இவ்ளோ இருக்கா! ஆபரேஷன் தியேட்டரில் மட்டும் மருத்துவர்கள் பச்சை நிற உடை அணிவது ஏன் தெரியுமா? பின்னணி
சென்னை: மருத்துவமனையில் இருக்கும் ஆபரேஷன் அறைகளில் மருத்துவர்கள் பச்சை நிறத்தில் உடை அணிவது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதற்கு பின் முக்கிய காரணம் உள்ளது.
மருத்துவமனைகளில் எப்போதும் வெள்ளை உடையில் இருக்கும் மருத்துவர்கள் ஆபரேஷன் தியேட்டரில் மட்டும் ஏன் பச்சை அல்லது நீல உடை அணிகிறார்கள் என்று யோசித்து பார்த்து இருக்கிறார்களா. தூய்மையின், மருத்துவத்தின் நிறமான வெள்ளையை அணியாமல் இவர்கள் ஏன் பச்சையை அணிகிறார்கள் என்று நினைத்து இருக்கிறார்களா? அப்படி நினைத்து இருந்தால் உங்களுக்கான விளக்கம்தான் இந்த கட்டுரை..

உலகம் முழுக்க அலோபதி மருத்துவ முறைகளில் பல மாற்றங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. மற்ற மருத்துவ முறைகள் போல இல்லாமல் அலோபதி மருத்துவ முறை தொடர்ந்து அப்டேட் ஆக கூடியது.
அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப அலோபதி மருத்துவ முறைகளும் மாறும். அதனால்தான் அலோபதி மருத்துவ முறையில் தொடர்ந்து பல நவீனங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.
இந்த அலோபதி மருத்துவ முறையிவ் 1770 களில் எல்லாம் ஆபரேஷன் தியேட்டர்களில் தனியாக மாற்று உடை அணிய மாட்டார்கள். அதாவது என்ன உடை உடுத்தி இருக்கிறார்களோ அதை வைத்தே ஆபரேஷன் செய்வார்கள்.
அதன்பின் நிறைய மருத்துவ முறைகள் மாறி 1900களில் மாற்று உடைகள் அமலுக்கு வந்தன. அதேபோல் ஆபரேஷன் தியேட்டரில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் உடைகள் அமலுக்கு வந்தன.
அப்போதும் கூட மருத்துவமனைகளில் உடுத்தும் அதே வெள்ளை உடைகளைத்தான் ஆபரேஷன் தியேட்டர்களில் உடுத்தும் வழக்கம் இருந்தது.
இதன் பின்பு 1914ல்தான் சான் பிரான்சிசுகோவில் ஆப்ரேஷன் தியேட்டரில் பச்சை உடை அணியும் வழக்கம் வந்தது. அங்கே வந்த இந்த முறை தற்போது உலகம் முழுக்க அமலில் உள்ளது.

இப்போது வரை ஆபரேஷன் தியேட்டர்களில் பச்சை அல்லது நீல நிறம் அணியும் வழக்கம் அமலில் உள்ளது. மருத்துவர்கள் இப்படி இரண்டு வண்ண உடைகளை மட்டும் அணிவதற்கு பின் சில காரணங்கள் உள்ளன.
காரணங்கள்;
1. பச்சை உடைகள் கண்களுக்கு குளிர்ச்சியும் அளிக்கும். ரத்தத்தை பார்ப்பவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.
2. வெள்ளை உடையை அணியும் போது.. மேலே இருக்கும் ஆப்ரேஷன் விளக்கு காரணமாக கிளார் அடித்து கண்கள் கூசும். பணிகளை சரியாக செய்ய முடியாது. ஆனால் பச்சை அணிந்தால் இப்படி இருக்காது.
3. தொடர்ந்து ரத்தத்தை சிவப்பு நிறத்தில் பார்க்கும் மருத்துவர்கள் அப்படியே உடலில் உள்ள வெள்ளை உடையை பார்த்தால்.. மீண்டும் உடலை பார்க்கும் போது optical illusion ஏற்பட்டு நோயாளி உடல் பச்சை நிறத்தில் தெரியும். இதை தடுக்கவே மருத்துவர்களுக்கு பச்சை நிற உடையை கொடுக்கின்றனர்.
4. கீழே கிடக்கும் நோயாளிகளுக்கும் மருத்துவர்களின் வெள்ளை உடை காரணமாக கண்கள் கூச கூடாது.
5. சிவப்பிற்கு எதிர் நிறம்தான் பச்சை. இதனால் மருத்துவமனையில் ஆப்ரேஷன் அறையில் ரத்த சிவப்பை பார்க்கும் மருத்துவர்கள் பச்சையை பார்த்து ஆறுதல் அடைவார்கள். அவர்கள் கண்களுக்கும் ஓய்வு கிடைக்கும்.
மருத்துவமனையில் இருக்கும் ஆபரேஷன் அறைகளில் மருத்துவர்கள் பச்சை நிறத்தில் உடை அணிவதற்கு காரணம் இதுதான் என்று மருத்துவர் துறை வல்லுனர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications