு 2 அடி கீழே உள்ளது.. அதனால், சாலையில் சிறிதளவு மழைநீர் ஓடினாலும், அது பஸ் ஸ்டாண்டுக்குள் புகுந்து குளம்போல காட்சி தந்துவிடுகின்றது. அதனால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போடப்பட்டது.
வடிகால்வசதி: ஜிஎஸ்டி சாலையில், புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளும், ரூ.17 கோடியில் துரிதமாக ஆரம்பமாகின. குறிப்பாக, பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறும் மழைநீர், சுமார் 180 அடிநீளமுள்ள ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
அய்யஞ்சேரி இணைப்பு சாலை பணிகள் உட்பட பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், இறுதிகட்ட பணிகளை மட்டுமே கண்காணித்து வருவதாக அதிகாரிகள் சொல்லியிருந்தனர்.. தீபாவளி பண்டிகைக்கு முன்பு பஸ் ஸ்டாண்டு திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. ஆனால், அது சாத்தியப்படாததால், பொங்கல் பண்டிகைக்கு முன்பே திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.
சென்னை மழை: இந்நிலையில்தான், இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால் வெளியூர் பேருந்துகள் சென்னைக்குள் வருவது தவிர்க்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.. அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்த இந்த கூட்டத்துக்கு, போக்குவரத்து கழகங்கள், காவல் துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்..
ஒப்பந்த பணிகள்: மேலும், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறைகள் ஒப்புதல் தெரிவித்திருக்கும் நிலையில், பஸ் ஸ்டாண்டை திறப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அந்தவகையில், வரும் டிசம்பர் 10 அல்லது 14ம் தேதி, பஸ் ஸ்டாண்டு திறப்பு விழாவை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது..
அதுமட்டுமல்ல, திறப்பு விழா நடத்தப்படுவதற்கான இடம், விழா மேடை, அழைப்பிதழ், போன்ற விஷயங்களை இறுதி செய்யும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்தவகையில், ஏற்கனவே சொன்னதுபோலவே, பொங்குலுக்குள் பஸ் ஸ்டாண்டை திறக்க மும்முரமாகி வருகிறார்கள்.. இந்த திறப்பு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
எதிர்பார்ப்பு: ஆனால், நேற்று பெய்த மழைநீரும், இதே பஸ் ஸ்டாண்டை சுற்றி தேங்கி நிற்கிறது. இந்த 4 நாட்களாகவே, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு வாசலில் மழைநீர் சூழ்ந்ததால், அந்த பகுதியை வாகன ஓட்டிகள் கடக்க சிரமப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் இந்த 2 நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனை மாதமும் கட்டுமானப்பணிகள் நடந்து முடிந்த நிலையில், தண்ணீர் தேங்கிநிற்பதால், இதற்கும் ஒரு தீர்வை அதிகாரிகள் கொண்டுவருவார்கள் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications