இறங்கி வந்த அதிமுக மாஜி.. ஓபிஎஸ்ஸுக்கு பிறந்த நம்பிக்கை.. "எக்ஸ்பர்ட்" சொன்னது அப்படியே நடக்குதே!
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையிலான மோதல் தற்காலிகமானது என்று மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு சொல்லி இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகிறார்கள். முதலில் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு அன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை தொடர்ந்து , பின்னர் வைத்தியலிங்கம் ஆகியோர் நீக்கப்பட்டனர். அதன்பின் ஜெசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.
அதோடு எம்பி ஓ பி ரவீந்திரநாத், ஜெயபிரதீப் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

செல்லூர் ராஜு
இந்த நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையிலான மோதல் தற்காலிகமானது என்று மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு கூறி இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியாது. எல்லா நிர்வாகிகளும் கட்சியில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை காளிமுத்து உள்ளிட்ட பலர் திட்டி இருக்கிறார்கள். அப்படி திட்டிவிட்டு போனவர்கள் மீண்டும் ஜெயலலிதா கீழ் வந்துள்ளனர். அப்படித்தான் இதுவும். இதெல்லாம் அண்ணன் தம்பி சண்டை.

சண்டை சரியாகும்
சண்டை எல்லாம் சரியாகும். இந்த அண்ணன் தம்பி போராட்டம் முடிவிற்கு வரும். பொதுச்செயலாளர் முடிவை பொறுத்து உள்ளது. அவர் ஏற்றுக்கொள்ள விரும்பினால் நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். எடப்பாடியை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று செல்லூர் ராஜு தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

விவாதம்
செல்லூர் ராஜுவின் இந்த சமாதான தூது அதிமுக வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கசப்புகளை மறந்து மீண்டும் ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்த்துக்கொள்ள எடப்பாடி தரப்பு தயாராகிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ்ஸை வெளியே அனுப்பி முக்குலத்தோர் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பாமல், அவரை சமாதானம் செய்து மீண்டும் உள்ளே கொண்டு வர எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி தரப்பு
அதிமுகவில் அடுத்தடுத்து நீக்கங்கள், எதிர்ப்புகள், விமர்சனங்களை சந்தித்து வந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு இந்த பேச்சு ஒருவகையில் சின்ன ஆறுதலாக.. சிறிய கிரீன் சிக்னலாக அமைந்து இருக்கும். ஆனால் ஓ பன்னீர்செல்வம் இறங்கி வந்து எடப்பாடி தலைமையை ஏற்று, அவருக்கு கீழ் பணியாற்ற ஒப்புக்கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடியே தயாராக இருந்தாலும் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு கீழ் செயல்பட தயாராக இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்டாயம்
முன்னதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், எடப்பாடியும், பன்னீர்செல்வமும் எதிர்காலத்தில் சேர்ந்த செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஓபிஎஸ் - எடப்பாடி சேர்ந்து இருந்தால் அது பல மாவட்டங்களில் பாஜக - அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும். அதேபோல் வாக்குகள் சிதறாமல் இருக்கும். ஓபிஎஸ் வெளியே இருந்து தன்னை நிரூபித்து, வாக்குகளை பிரிப்பார். இதை எடப்பாடி உணர்ந்து கொள்வார். பின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து கொள்வார்கள்.
Recommended Video

சாதாரண ஆள் கிடையாது
ஓபிஎஸ் முன்னாள் முதல்வர். அவர் சாதாரண தலைவர் கிடையாது. அவருக்கு என்று ஒரு ஆதரவு இருக்கிறது. அந்த ஆதரவு அவருக்கு தொடரும். எதிர்காலத்தில் கசப்புகளை மறந்து ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது அவர் சொன்னபடியே செல்லூர் ராஜு சமாதான தூது விடுத்துள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications