அமித் ஷா போட்ட போடு.. எடப்பாடி முகத்தை பார்த்தீங்களா..அண்ணாமலை பதவிக்கு சிக்கல்..பற்ற வைத்த பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி எதற்காக டெல்லி சென்றார் என்று கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா திமுக, அமித்ஷா திமுகவாக மாறி கொண்டிருக்கிறது, எடப்பாடி பழனிசாமியால் அண்ணாமலை பதவிக்குதான் ஆபத்து என்று கேசி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார்.

டெல்லி நார்த் பிளாக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இது ஒரு மாியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றும் அமித் ஷாவிடம் அரசியல் ஏதும் பேசவில்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால், இந்த நிகழ்வு குறித்து மூத்த தலைவர் கேசி பழனிசாமி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

 பாயும் அம்பு

பாயும் அம்பு

"கர்நாடகாவில், லோக் ஆயுக்தாவில் எடப்பாடியின் மிக நெருங்கிய உறவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. நெடுஞ்சாலை துறையில் 4800 கோடி ரூபாய் வழக்கும் உள்ளது.. வேலுமணியின் மீதும் 3, 4, ஊழல் வழக்குகள் உள்ளன.. சிபிஐ, வருமானவரித்துறை இது தொடர்பான நெருக்கடிகள் காரணமாகவே பாஜக மேலிடத்தில் சரணாகதி அடைந்துள்ளனர்.. சில நாட்களுக்கு முன்பு, பாஜக மேலிடத்தை எடப்பாடி எதிர்க்க துணிந்துவிட்டார்.. மோடியா? எடப்பாடியா? என்ற கேள்வியை தன்னுடைய ஆளுமையால் உருவாக்கி விட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

ஹேப்பி

ஹேப்பி

இப்போ என்ன ஆனது.. பாஜகவிடம் தஞ்சம் அடைந்துவிட்டார்.. ஓபிஎஸ்ஸும் சரி, எடப்பாடியும் சரி, சசிகலாவும்சரி மாறி மாறி அதிமுகவை பாஜகவுக்கு அடிமைப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள்.. அதிமுக சுதந்திரமாக இயங்கப்படவில்லை.. செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி முகத்தில் மகிழ்ச்சியே இல்லையே.. வாட்டமாக இருந்தது.. நொந்து போய் இருந்தார்.. இதில் இருந்தே விளைவுகளை புரிந்து கொள்ளலாம்

பழனிசாமி

பழனிசாமி

இதுவே ஒரு புத்திசாலித்தனமான அரசியல்வாதியாக இருந்திருந்தால், தம்பிதுரையை முன்னாடியே அனுப்பி வைத்து, பேச்சுவார்த்தைகளை நடத்தி, ஒரு ஒப்புதலுக்கு வந்த பிறகு எடப்பாடி டெல்லி சென்றிருக்க வேண்டும். ஆனால், இவர் என்னமோ டெல்லியில் இறங்கினதுமே ராஜமரியாதை தருவார்கள், அமித்ஷா தம்மை பார்த்ததுமே அஞ்சி நடுங்கிடுவார் என்று எதிர்பார்த்து கொண்டே போனதால், ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. எடப்பாடி டெல்லி சென்றதற்கு காரணமே, "நாங்கள் பாஜகவுக்கு அடிமையாக இருக்க எப்போதும் தயார்.. ஆனால், உட்கட்சி போட்டியாளர்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம், சசிகலாவுக்கு வந்த கதி தனக்கும் வந்துவிடக்கூடாது, வழக்குகள் எதுவும் தன்னை நெருக்கிவிட கூடாது, காப்பாற்றுங்கள்" என்பதுதான்.

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

"அதிமுக என்பது ஒரு திராவிட கட்சியாகத்தான் திகழும், திமுகவுக்கு ஒரு மாற்றாக திகழ்ந்து, தமிழக நலனை பாதுகாக்கும்" என்று அன்றே எம்ஜிஆர் சட்டமன்றத்தில் முழங்கினார்.. அதுமட்டுமல்ல, கொடி பிடிக்கும் தொண்டன்தான் அனைத்தையும் முடிவெடுப்பான்.. தொண்டனின் விருப்பப்படித்தான் இந்த இயக்கம் வழிநடத்தப்படும் என்றும் அவர் ஆசைப்பட்டார்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவின் கொள்கைகளை அறிந்து, அதற்கேற்றபடி அண்ணாதிமுகவை, "அமித்ஷா திமுகவாக" மாற்றி கொண்டிருக்கிறார்..

