இதுதான் சம்பவம்! பாகிஸ்தானை சோதனை கூட எலியாக்கிய இந்தியா! பிரம்மோஸ்ஸை ஏவியது ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா சமீபத்தில் பாகிஸ்தான் உடன் நடந்த மோதலில் பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தியது. இதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் விமானப்படை தளங்களை தகர்க்க இந்தியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தியதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிப்படுத்தினார். குஜராத்தின் அகமதாபாத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் விமானப்படை வீழ்ந்துவிட்டது.. சீனா வழங்கிய வான் பாதுகாப்பு அமைப்பு பயனற்றதாக இருந்தது என்று கூறினார்.

நமது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை அமைப்பு கைகொடுத்தது. பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை அழிக்க இவை செயல்பட்டதால் பாகிஸ்தான் வீழ்ந்துவிட்டது. சீனாவிலிருந்து கடனுக்கு வாங்கப்பட்ட அதன் சொந்த வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானுக்கு கைகொடுக்கவில்லை.

நமது விமானப்படை துல்லியமான தாக்குதல்களை நடத்தியது மற்றும் பாகிஸ்தானில் பல இடங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பிரம்மோஸ் ஏவுகணைகளை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. சீனாவின் தடுப்பு அமைப்புகளை பயன்படுத்தி பாகிஸ்தானால் இந்திய ஏவுகணைகளை தடுக்க முடியவில்லை, என்று அமித் ஷா குறிப்பிட்டார்.

Do you know why did India use BrahMos Missiles against Pakistan

இந்தியா ஏவுகணை

இதன் மூலம் இந்தியா சமீபத்தில் பாகிஸ்தான் உடன் நடந்த மோதலில் பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது. இதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

1. இந்தியா இதுவரை பிரம்மோஸ் ஏவுகணையை பல முறை சோதனை செய்துள்ளது. ஆனால் நேரடியாக போர் சமயத்தில் சோதனை செய்யவில்லை.

2. ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இருக்கும் சமயங்களில் பிரம்மோஸ் எப்படி செயல்படுகிறது என்று சோதனை செய்யப்படவில்லை.

3. எதிரி நாட்டு ரேடார்களில் பிரம்மோஸ் எப்படி சிக்குகிறது என்பது போன்ற ரியல் டைம் சோதனைகள் செய்யப்படவில்லை.

4. இதை எல்லாம் பாகிஸ்தான் மீதான தாக்குதல் மூலம் இந்தியா சோதனை செய்துள்ளது என்று இந்திய ராணுவ தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது பாகிஸ்தானை சோதனை கூட எலியாக பயன்படுத்தி இந்தியா தனது பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு விரைவில் பிரம்மோஸ் லைட் ஏவுகணைகள் கொண்டு வரப்பட உள்ளன. இவை எடை குறைவான ஏவுகணைகள். விமானத்தில் வைத்து தாக்கும் வகையிலான ஏவுகணைகள் ஆகும். MiG-29, Mirage 2000 போன்ற விமானங்களில் வைத்து ஏவக்கூடிய வகையில் விரைவில் பிரம்மோஸ் லைட் ஏவுகணைகள் கொண்டு வரப்பட உள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது.

பிரம்மோஸ் ஏன் அதிக சக்தி வாய்ந்தது?

அதிக வேகம்: பிரம்மோஸ் மாக் 2.8 முதல் 3 வேகத்தில் பயணிக்க கூடியது (ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு). இது சூப்பர்சோனிக் ஏவுகணையாகும். இந்த வேகம் காரணமாக எதிரி நாடுகள் அதை சரியான நேரத்தில் கண்டறிந்து நிறுத்துவது மிகவும் கடினம்.

உயர் துல்லியம்: தாக்கப்பட்ட வேண்டிய இலக்கு நகர்ந்தாலும், பிரம்மோஸ் அதன் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும். இது எதிரி கப்பல்கள், பதுங்கு குழிகள் மற்றும் இராணுவ தளங்கள் உட்பட தரை மற்றும் கடல் இலக்குகளை எளிதாக தாக்க முடியும்.

நீண்ட தூரம்: முதலில் இந்த ஏவுகணை 290 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. ஆனால் இப்போது, ​​புதிய மாற்றங்கள் மூலம் 400 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணிக்க முடியும். சில மேம்படுத்தப்பட்ட அப்டேட் மாடல்கள் 500 கிலோமீட்டருக்கு அப்பால் செல்லும் திறன் கொண்டது..

எங்கிருந்து தாக்கும்:

நிலம் (மொபைல் லாஞ்சர்கள்)

ஏர் (Su-30MKI போன்ற போர் விமானங்கள்)

கடல் (போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள்)

இந்த மும்முனை தாக்குதல் காரணமாக.. போர் மோதலின் போது ஏவுகணை எங்கிருந்து வரும் என்று கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+