"அபிராமி"யை ஞாபகமிருக்கா.. உறவுக்கு குறுக்கே வந்த "குரல்".. அமைந்தகரை லாவண்யா யார் தெரியுமா.. கொடுமை
சென்னை: கள்ளக்காதல் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதுடன், உலகமறியா பச்சிளம் குழந்தைகளின் உயிர்களையும் பறித்து சென்று கொண்டிருக்கிறது.. இதோ இன்னொரு கொடூரம்.
2018-ல் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. குன்றத்தூர் அபிராமி என்றாலே பிரபலம்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற 2 குழந்தைகளையும், பாலில் விஷம் வைத்து கொன்றவர் இந்த குன்றத்தூர் அபிராமி.
அபிராமி: இது தொடர்பான வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து தரப்பிலும் விசாரணை நடந்து முடிந்துள்ளதாக தெரிகிறது.. அபிராமி மீது குற்றம் நிரூபணமாகி உள்ளதால், அடுத்த சில நாட்களில் தீர்ப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

சிறையில் இருக்கும்போது, அபிராமி மனம் வருந்தி, தப்பு பண்ணிட்டேன்.. என் குழந்தைகளை கொன்றிருக்க கூடாது.. அவங்க போட்டோவையாவது என்கிட்ட காட்டுங்க" என்று கதறி அழுதது நினைவிருக்கலாம். ஆனால், அதுபோலவே அடுத்தடுத்த அபிராமிகள் உருவாகி கொண்டுதான் இருக்கிறார்கள்..
பிஞ்சு குழந்தைகள்: அதிலும், உலகமே அறியாத, பிஞ்சு குழந்தைகளை, பெற்ற தாயே துடிதுடிக்க கொல்வதையும், சித்ரவதை செய்வதையும் ஜீரணிக்கவே முடிவதில்லை.. இதுபோன்ற "அபிராமிகளின்" அட்டகாசங்களும் அடங்குவதில்லை... இதோ இன்னொரு அபிராமி, சென்னை அமைந்தகரையில் உருவாகி உள்ளார்.
செல்வபிரகாசம் என்பவருக்கு 27 வயதாகிறது.. தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார்.. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, நாமக்கல்லை சேர்ந்த லாவண்யா என்பவருடன் திருமணம் நடந்தது.. லாவண்யாவுக்கு 25 வயது.. தம்பதி இருவரும் மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில், ஒரு அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இப்போது, சர்வேஸ்வரன் என்ற இரண்டரை வயது மகன் இருக்கிறான்.
ஆண் குழந்தை: ஆனால், கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, நிறைய தகராறுகள் வந்துள்ளன.. இதனால், கடந்த சில மாதங்களாகவே இருவரும், தனித்தனியாக பிரிந்து வசித்து வந்திருக்கிறார்கள். அதாவது, செல்வப்பிரகாசம் அமைந்தகரையிலும், லாவண்யா கெருகம்பாக்கத்திலும் வசித்து வந்துள்ளனர்... இந்நிலையில், கடந்த வாரம், செல்வபிரகாசம் தன்னுடைய மகனை பார்ப்பதற்காக, கெருகம்பாக்கத்தில் உள்ள லாவண்யா வீட்டிற்கு சென்றிருக்கிறார்..
அப்போது லாவண்யா வீட்டில் இல்லை.. அதனால் அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, மகன் சர்வேஸ்வரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக சொன்னார்கள்.. இதைக்கேட்டதும், செல்வப்பிரகாசம் அதிர்ச்சியடைந்தார். பெற்ற மகன் இறந்துவிட்டானா? என்று கேட்டு, இந்த விஷயத்தை கூட தன்னிடம் மறைத்துவிட்டார்களே என்று கதறினார்.. எனினும், இதற்குள் ஏதோ விஷயம் உள்ளதாக நினைத்து, போலீசுக்கு போனார்.. மகனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, மாங்காடு போலீசிலும், ஆவடி கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.
படுகாயம்: இதுகுறித்த போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான், குழந்தை சர்வேஸ்வரனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் 5ம் தேதியே இறந்துவிட்டதாகவும் தெரியவந்தது.. போலீசார் இதுகுறித்து விசாரிக்கிறார்கள் என்று தெரிந்ததுமே, லாவண்யா தலைமறைவானார்.. அவரை தேடி அலைந்தபோதுதான், அவரது கள்ளக்காதல் விவகாரம் வெளியே வந்தது..
அந்த கள்ளக்காலன் பெயர் மணிகண்டன்.. இவருடன்தான் சமீபகாலமாக வசித்து வந்திருக்கிறார் லாவண்யா. இதையடுத்து, போலீசார் 2 பேரையுமே வலைவீசி தேடினர். இறுதியில் கைது செய்து, அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அதிர்ச்சிகரமான வாக்குமூலங்களை தந்திருக்கிறார்கள். இதுகுறித்து போலீசார் சொன்னதாவது:
கள்ளக்காதல்: செல்வப்பிரகாசம், லாவண்யாவுடன் கெருகம்பாக்கத்தில் அப்பார்ட்மென்ட்டில் வசித்தபோது, அதே அப்பார்ட்மென்ட்டில்தான் மணிகண்டனும் வசித்து வந்திருக்கிறார்.. இவர் லாவண்யாவின் கல்லூரி நண்பராம்.. ஒரே அப்பார்ட்மென்ட்டில் நண்பனை சந்திக்கவும், மணிகண்டனுக்கும், லாவண்யாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.. உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இந்த விஷயம் கணவனுக்கு தெரியவந்ததையடுத்து, லாவண்யாவை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் லாவண்யா காதில் எதையும் வாங்கவில்லை..
இதுதொடர்பாகவே தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது. மனைவி கொஞ்சம்கூட திருந்தாததை பார்த்து நொந்துபோன கணவன், அமைந்தகரையில் உள்ள தன்னுடைய அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதுவே லாவண்யாவுக்கு கொண்டாட்டமாகிவிட்டது.. ஆனால், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக குழந்தை சர்வேஸ்வரன் இருப்பதாக நினைத்தார்.. இன்னொருபக்கம், குழந்தையை, கள்ளக்காதலன் மணிகண்டன் அடிக்கடி அடித்து சித்ரவதை செய்து வந்திருக்கிறார்.. இதனால், குழந்தையின் உடம்பெல்லாம் தழும்புகளும், காயங்களும் ஏற்பட்டுள்ளன..
ஆத்திரம்: சம்பவத்தன்று அதாவது, மே 5ம் தேதி குழந்தை விளையாடிக்கொண்டிருந்தான்.. அப்போது, விளையாடிக்கொண்டே, மணிகண்டனின் செல்போனை எடுத்து தண்ணீரில் போட்டுவிட்டான்.. இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன், லாவண்யா 2 பேரும் சேர்ந்து குழந்தையை சரமாரியாக அடித்துள்ளனர். குழந்தையை தலைகீழாக தூக்கி, ஓங்கி ஓங்கி சுவற்றில் இருவருமே மாறி மாறி அடித்துள்ளனர். இதில், மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய குழந்தை, படுகாயமடைந்து அங்கேயே மயங்கி விழுந்தது..
இதனால் பதறிப்போன கள்ளக்காதல் ஜோடி, குழந்தையை போரூரில் தனியார் மருத்துவமனையில் கொண்டுபோய் அனுமதித்துள்ளனர்.. சிகிச்சைக்கு பிறகு, வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.. ஆனால், எக்குத்தப்பாக பலமுறை அடித்த காரணத்தினால், குழந்தைக்கு வலிப்பு நோய் வந்துவிட்டது.. லாவண்யா மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து செல்வதற்குள், குழந்தை இறந்துவிட்டது.
வலிப்பு நோய்: எனவே, வலிப்பு நோயால் குழந்தை இறந்ததாக கருதி மாங்காடு போலீசாரும், இந்த வழக்கை அப்படியே முடித்திருந்தனர். வழக்கு சுமூகமாக முடியவும், லாவண்யா கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதற்கு நடுவில் கணவர் இந்த விவகாரத்தை கிளப்புவார் என்று லாவண்யா நினைக்கவில்லை.. இப்போதுதான், கள்ளக்காதல் ஜோடி, குழந்தையை அடித்து கொன்றது தெரியவந்தது" என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, கொலையாளிகள் 2 பேருமே கைதாகி உள்ளனர். இதில் என்ன ஒரு கொடுமை என்றால், லாவண்யா- மணிகண்டன் கள்ளத்தொடர்பால், தன்னுடைய குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று கணவர் செல்வப்பிரகாசம் பயந்துகொண்டே இருந்தாராம்.. அதனாலேயே பலமுறை போலீஸ் ஸ்டேஷனுக்கும் வந்து முறையிட்டுள்ளார்.. தன் குழந்தையை தன்னிடமே தந்துவிடும்படி கெஞ்சினாராம்..
மறுப்பு: ஆனால் போலீசாரோ, குழந்தை தாயுடன்தான் இருக்க வேண்டும் என்று கருதியே செல்வப்பிரகாசிடம் குழந்தையை தர மறுத்துவிட்டார்களாம்.. ஒருவேளை, அன்றே ஒப்படைத்திருந்தால், இன்று அந்த பிஞ்சு உயிரிழந்திருக்காது என்கிறார்கள் மாங்காடு பகுதி மக்கள்.
அபிராமி போன்றோருக்கெல்லாம் இன்னும் தண்டனை தரப்படவில்லை.. ஒவ்வொரு தாமதமான தீர்ப்புதான், இதுபோன்ற சம்பவங்கள் மறுபடியும் மறுபடியும் நடப்பதற்கு காரணமாகி கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்த வேண்டியிருக்கிறது..!!
கமிஷனர் நம்பிக்கை: இந்த அமைந்தகரை சம்பவம், வழக்கமான கள்ளக்காதல் விவகாரம் போல இல்லாமல், சென்னை மாநகரில், மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. இதனிடையே, ஆவடி மாநகர காவல் ஆணையாளர் அருண், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அதில், "இரண்டரை வயது குழந்தை இறந்த விவகாரத்தில் கொலை வழக்காக மாற்றப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதாரங்கள் என்றுமே பொய்த்துப்போவதில்லை என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டானது, பொதுமக்கள் மத்தியில் பெருத்த நம்பிக்கையையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications