சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராதாகிருஷ்ணனை டிரான்ஸ்பர் செய்தாங்களே.. திமுகவை "போட்டு" தந்தது யார் தெரியுமா.. பாஜக புள்ளி பகீர்

ராதாகிருஷ்ணன் டிரான்ஸ்பர் ஏன் என்பதற்கு மத்திய அமைச்சர் காரணம் சொல்லி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள், டெண்டர்கள் குறித்த "டேட்டாக்கள்" அத்தனையும், அண்ணாமலைக்கு எப்படி தெரியும் என்ற குழப்பம் வட்டமடித்து கொண்டிருந்த நிலையில், அதை பற்றி மத்திய அமைச்சரே விளக்கம் தந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு, தமிழக அரசு திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.. அதில், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது.

அத்துடன், வணிகவரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, தருமபுரி, திருச்சி, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 51 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

ஆரம்பமே சரவெடி! நான் ஏசி ரூம் ஆபீசர் இல்லை! சர்க்கரையை சுவைத்து தரம் பரிசோதித்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்! ஆரம்பமே சரவெடி! நான் ஏசி ரூம் ஆபீசர் இல்லை! சர்க்கரையை சுவைத்து தரம் பரிசோதித்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்!

டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்


இந்த டிரான்ஸ்பர் விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது... குறிப்பாக சுகாதாரத்துறை செயலர் ஏன் மாற்றம் செய்யப்பட வேண்டும்? என்ன நடந்தது? பல்வேறு கேள்விகளை எழுப்பியது.. மற்றொருபக்கம், ராதாகிருஷ்ணன்தான், நீண்ட நாட்களாகவே டிரான்ஸ்பர் கேட்டு கொண்டிருந்தார், அவர் விருப்பத்தின்பேரில்தான் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றும் தகவல்கள் பரபரத்தன.. எனினும் இதுகுறித்து தெளிவான மற்றும் உறுதியான காரணங்கள் சொல்லப்படவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அறிக்கை ஒரு சலசலப்பை உருவாக்கியது.

யுவராஜா

யுவராஜா

இக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் யுவராஜா, ராதாகிருஷ்ணனை ஏன் டிரான்ஸ்பர் செய்தீர்கள்? திமுக அரசின் ஊழல்களை மறைக்கவே ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது என்று பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அறிக்கை வெளியிட்டிருந்தார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், மதுரையில் நடந்த பாஜக கூட்டத்தில், இதே விவகாரத்தை முன்வைத்து மத்திய அமைச்சர் முரளிதரன் பேசியுள்ளார்.

 ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

மதுரை பழங்காநத்தத்தில் நடந்த பாஜக அரசின் சாதனை விளக்க பொது கூட்டத்தில், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் பேசும்போது, திமுக அரசின் ஊழல் குறித்து அண்மையில் மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்தான் அண்ணாமலைக்கு தகவல்கள் கொடுத்தவர்கள்... அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அண்ணாமலை திமுக அரசின் ஊழலை வெளியிட்டு வருகிறார்..

70 அதிகாரிகள்

70 அதிகாரிகள்

70 ஐஏஎஸ் அதிகாரிகளை நம்பி அண்ணாமலை அரசியல் செய்யவில்லை.. பாமக மக்களுக்காக, ஏழை, எளிய மக்களுக்காக இருந்து வரும் அண்ணாமலை, தமிழக மக்களுக்காக அரசியல் நடத்துகிறார்.. ஆனால், அண்ணாமலை இருக்கும் வரை ஊழல் செய்ய முடியாது என்பதால் அண்ணாமலைக்கு உதவியதாக கூறி 70 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றியுள்ளனர்.. அதிகாரிகளை மாற்றினாலும் திமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் அண்ணாமலையின் பணி தொடரும் என்று மேடையிலேயே முரளிதன் அறிவித்துள்ளார்.

 ராதாகிருஷ்ணன் மாற்றம்

ராதாகிருஷ்ணன் மாற்றம்

ஏற்கனவே ராதாகிருஷ்ணனை உட்பட 51 ஐஏஎஸ் அதிகாரிகளை, ஏன் மாற்றினார்கள் என்று தெரியாமல், ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்லி வரும் நிலையில், மத்திய அமைச்சர் சொல்லி உள்ள இந்த காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.. அண்ணாமலை ஒவ்வொரு செய்தியாளர் கூட்டத்திலும், திமுகவின் ஊழல் புகார்களை வெளியிட்டும், அமைச்சர்களின் துறை உட்பட அனைத்தையும் புட்டு புட்டு வைத்து வருகிறார் என்றால், அதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் திமுக மேலிடத்துக்கு அப்போதிருந்தே இருந்து வந்தது.. அந்த கருப்பு ஆடு யார் என்பதை கண்டறியவும் வாய்மொழி உத்தரவு போடப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன.

யுவராஜா

யுவராஜா

இப்போது, அதிகாரிகள்தான் அண்ணாமலைக்கு, தகவல்கள் கொடுத்தார்கள் என்று மத்திய அமைச்சர், எந்த அடிப்படையில், எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறார் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.. அப்படியானால் யுவராஜா சொன்னதும் உண்மையா? அல்லது பாஜக வேண்டுமென்றே இந்த விஷயத்தை திரித்து சொல்கிறதா? ஐஏஎஸ் அதிகாரிகளை போட்டு கொடுக்க வேண்டிய அவசியம் மத்திய அமைச்சருக்கு ஏன் வந்தது? என்பன சந்தேகங்களும் கூடவே எழுகின்றன.. எப்படி பார்த்தாலும் இதற்கெல்லாம் விடை கிடைத்துவிடும் என்றே நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!

English summary
Do you know who gave information to tn bjp leader annamalai and what will dmk going to do the next ராதாகிருஷ்ணன் டிரான்ஸ்பர் ஏன் என்பதற்கு மத்திய அமைச்சர் காரணம் சொல்லி உள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X