சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4800 கோடி.. டீல் ஓகே?.. எடப்பாடியை தாங்குகிறதா திமுக + ஓபிஎஸ்ஸை அணைக்கிறதா? 17ம்தேதி கச்சேரி இருக்கு

அதிமுக உட்கட்சி பூசல் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து சொல்வாரா

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் பூசல்கள் வெடித்து வரும் நிலையில், இந்த அதிகார போட்டியை முதல்வர் ஸ்டாலின் எப்படி மதிப்பிடுகிறார் என்பது வருகிற 17-ம் தேதி தெரியவரும் என்கிறார்கள்.. என்ன காரணம்?

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவிலும், அதற்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பலமுறை உச்சரித்த வார்த்தைகள், திமுக + ஓபிஎஸ் பற்றியதுதான்..

"திமுகவுடன் சேர்ந்து கொண்டு கட்சியை அழிக்கப் பார்க்கிறார் பன்னீர்" என்று ஆவேசமாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் எடப்பாடி பழனிசாமி.

குழிதோண்டி புதைக்க முயற்சி.. பொதுச்செயலாளர் ஆக முடியாது.. எடப்பாடி பழனிச்சாமியை சாடும் புகழேந்தி குழிதோண்டி புதைக்க முயற்சி.. பொதுச்செயலாளர் ஆக முடியாது.. எடப்பாடி பழனிச்சாமியை சாடும் புகழேந்தி

சைலண்ட்

சைலண்ட்

அதேபோல, அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்திருக்கும் கலவரத்தின் பின்னணியிலும், அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதிலும் திமுக அரசின் கைங்கரியம் இருப்பதாகவே எடப்பாடி தரப்பு தொடர்ந்து சொல்லி வருகிறது.. திமுகவுடன் சேர்ந்து கொண்டு, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக சொல்லியே, ஓபிஎஸ் பதவி பறிக்கப்பட்டது.. அந்த அளவுக்கு திமுகவுடன் ஓபிஎஸ்ஸை நெருக்கமாக வைத்து பார்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு.

 ஆப்ஷன் A

ஆப்ஷன் A

ஆனால், ஓபிஎஸ் தரப்போ, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக மறைமுகமாக உதவி கொண்டிருக்கிறது என்று பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டுகள் நடத்தப்பட்டன.. வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் பலமுறை ரெய்டு நடத்தப்பட்டது.. ஆனால், இவர்கள் யார் மீதாவது திமுக அரசு கைது நடவடிக்கையை எடுத்ததா? வாக்குறுதியில் ஸ்டாலின் என்ன சொன்னார்? ஊழல் புரிந்த அத்தனை பேரையும் உள்ளே தூக்கி வைப்பதாக சொன்னாரே? இதுவரை நடந்ததா? அப்படியானால் இந்த ரெய்டுகள் என்பதே கண்துடைப்பு விஷயம்தானே? என்ற விமர்சனங்கள் திமுகவை வட்டமடித்தன.

 ஆப்ஷன் B

ஆப்ஷன் B

அதேபோல, எடப்பாடி பழனிசாமியை, கொடநாடு விஷயத்துடன் "லைட்டாக" தொடர்புபடுத்தி சட்டசபையில் அன்று பேசியது திமுக தரப்புதான்.. அதற்கே அன்று எடப்பாடி டென்ஷனாகிவிட்டார்.. சட்டசபைக்கு வெளியே ஆவேசமாக சீறினார்.. ஆனால், இந்த கொடநாடு விஷயம் 6 வருடத்துக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், இதுவரை எடப்பாடி தரப்பில் யார் பேரையாவது இணைக்க முடிந்ததா? விசாரிக்க முடிந்ததா? ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடமாகியும் கொடநாடு விவகாரம் எதை நோக்க நகர்கிறது என்றே தெரியவில்லை என்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பில்.

 ஆப்ஷன் C

ஆப்ஷன் C

ஒருமுறை மூத்த தலைவர் கேசி பழனிசாமி பேட்டி தந்திருந்தபோது, கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் திமுக அரசு எடப்பாடியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன டீல்? நெடுஞ்சாலை துறை ஊழல் 4800 கோடி ரூபாய் வழக்கில் ஏன் எடப்பாடியை திமுக அரசு கைது செய்யவில்லையே.. அந்த பைல் திமுக அரசிடம்தானே உள்ளது? எடப்பாடிக்கும் திமுக தரப்புக்கும் மறைமுக டீல் உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது என்று கூறியிருந்தார்.

 கண்துடைப்பு

கண்துடைப்பு

ஆக, ஓபிஎஸ்ஸை சாடும்போதெல்லாம் திமுகவையும் சீண்டுவது எடப்பாடி தரப்பின் வழக்கம்.. அதேபோல, எடப்பாடியின் ஊழல் புகார் குறித்து சாடும்போதெல்லாம், திமுகவுக்கு நெருக்கமாக ஸ்டாலின் இருக்கிறார் என்று சீண்டுவது ஓபிஎஸ் தரப்பின் வழக்கமாகிவிட்டது.. அதனால் தனிப்பட்ட கட்சி விஷயத்திலும்கூட, திமுக மற்றும் ஸ்டாலினின் பெயர் எந்நேரமும் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.. ஆனால், இதுவரை, எதற்குமே ஸ்டாலின் பதிலளித்ததில்லை.. இப்படிப்பட்ட சூழலில், அதிமுகவின் இந்த அதிகார போட்டியை முதல்வர் எப்படி மதிப்பிடுகிறார் என்பதும் 17-ந்தேதி தெரிந்து விடும் என்கிறார்கள்.

 முற்றுப்புள்ளி + சுபம்

முற்றுப்புள்ளி + சுபம்

காரணம், தமிழக சட்டமன்றம் 17ம் தேதி கூடஉள்ளது.. எதிர்க்கட்சி துணை தலைவராக யாரை சபாநாயகர் அப்பாவு தேர்வு செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருந்தாலும், அதிமுக விவகாரத்தில் சைலண்ட்டாக உள்ள முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ், எடப்பாடி இவர்களில் யாரை ஏற்க போகிறார் என்பது அன்றைய தினம் தெரியவரும் என்கிறார்கள்.. ஒரு கட்சி விஷயத்தில் இன்னொரு கட்சி தலையிடாது என்றபோதிலும், திமுகவை சீண்டுவது தற்போது அதிகரித்து வருவதால், இதற்கான முற்றுப்புள்ளியை முதல்வர் நிச்சயம் வைப்பார் என்றே தெரிகிறது.. 17-ந்தேதி பார்ப்போம்..!!!

English summary
Does CM MK Stain support Edapadi palanisamy and Will he comment on the AIADMK internal conflict
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X