Mesham: வைகாசி மாதம் மேஷ ராசிக்கு ராஜயோகம்.. கடன் தீர்ந்து பணமழை கொட்டும்!
Vaikasi Matha Palangal: வைகாசி மாதத்தில் மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா, என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மிதுன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

சுக்கிரன் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடகத்தில் வந்து அமருகிறார். கேது சிம்ம வீட்டிலும், ராகு கும்ப வீட்டிலும் இருக்கிறார். இந்த கிரக நிலைகள் மேஷ ராசியினருக்கு என்ன விதமான பலன்களைக் கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு அற்புதமான மாதமாக இந்த வைகாசி மாதம் அமையும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். கழுத்தை நெறிக்கக்கூடிய கடன்கள் தீரும். உச்சகட்ட பணவரவு, மகிழ்வு, குடும்பத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இனிமை ஏற்படும்.
புதிய வேலை
வேலையில் சேரக்கூடிய யோகம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். புதிய வேலையில் சேரும் அமைப்பு. மனதில் நினைப்பது நடக்கும் பாக்கியம் ஏற்படும். அவசரப்படாமல் நிதானமாக செய்திருக்காலாமோ என்று நினைக்கும் அளவுக்கு தெளிவும், நிதானமும் ஏற்படும். சுய பரிசோதனைக்கு ஆட்படுத்தக்கூடிய காலகட்டம்.
வெற்றி
பாக்கியாதிபதி 4 ஆம் இடத்தில் அமருவது மிகப்பெரிய ராஜயோகத்தைக் கொடுக்கும். வீடு, மனை, வண்டி, வாகனம், சொத்து சேர்க்கும் உண்டாகும். உடைமைகளை சேர்க்கும் அமைப்பு உள்ளது. திருமணமாகாத மேஷ ராசியினருக்கு இந்த முறை வரன் பார்ப்பீர்கள். அதில் வெற்றி ஏற்படும். நிறைய பேருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.
திடீர் அதிர்ஷ்டம்
திடீர் அதிர்ஷ்டம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உருவாகும். வார்த்தையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரிடம் பேசினாலும் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது. செயலில் நிதானம் தேவை. குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவது, தண்ணீர் இருக்கும் பகுதிகளுக்கு செல்வது, பயணம் மேற்கொள்வது, மலை முகடுகளுக்குச் செல்வது, தெய்வ காரியங்களுக்குச் செல்வது போன்ற யோகம் உண்டாகும்.
பிரச்சனைகள் நீங்கும்
தெய்வீக காரியங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வ கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்து வருவீர்கள். அம்பிகையின் பரிபூரண அருள் கிடைக்கும். சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். குலதெய்வத்தின் அருள் ஏற்படும். குடும்பத்தினர் உங்களுக்கு சப்போர்ட் செய்வார்கள். வளர்ச்சி நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
ஜெயம்
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கெளரவம் ஏற்படும். சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பீர்கள். மற்றவர்கள் மதிக்கக்கூடிய சூழல் ஏற்படும். அனுசரணை உண்டாகும். தைரியம் நம்பிக்கை ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. அடிவயிறு, தொண்டை, வாயில் கொப்பளம் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
பேச்சில் கவனம்
செவ்வாய், வெள்ளியன்று உப்பு எடுத்து சுற்றிப் போட்டுக் கொள்வது நன்மை பயக்கும். வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். ஜூன் 14 வரை நீங்கள் நினைத்தவை நடக்கும். நிறைய நன்மைகள் நடக்கும். ஏதாவது ஒரு மாற்றம் உங்களுக்கு நிகழ்ந்தே தீரும். நிறைய பேர் உங்களைப் பற்றி புறம் பேசக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அடுத்தவர்கள் பேசும் பேச்சில் கவனம் தேவை.












Click it and Unblock the Notifications