தாம்பரம் தடுமாறுது.. அதிக ஆவணங்கள் பதிவு! கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் எங்கே? பதிவுதுறைக்கு பெயிரா நச்
சென்னை: பதிவுத் துறையில் நிலவுகின்ற பிரச்சனைகளையும், சூழலையும் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு பதிவுத் துறைக்கான தலைவரை விரைந்து நியமிக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக முதல்வருக்கு பெயிரா வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில், பொதுமக்கள் நலன்கருதி, மற்றொரு கோரிக்கையை பதிவுத்துறைக்கு விடுத்திருக்கிறது. அது என்ன?
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில், தமிழக பதிவுத்துறைக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவித்திருப்பதாவது:

அதிகமான டோக்கன்கள்
"தமிழகத்தின் சார் பதிவாளர் அலுவலகங்களிலேயே, அதிகமான ஆவணங்கள் பதிவாகக்கூடியது செங்கல்பட்டு பதிவு மண்டலம் மிகமுக்கியமானதாகும்.. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகள் சார் பதிவாளர் எல்லைக்குட்பட்ட, தாம்பரம் பதிவு மாவட்டத்திற்குட்பட்ட கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலமாகும்.
இங்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 200 டோக்கன்கள் பதிவு செய்யப்படுகிறது. அந்தவகையில் 80 சதவீதம் பத்திரப்பதிவு நடக்கும்.. சுபமுகூர்த்த தினங்களில் குறைந்தபட்சம் 300 ஆவணங்கள் பதிவாகின்றன.
இப்படிப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில், கவனமாக பணியாற்றக்கூடிய, நல்ல அனுபவம் வாய்ந்த, பொதுமக்களுக்கு சரியான சேவையாற்றக்கூடிய, பொறுப்புள்ள சார் பதிவாளர் நிரந்தரமாக இருக்க வேண்டும்.
கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் எங்கே
ஆனால், சமீபகாலமாகவே இந்த சார் பதிவாளர் அலுவலகத்திற்கு, தினந்தோறும் ஒரு சார் பதிவாளர் வருகின்றார்கள்.. இதனால், அந்த ஆவணங்களின் தன்மை தெரியாமல், அனுபவம் இல்லாமல், உதவியாளர்களாக இருக்கக்கூடியவர்களை நியமிக்கப்பட கூடிய அவலம் உள்ளது.
இதனால் பதிவு செய்வதற்காக செல்கின்ற பொதுமக்கள், தங்களுக்கான சேவைகளை முழுமையாக பெற முடியாமல் தங்கள் ஆவணங்களை பதிவு செய்ய இயாலவில்லை. இதுபோக பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, சட்டதிட்டங்கள் புரியாமல், சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தாமல், ஆவணங்களை எல்லாம் தான்தோன்றித்தனமாக, பொத்தாம் பொதுவாக சில காரணங்களை சொல்லி நிராகரிக்கும் சூழல் இன்று ஏற்பட்டுள்ளது
புறநகர் பகுதிகளில் மிகவும் முக்கியம்
ஆகவே, பதிவுத்துறை இதை கவனத்தில் கொண்டு, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சார் பதிவாளர் அலுவலகம், அதிலும் வருவாய் அதிகமாக கிடைக்கக்கூடிய சார் பதிவாளர் அலுவலகம், ஆவணங்கள் அதிகமாக பதிவாகக்கூடிய சார் பதிவாளர் அலுவலகம், சென்னையின் புறநகர் பகுதிகளில் வளர்ந்து வரக்கூடிய இடங்களில் ஒன்றாக மிகமுக்கிய பங்கு வகிக்கக்கூடிய சார் பதிவாளர் அலுவலகத்தை, நீங்கள் கவனத்தில் கொண்டு, நிரந்தரமாக, நல்ல பணி அனுபவம் மிக்க, சட்டதிட்ட பதிவு நடைமுறைகளை தெரிந்த ஒரு சார் பதிவாளரை நிரந்தரமாக நியமிக்க முன்வரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications