வங்கிகளில் அடமானமாக தங்க நாணயத்தையோ தங்க பிஸ்கெட்டுகளையோ ஏன் வாங்குவது இல்லை தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கிகளில் அடமானமாக தங்க நாணயத்தை பெற்றுக் கொண்டு ஏன் கடன் கொடுப்பதில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு ரிசர்வ் வங்கி கூறியிருப்பது என்ன என்பதையும் பாருங்கள்.
இதுகுறித்து சமூகவலைதள பக்கத்தில் வெங்கடராமன் ராமசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: வங்கிகளில் ஏன் அடமானமாக கோல்ட் காயின் வாங்குவது இல்லை?

சில காரணங்களால் வங்கிகள் தங்க நாணயங்கள், தங்க கட்டிகள் போன்றவற்றை அடமானமாக ஏற்பதில்லை.
- தங்க நாணயங்களின் சுத்தத்தை கண்டுபிடிப்பது கடினம்.
- தங்க நாணயங்களின் எடை மற்றும் கொள்ளவுக்கான விகுதியினை(Weight to volume ratio), கண்டுபிடிப்பது கடினம். ஏமாறுவதற்கு வாய்ப்புண்டு.
- தங்க நாணயங்கள் கருப்பு பணத்தினை பதுக்குவதற்கு ஒரு முகாந்திரமாக உள்ளன.
- தங்க நாணயங்களின் மீது, தங்க நகைகள் போன்று மக்களுக்கு மனோதத்துவ ரீதியாக(sentimental value) மீட்கும் எண்ணம் குறைவு. எனவே, நகைக் கடன் அடைக்கப்படாமல் போக வாய்ப்புண்டு.
- தங்கத்தினை ஒரு சரக்காகக் கொண்டு, அதன் மீது சூதாட்டம் போன்றவை நடைபெறுவதால், தங்கக் கடன் பொதுவாக, சில்லறை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தங்க நகையினை அவர்கள் அடமானம் வைத்தே கடன் பெற வேண்டும்.
- தங்கத்தினை அளவாகக் கொண்ட(Bullion) தங்க நாணயங்கள், தங்கக்கட்டி போன்றவற்றில் கடன் பெறுவதை பாரத ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது.
- நாட்டில் தங்கம் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பிரச்சனையாக உள்ளது. தங்கத்தினை மக்கள் நாணயமாக வாங்குவதை குறைப்பதற்காக, தங்க நகைகளுக்கு மட்டுமே, தங்க நகைக் கடன் கொடுக்கப்படுகிறது. எனவே, ஏற்கனவே நாட்டில் இருக்கும் தங்கம் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
ஆனால், பாரத ரிசர்வ் வங்கி விதிகளின் படி 50 கிராம் வரை வங்கிகள் விற்ற தங்க நாணயங்களுக்கு தங்க நகைக் கடன் வழங்கலாம். அவற்றிலும் கூட, எடை சற்றுக் கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளபடியால், 50 கிராமுக்கு குறைவாக உள்ள தங்க நாணயங்களுக்கு மட்டுமே அடமானக் கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications