மாஸ்டர் எடப்பாடி.. "பாஜக வெளியே + 2 கட்சி உள்ளே".. திருமாவளவன் இருக்காரே.. அப்ப திமுக ஓட்டு காலி.. அட

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. பாஜகவுடனான உறவை துண்டித்த நிலையில், அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன என்கிற எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன. அந்தவகையில், நமக்கு சில பிரத்யேகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

அதிமுக பாஜக கூட்டணி இடையே நடந்து கொண்டிருப்பது உண்மையா? அல்லது அரசியல் ஸ்டண்ட்டா? என்று குழம்பி போயிருக்கிறார்கள் தொண்டர்கள்.. மற்றொருபக்கம் 2 கட்சியிலுமே இந்த முடிவை வரவேற்று பட்டாசுவெடித்து கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

Do you know with whom ADMK Edapadi palanisamy form an alliance and What are the PMK, DMDKs plan

பாஜக - அதிமுக: எனினும், பாஜக - அதிமுக இருவருமே சேர வேண்டும் என்பதுதான், கூட்டணி கட்சிகளின் விருப்பமாகவும் இருக்கிறதாம்.,. அந்தவகையில், ஜிகே வாசன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றோர் மேலிட பாஜகவிடம் சமரசம் பேசிவருவதாகவும் தெரிகிறது.

இப்படிப்பட்ட சூழலில், எதிர்பார்த்தபடியே, இந்த விவகாரம் தொடர்பாக, பாஜகவின் மேலிட தலைவர் ஒருவர், அதிமுகவின் மாஜி அமைச்சர் ஒருவரை போனில் தொடர்பு கொண்டு பேசினாராம்.. அப்போது, "எடப்பாடி பழனிசாமியிடம் பேசுங்கள், மனக்கசப்புகளை மறந்து கூட்டணி அமைத்து செயல்படலாம்.. தேவைப்பட்டால் நானே சென்னைக்கு வருகிறேன், நேரில் உட்கார்ந்து பேசி கொள்ளலாம்" என்றாராம்..

டெல்லி மேலிட தலைவரின் பேச்சை, அப்படியே எடப்பாடி பழனிசாமியிடம் கொண்டு சென்றாராம் அந்த மாஜி, சென்றாராம்.. ஆனால், எடப்பாடியோ, பாஜகவுடன் இனி கூட்டணியே வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று திடமாக சொல்லிவிட்டாராம்.. எடப்பாடி இப்படி சொன்னபிறகுதான், பாஜகவுடன் எப்போதுமே கூட்டணி இல்லை என்று மூத்த தலைவர் கேபி முனுசாமி நேற்று பேட்டி தந்தாராம்..

க்ளைமேக்ஸ்: பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதனால் தங்களுக்கு துளியும் லாபமில்லை, சிறுபான்மையின ஓட்டுக்களை இழந்ததுதான் மிச்சம் என்பதால், இப்போது எடுத்துள்ள முடிவில் உறுதியாக இருக்கிறதாம் அதிமுக.. அத்துடன், பாமக, தேமுதிக கட்சிகளுடன் மேலும் கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்கவும் தயாராக போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் நம்முடைய "ஒன் இந்தியாவில்", பாமக மற்றும் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா? என்பது குறித்து ஸ்பெஷல் கட்டுரைகளை வெளியிட்டிருந்தோம்.

அதாவது, சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். அப்போது 2 விஷயங்களை அமித்ஷா எடப்பாடியிடம் வலியுறுத்தினாராம்..

"எம்பி தேர்தலில், நீங்கள் 20 இடங்களில் போட்டியிடுங்கள், எங்களுக்கு 20 தொகுதிகளை கொடுத்து விடுங்கள்.. இந்த இடங்களில் நாங்களும் போட்டியிட்டுக்கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்து விடுகிறோம்" என்று கேட்கப்பட்டதாம். இதற்கு எடப்பாடி ஓகே சொல்லவில்லையாம்.

அதிமுக பாஜக கூட்டணி: அதேபோல, அதிமுக-பாஜக கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கட்சிகளை அப்படியே இந்த முறையும், மறுபடியும் கூட்டணியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தினாராம்.. இதில் தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதற்கு மட்டும் எடப்பாடி ஓகே சொன்னாராம்.. ஆக, இப்போது பாஜகவுடன் கூட்டணி இல்லையென்றாலும் தேமுதிகவை நிச்சயம் அதிமுக சேர்த்து கொள்ளும் என்று தெரிகிறது.

அதேபோல, பாமகவுடன் கூட்டணி வைப்பதிலும் எடப்பாடிக்கு தயக்கம் உள்ளதாம்.. இது தொடர்பாக அதிமுக சீனியர் நிர்வாகிகளிடம் எடப்பாடி பேசும்போது, "இனி பாமகவை சேர்த்துக் கொள்ளக் கூடாது. 2019-ல் தேர்தலில் பாமகவால் நமக்கு எந்த பலனும் இல்லை. சட்டமன்ற தேர்தலில் 10 .5 சதவீதம் + கோடிக்கணக்கான பணமும் கொடுத்தோம். ஆனால், வட மாவட்டங்களில் அதிமுகவிற்கு பெரிய அளவில் வெற்றியை பெற்று தரவில்லை பாமக.. அதிமுகவின் 3 அமைச்சர்களுமே தோல்வி அடைந்தார்கள்.

ஜி.கே.மணி வெற்றிபெற்றது நம்முடைய கூட்டணியால்தான். விழுப்புரம் மாவட்டத்தில் மைலம் தொகுதியில் சில, பல, கரணங்களால்.
பாமக வெற்றிபெற்றது. பாமக நம்மளுடன் இருந்தால், பட்டியலின மக்களும், பிற சமூகத்தினரும் வாக்கு அளிக்கவில்லை. பாமகவிற்கான கதவை திமுகவும் மூடிவிட்டது. அதனால், வன்னியர் வாக்கு வங்கி, திமுக பக்கம் செல்ல வாய்ப்பில்லை.

திருமாவளவன்: திமுக கூட்டணியில் திருமாவளவன் இருப்பதாலும் வன்னியர் சமூக ஓட்டு திமுகவுக்கு கிடைக்கப்போவதில்லை. அதனால் பாமக மீது கடுப்பில் இருக்கும் வன்னியர்கள், 10.5. உள் இடஒதுக்கீட்டையும் நாம் கொடுத்தோம் என்ற அடிப்படையில், பாமக இல்லாமலேயே, பாமக வாக்குகள் அதிமுகவுக்கு வரும்" என்றாராம் எடப்பாடி பழனிசாமி.

இப்போது விஷயம் என்னவென்றால், பாஜகவுடனான கூட்டணி முறிவு தற்போது ஏற்பட்டுள்ளதால், பாமகவின் தயவும் அதிமுகவுக்கு தேவையாக இருப்பதாக தெரிகிறது.

பாமக அதிமுக: இன்னும் சொல்லப்போனால், பாமக இருக்கும் தைரியத்தினால்தான், பாஜக உறவை அதிமுக முறித்து கொண்டதாகவும் சொல்கிறார்கள்.. அந்தவகையில் விரைவில் பாமகவுடன் கூட்டணி பேச்சை நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. நாளுக்கு நாள் அரசியல் களம் மாறி வருவருதால், அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+