ஏஜென்ஸிகள்

ஏஜென்ஸிகள்

அமித்ஷா ஏற்கனவே அதிமுகவில் பிளவு கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.. அதனால், பிளவு இல்லாமல் கட்சியை நடத்தி கொண்டு போகும்படி, பாஜக தரப்பில் முதலில் அன்பாக சொல்லி பார்ப்பார்கள்.. அடுத்து, சில ஏஜென்சிகள் மூலமாக வந்து சொல்வார்கள்.. அதற்கு பிறகு மேல்நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.. இன்றைக்கு அதிமுக சிதற காரணமே பாஜகதான்.. இரட்டை தலைமையை புகுத்தி, அதன்மூலம் கட்சியை சிதைத்து, பாஜக வளர நினைக்கிறது.. இந்துத்துவா என்று பாஜகவும், திராவிடம் என்று திமுகவும் எதிரெதிர் அரசியல் செய்யும்நிலையில், அதிமுகவின் வாக்கு வங்கியை பாஜக அபகரிக்க நினைக்கிறது..

 அமித் ஷா போலீஸா?

அமித் ஷா போலீஸா?

திமுக அரசு மீது புகார்களை அமித்ஷாவிடம் தந்ததாக சொல்கிறார்கள்.. அப்படி ஒரு அக்கறை இருக்குமானால், திமுகவை கண்டித்து தமிழகமெங்கும் விடாமல் போராட்டம் நடத்தி இருக்கலாமே.. உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்திருக்கலாமே.. பொதுநல வழக்கு போடலாமே.. இந்த அரசை மக்கள் மத்தியில் தோலுரித்து காட்டலாமே.. அமித்ஷாகிட்ட போய் சொல்வதால் என்ன நடக்கும்? அமித்ஷா என்ன போலீஸ்காரரா? முதலில் ஏதாவது ஒரு இடத்தில் மத்திய அரசை எதிர்த்தும், தமிழக நலனுக்காகவும் எடப்பாடி இதுவரை போராடியிருக்கிறாரா? இவர் காவிரிக்காக போராடவில்லை.. கான்ட்ராக்ட் வழக்கில் இருந்து தன்னை காத்துக் கொள்ளவே போராடிக் கொண்டிருக்கிறார்..

குட்புக்

குட்புக்

பாஜகவின் குட்புக்கில் எடப்பாடி பழனிசாமி வருவதைவிட, அதிமுகவின் தொண்டர்களின் குட்புக்கில் இடம்பெற வேண்டும்.. ஒருவேளை பாஜகவின் குட்புக்கில் எடப்பாடி இடம்பெற்றால், அண்ணாமலை பதவிக்கு ஆபத்து வரலாம்.. எடப்பாடியும் பாஜகவில் சேர்ந்து கொள்ளலாம்.. பாஜகவை பொறுத்தவரை, சசிகலாவை போலவே, ஓபிஎஸ், எடப்பாடியை வழக்குகளில் தண்டிக்க நினைக்கிறது.. அதிமுக வாக்கு வங்கியை இந்துத்துவா என்ற பெயரிலும், திராவிடம் என்ற பெயரில் திமுகவும் அபகரிக்க நினைக்கிறார்கள்..

 ஆஹா ஓஹோ

ஆஹா ஓஹோ

திமுக + பாஜக இருவருமே தங்கள் கட்சியை வளர்க்க நினைக்கிறார்கள்.. ஆஹா ஓஹோவென்று திமுக ஆட்சி நடத்தவில்லை.. இவர்கள் மத்தியிலும் ஆட்சிக்கு வர முடியாது.. ஆனால், மத்தியில் 3வது எதிர்க்கட்சியாக ஒரு முக்கிய இடத்துக்கு வர முடியும்.. அதனால் அதிமுக தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், பாஜகவையும் எதிர்க்க வேண்டும், திமுகவையும் எதிர்க்க வேண்டும்.. சாதி, மதத்துக்கு அப்பாற்றபட்ட, லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஒற்றை தலைமை அதிமுகவுக்கு வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+