மறக்க முடியுமா வேலூர் கார்த்தியாயினியை? பாஜக திடீர்ன்னு வேட்பாளரா அறிவிச்சிட்டாங்களே! ஹைலைட்டே இதான்
சென்னை; தமிழ்நாட்டில் பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் சிதம்பரம் தொகுதிக்கு பி கார்த்தியாயினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதே தொகுதியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமா தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இது தேசிய அளவில் பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் ஆகும்.
தென்சென்னை - தமிழிசை
மத்திய சென்னை - வினோஜ் செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
கிருஷ்ணகிரி - நரசிம்மன்
நீலகிரி - எல்.முருகன்
கோவை - அண்ணாமலை
பெரம்பலூர் - பாரிவேந்தர் (இ.ஜ.க)_
நெல்லை- நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்

இன்று மீதம் உள்ள தொகுதிகளுக்கான பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்
1) திருவள்ளூர் - பாலகணபதி
2) வட சென்னை - பால் கனகராஜ்
3) திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
4) நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்
5) திருப்பூர் - முருகானந்தம்
6) பொள்ளாச்சி - வசந்தராஜன்
7) கரூர் - செந்தில்நாதன்
8) சிதம்பரம் - கார்த்தியாயினி
9) நாகை - எஸ்.ஜி.எம்.ரமேஷ்
10) தஞ்சை - எம்.முருகானந்தம்
11) சிவகங்கை - தேவநாதன் யாதவ்
12) மதுரை - ராம சீனிவாசன்
13) விருதுநகர் - ராதிகா சரத்குமார்
14) தென்காசி - ஜான் பாண்டியன்
15) புதுச்சேரி - நமச்சிவாயம்
பி கார்த்தியாயினி: தமிழ்நாட்டில் பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் சிதம்பரம் தொகுதிக்கு பி கார்த்தியாயினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான கார்த்தியாயினி கடந்த 2017ல்தான் பாஜகவில் போய் இணைந்தார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இவர் செயல்பட்ட விதத்தை வேலூர் மக்கள் இன்னும் மறக்கவில்லை. அப்படி ஒரு அதிரடி அரசியலை செய்தவர் கார்த்தியாயினி. இவரது அதிமுக அரசியலில் மறக்க முடியாத பாடத்தை சென்னை உயர்நீதிமன்றம் கற்றுக் கொடுத்தது நீதிபதி குன்ஹா தீர்ப்பு விவகாரத்தில்தான். அப்போது இவர் செயல்பட்ட விதம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.
வேலூர் மாநகராட்சி மேயராக 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் கார்த்தியாயினி. திமுக வேட்பாளர் ராஜேஸ்வரியை கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சாதனை படைத்தார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் கார்த்தியாயனி.
தேசிய அளவில் அப்போது சர்ச்சையானவர் இவர். பொதுவாக நீதிபதிகளை விமர்சிக்க கூடாது என்பதை மறந்து மேயர் பொறுப்பில் இருந்தும் கூட, ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்க அதிமுகவினர் நடத்திய ஜால்ரா போராட்டங்களிலேயே மிகவும் ஷாக்கான விஷயம் இதுதான். கார்த்தியாயினி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர். அவரது உருவபொம்மையையும் எரித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேயரின் செயல் சட்டத்திற்குப் புறம்பான செயல். நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தன. சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும், அதை பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்டிய மேயர் கார்த்தியாயினி தீர்மானம் போட்டதற்காகவும், கொடும்பாவி கொளுத்தியதற்காகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.
அதன்பின் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக பாசம் எல்லாம் போய் பாஜகவில் ஐக்கியம் ஆனவர் கார்த்தியாயினி. இப்பொது சிதம்பரம் தொகுதிக்கு பி கார்த்தியாயினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதே தொகுதியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமா தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார்
-
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல -
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications