மீண்டும் உள்ளே வரும் முருகன்.. அமித் ஷா ஸ்கெட்ச்.. 2 பேர் டார்கெட்.. “அவங்களா?” டெல்லி பிளான் இதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு டெல்லி தலைமை முக்கியமான 'டாஸ்க்'கை கொடுத்திருப்பதாகவும், அதன்படி தமிழ்நாட்டில் 2 வேட்பாளர்கள் டார்கெட் செய்யப்படுவார்கள் என்றும், 2024 தேர்தலுக்கு முருகனை முன்னிறுத்தி களத்தை 'செட்' செய்ய பாஜக மேலிடம் திட்டமிட்டிருப்பதாகவும் கமலாலய வட்டாரத்தில் தகவல்கள் உலவி வருகின்றன.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு தமிழ்நாடு பாஜக விவகாரங்களில் பெரிதாக மூக்கை நுழைக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சில விஷயங்களைக் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளார். டெல்லி பாஜக தலைமை எல்.முருகனுக்கு தமிழ்நாட்டில் சில அசைன்மெண்ட்களை வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் எல்.முருகன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாட்டில் பாஜக 9 தொகுதிகளை குறி வைத்து வேலைகளைச் செய்து வருவதாகவும் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, நெல்லை, வேலூர், ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். இவ்வாறு அவர் சொல்வதற்கு முக்கிய காரணம், தமிழ்நாடு பாஜக தேர்தல் பணிக்கு எல்.முருகனையே பாஜக தலைமை தேர்வு செய்துள்ளது என்கிறார்கள்.

Does delhi high command gives key assingment to l murugan: target 2 leaders

அமித் ஷாவுடன் ஆலோசனை : அண்மையில் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை, எல்.முருகன் சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடம் வரை இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையின்படி தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக எல்.முருகன் நியமிக்கப்படுவார் என்றும் அவருக்கு கீழ் தனியாக ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அந்த குழுதான் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் என்றும் சில உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை, கர்நாடகா பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாமலை, அதிமுக உடனான கூட்டணி கணக்குகளுக்கு தோதுப்பட மாட்டார் என்கிற அடிப்படையில் இங்கு எல்.முருகனை முன்னிறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

முக்கிய டாஸ்க் : இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு முக்கியமான அசைன்மெண்ட்டையும் டெல்லி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, நீலகிரி மற்றும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை தோற்கடித்தே ஆகவேண்டும், அதற்குரிய வேலையில் ஈடுபடுங்கள் என டெல்லி தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். இந்த தொகுதிகளை குறி வைத்திருப்பதற்குக் காரணம் திமுக எம்.பி ஆ.ராசா மற்றும் விசிக எம்.பி திருமாவளவன். பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது, லோக்கல் விவகாரங்களை அரசியல் ரீதியாக கையில் எடுப்பது, ஆ.ராசா, திருமாவளவன் ஆகியோர் மீது சித்தாந்த ரீதியாக தாக்குதலை தொடிப்பது என எல்.முருகனுக்கு ஒரு அவுட்லைன் போட்டுத் தரப்பட்டுள்ளதாம்.

Does delhi high command gives key assignment to l murugan: target 2 leaders

டார்கெட் : ஆ.ராசா, திருமாவளவன் இருவரும் பாஜகவை சித்தாந்த ரீதியாக கடுமையாக தாக்கி வருகிறார்கள், அவர்களைத் தோற்கடித்தால், பாஜகவை தமிழ்நாட்டில் வலுவாக வேரூன்ற வைத்து விடலாம் என்பது பாஜக தலைமையின் கணக்காம். அந்த அடிப்படையிலேயே திருமா, ஆ.ராசா இருவரும் டார்கெட் செய்யப்படுகிறார்களாம். நீலகிரி தொகுதியில் இருந்து ஆ.ராசாவும், சிதம்பரம் தொகுதியில் இருந்து திருமாவளவனும் தொகுதி மாற இருப்பதாகவும் ஒரு தகவல் உலவிக் கொண்டிருப்பதால், அவர்கள் எந்தத் தொகுதியில் நிற்கும் திட்டத்தில் இருக்கிறார்களோ அங்கு வேலையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவாம்.

நீலகிரி - சிதம்பரம் : ஏற்கனவே, ஆ.ராசா எம்.பியாக உள்ள நீலகிரி தொகுதியில் எல்.முருகன் பாஜக சார்பில் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள். அருந்ததியர் மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அருந்ததியர் சங்கங்களை ஒன்றிணைத்து தேர்தல் வேலையை எல்.முருகன் தீவிரப்படுத்தி வருகிறார். இது ஆ.ராசாவுக்கு நெருக்கடியாக வளர்ந்து வரும் சூழலில், ஆ.ராசாவுக்கு குறி வைத்து டெல்லி ஸ்பெஷல் டாஸ்க் ஃபார்ம் செய்துள்ளது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விவாதமாக உருவெடுத்துள்ளது. இதேபோல, சிதம்பரத்தில் கடந்த முறை திருமாவளவன் வெறும் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், அங்கும் பாஜக கை வைத்தால் நிலைமை மோசமாகும் எனக் கணிக்கப்படுகிறது. என்ன நடக்கப்போகிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+