"தொட்டு பாருங்களேன்".. இது திமுக இல்லை, பாமக.. சீமான் மீது பாயும் மாஜி.. என்ன நடக்கிறது தி.மலையில்?

பாமகவின் மாஜி எம்எல்ஏ கணேஷ்குமார் சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சொல்லித்தான் பாருங்களேன் சீமான் அவர்களே, தயவுசெய்து பாமகவை திமுகவினர் என்று நினைத்துவிட்டார்கள், தலித் மக்கள் பாமகவுக்கு ஒரு ஓட்டு கூட போட்டு விடக்கூடாது என்பதற்காக சீமான் இப்படி பேசக்கூடாது" என்று பாமக மாஜி எம்எல்ஏ கணேஷ்குமார், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை எச்சரித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தில், ராஜேந்திர சோழன் பிறந்த தினத்தையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேந்திர சோழன் பெருவிழா நடந்தது.

இந்த விழாவை நாம் தமிழர் கட்சி நடத்தியது.. ஏராளமாக திரண்டிருந்த தொண்டர்கள் முன்பு, சீமான் உரையாற்றினார்.

அவர் மேடையில் உரையாற்றி கொண்டிருந்தபோதே, பாமக - நாம் தமிழர் தொண்டர்களிடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது,.. அதேபோல, நாம் தமிழர் கட்சியின் கொடியை பிரம்மதேசத்தில் ஏற்ற அக்கட்சியினர் முயன்றபோது, அதே கிராமத்தை சேர்ந்த பாமகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாக தெரிகிறது..

சீண்டல்

சீண்டல்

அதுமட்டுமல்ல, ராஜேந்திர சோழன் பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது பறை அடிக்க கூடாது என்று பாமகவினர் தடுப்பதாகவும் சீமான் மேடையிலேயே பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். "ஒரு சீட்டுக்கும் 2 சீட்டுக்கும் கூட்டணிக்காக அலையும் நீங்கள், எங்களிடம் மோதி பார்க்கிறீர்களா? என்றும் காட்டமாக விமர்சித்தார்.. இப்படி பாமக - நாம் தமிழர் இடையே கடந்த சில தினங்களாகவே மோதல்கள் வெடித்து வருகின்றன.

 பறை அடிக்காதீர்

பறை அடிக்காதீர்

இந்நிலையில் பிரம்மதேசம் கிராமத்தில், பாமக முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான கணேஷ்குமார் தலைமையில் கிளைக் கூட்டம் நடந்தது.. அப்போது கணேஷ் குமார் பேசும்போது சீமானை கடுமையாக விமர்சித்தார்.. அவர் பேசியதாவது: "அந்த நிகழ்ச்சியில் பறை அடிக்க கூடாது என்று பாமகவினர் தடுத்ததாக சீமான் சொல்கிறார்.. பாமகவினரே பறை இசை குழுவை நடத்துகிறோம்.. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பாமகவிற்கு வாக்களித்து விடக்கூடாது என்பதற்காக சீமான் இப்படி பேசுகிறார்.. சாதி ஒழிப்பை பற்றி பேசுகிற இவர் செயலில் என்ன செய்திருக்கிறார்?

வலிமை

வலிமை

தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக டாக்டர் ராமதாஸைவிட அதிகம் என்ன செய்துவிட்டார்? நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? சீமான் பதில் சொல்லுங்கள்.. மைக் கிடைக்கிறது என்பதற்காக சீமான் என்ன வேண்டுமானாலும் பேசக்கூடாது.. அதை செயலில் நிரூபித்து காட்ட வேண்டும்.. தலித் மக்கள் பாமகவுக்கு ஒரு ஓட்டு கூட போட்டு விடக்கூடாது என்பதற்காக சீமான் இப்படி பேசக்கூடாது.. எங்கள் கட்சியின் வலிமை என்ன என்று எங்களுக்கு தெரியும்.. வேண்டுமென்றால் சீமான், நீங்கள் வந்து எங்கள் கட்சியில் சேருங்கள்.. தனியாக நிற்கலாம் என்று சொல்கிறீர்களா, சரி வந்து பாருங்கள் சீமான்..

தம்பிகள்

தம்பிகள்

உங்களுடைய பேச்சை எல்லாம் சினிமா பாணியில் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியிடம் காட்ட வேண்டாம். முதலில் உங்களுடன் இருப்பவர்களின் வாயை அடக்குங்கள், தோலை உரிப்போம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.. அப்பறம், பாமகவினர் எங்காவது "கை" வைத்துவிட்டால், "ஐயோ இவர்கள் வன்முறையாளர்கள், அடிக்கிறார்கள்" என்று சொன்னால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது.. இங்கு நடந்த பிரச்சனைக்கு சென்னையில் கூட்டம் போட்டு பேசும் சீமான், நான் மட்டும் தம்பிகளிடம் சொல்லியிருந்தால் பிணமாகத்தான் போயிருப்பார்கள் என்று பேசுகிறார்.

 தொட்டுப்பாருங்கள்

தொட்டுப்பாருங்கள்

சரி, சொல்லித்தான் பாருங்களேன் சீமான் அவர்களே.. தயவுசெய்து பாமகவை திமுகவினர் என்று நினைத்துவிட்டார்கள்.. தைரியமிருந்தால் உங்கள் தம்பிகளை அனுப்பி பாருங்கள்.. தூக்கிட்டு வா என்று சொன்னீர்களே? யாரையாவது தொட்டுப்பார்க்க வேண்டியதுதானே? அப்படி தொட்டு பார்த்திருந்தால் இன்று பாமக யார் என்று தெரிந்திருக்கும்" என்று ஆவேசமாக கூறியிருந்தார்.. கடந்த 2 நாட்களாக, சீமான் பேச்சுக்களையும், கணேஷ்குமார் பேச்சுக்களையும், இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் சோஷியல் மீடியாவில் மாறி மாறி பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+