சென்னை கிண்டி கத்திபாரா முதல் சென்ட்ரல் வரை.. இதை கவனிச்சிருக்கீங்களா.. ஏன் இதுவரை நடக்கல?
சென்னை: யோசித்து பார்த்திருக்கிறீர்களா, மேம்பாலம் நகரம் என்று அழைக்கப்படும் சென்னையில் ஜெமினி பிரிட்ஜ்க்கு அப்புறம் கத்திபாரா வரை எங்குமே மேம்பாலம் இல்லை.. அதற்கு முன்பும் சென்ட்ரல் வரை எங்குமே மேம்பாலம் இல்லை.. ஆனால் இதுதான் சென்னையின் இதயப்பகுதி. மோசமான போக்குவரத்து நெரிசல் இருந்தும் பலவருடங்கள் அண்ணா சாலையில் மேம்பாலம் வரவே இல்லை.
சென்னையில் உள்ள அண்ணா சாலை ஆங்கிலேயர்கள் காலத்தில் மௌண்ட் ரோடு என்று அழைக்கப்பட்டது. 1970களில் கட்டப்பட்ட ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் ஒன்று தான் அண்ணா சாலையில் உள்ள மேம்பாலம். சென்னையின் இதயப்பகுதியான அண்ணா சாலையில் தான் அத்தனை பேருந்துகளும் ஒரு காலத்தில் ஓடிக்கொண்டிருந்தன. பாரிஸ் கார்னர் தான் சென்னையில் பேருந்து நிலையம். கிண்டி தான் சென்னையில் கடைசி பகுதி. அதன் பிறகு புறநகர் பகுதியாக இருந்த மீனம்பாக்கத்தில் விமான நிலையத்தை அமைத்தார்கள்.

ஆனால் இன்று யாராவது சென்னை கிண்டி தான் கடைசிப்பகுதி என்று சொன்னால் நம்புவார்களா.. சென்னையில் மையப்பகுதியாக உள்ளது. சரி விஷயத்திற்கு வரும். சென்னையில் பாரிஸ் கார்னர் தொடங்கி கிண்டி கத்திபாரா வரை, அண்ணா மேம்பாலம், ரயில் மேம்பாலம் மற்றும் ஆற்று மேம்பாலத்தை தவிர்த்து வேறு சாலைக்கான மேம்பாலத்தை பார்த்திருக்கிறீர்களா... கண்டிப்பாக இருக்காது.
சென்னையின் முக்கிய பகுதியான அண்ணா சாலையை விடவா வடபழனி, தியாகராய நகர், ராயப்பேட்டை, வேளச்சேரி உள்பட சென்னையின் உள்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்திருக்கும். நிச்சயம் இல்லை. ஆனால் காலப்போக்கில் தான் வடபழனி, தியாகராய நகர், ராயப்பேட்டை, வேளச்சேரி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதாவது நகரம் விரிவடைந்த பின்னரே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டது.
ஆனால் நகரம் விரிவடைந்த போதிலும்,நகரின் இதயப்பகுதியான அண்ணா சாலையில் கத்திப்பாரவை தாண்டினால் அண்ணா மேம்பாலம் மட்டுமே இருக்கும். பாரிஸ் கார்னர் வரை சாலைகளில் மேம்பாலமே இருக்காது. குறிப்பாக சொல்வது என்றால் திருவல்லிக்கேணி வாலா சந்திப்பில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை எங்குமே மேம்பாலம் அமைக்கப்படவில்லை. இதேபோல், அண்ணா மேம்பாலத்திற்கு அடுத்த உள்ள மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள தேனாம்பேட்டை சிக்னல், நந்தனம், சிஐடி நகர் சிக்னலில் மேம்பாலம் அமைக்கப்படவில்லை. ஏன் சைதாப்பேட்டை வரைக்குமே மேம்பாலம் அவசியம் என்று அரசுக்கு எப்போதே தெரியும். ஆனால் மேம்பாலம் அமைக்க அரசுஇப்போது தான் முடிவெடுத்துள்ளது.
சரி ஏன், இத்தனை காலம் அண்ணா சாலையில் குறிப்பாக தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை மேம்பாலம் அமைக்கப்படவில்லை என்று கேட்டால், அதற்கு காரணம் மிகவும் சிக்கலான பகுதி. இங்கு மேம்பாலம் அமைக்கும் சமயத்தில் போக்குவரத்து நெரிசல் மோசமாக இருக்கும் என்று அரசுகள் நினைத்திருக்கலாம். இருந்திருக்கலாம். இன்னொரு காரணம் மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிடும் சமயத்தில் மெட்ரோ ரயில் பணிகள் கடந்த 10 வருடங்களாக நடந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.
தற்போது மெட்ரோ ரயில் பணிகள் முடிந்துவிட்டதால் மேம்பாலம் அமையப்போவது உறுதியாகி உள்ளது. இந்த மேம்பாலங்கள் அமைக்கப்பட்டால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிச்ல் பெரிய அளவில் குறையும். அதேநேரம் இந்த மேம்பாலம் அமைக்கப்படும் பணிகள் தொடங்கும் போது, கண்டிப்பாக போக்குவரத்து நெரிசலை சென்னை அதிக அளவில் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான மாற்றுப்பாதைகளை சரியாக பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications