155.. 75.. பீஸ் பீஸாக போச்சே.. "மாய தோற்றம்" எடப்பாடி பழனிசாமி.. கருகும் தலைவரின் கனவு.. நிஜம் என்ன?
எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்வாரா தெரியவில்லை
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு தற்போதுள்ள ஆதரவுகள் எல்லாம் வெறும் மாயை, மற்றபடி தொண்டர்களின் முழு ஆதரவை அவர் இதுவரை பெறவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது.. இது உண்மையா?
அதிமுகவில் இன்னும் சலசலப்பு ஓயவில்லை.. தலைவர்களின் சண்டையும் தீரவில்லை.. இப்போது இருப்பது ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா என்று இறுதிமுடிவு தெரியாமல் தொண்டர்கள் குழம்பியும் கவலை அடைந்தும் உள்ளனர்.
ஓபிஎஸ்ஸுக்கு எல்லா பக்கமும் இடியாகவே உள்ளது.. நல்ல செய்தி நாலாபுறமிருந்தும் அவருக்கு இதுவரை கிடைக்கவில்லை. இதனால், தனித்தும் செயல்பட முடியாமல், எடப்பாடி பக்கமும் உடனடியாக தாவ முடியாமல் ஓபிஎஸ் குழம்பி உள்ளதாக கூறப்படுகிறது.

பண்ருட்டி
ஆனால், எடப்பாடியோ தெம்பாக இருக்கிறார்.. அதிமுக மொத்தமாகவே தன் கைக்குள் வந்துவிட்டதை போல அவரது பேச்சுக்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.. அதனால், பண்ருட்டி ராமசந்திரனை ஓபிஎஸ் சந்தித்து பேசியதைகூட எடப்பாடி கடுமையாக விமர்சித்திருந்தார்.. பண்ருட்டி ராமசந்திரனுக்கு கிளை செயலாளர் பதவிக்கு கூட தகுதி இல்லையென கூறியிருந்தார்.. இது ஓபிஎஸ் தரப்பை கடுப்பாக்கியது..

சூன்யம்
"2 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு ஆர்ப்பாட்டத்தில் எந்த கோரிக்கைக்கு சென்றாரோ அந்த கோரிக்கையை மறந்துவிட்டு கட்சியினுடைய மூத்த தலைவர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு பயணித்த பண்ருட்டி ராமச்சந்திரனை மிகவும் தரமற்று பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் அதிமுக கட்சியை அழிப்பதற்கென்றே ஒரு சூனியமாக வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்றும், கோவை செல்வராஜ் பதிலுக்கு விமர்சித்திருந்தார்.

டேமேஜ் A
அதிமுகவை அழிக்க வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்ற தொடர் முழக்கத்தை ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வாதம் உண்மையா? சரியா? என்று நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் சொன்னதாவது: எடப்பாடி பழனிசாமி இதுவரை யாரிடம் விசுவாசமாக இருந்துள்ளார்.. எல்லாரையுமே தூக்கி எறியக்கூடியவர்.. பொதுக்குழு உறுப்பினர்களை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எம்ஜிஆர் விதியை வகுத்திருந்தார்.. ஆனால், அதையும் தூக்கி எறிந்து, அவராகவே பொதுக்குழு ஒன்றை கூட்டி கோர்ட் அனுமதியையும் பெற்றுவிட்டார்.. இதன்மூலம் எம்ஜிஆரை தூக்கி எறிந்துவிட்டார்.. இதைதான் கேசி பழனிசாமி விடாமல் சொல்லி வருகிறார்..

டேமேஜ் B
நிரந்தர பொதுச்செயலாளர் தான்தான் என்று மறைந்த ஜெயலலிதாவே நிறைய முறை தெரிவித்துள்ளார்.. நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்றே கையெழுத்துக்களை பதிவிட்டு நிரூபித்தும் காட்டி வந்தார்.. அந்த நடைமுறையையும் தூக்கி எறிந்து தற்காலி பொதுச்செயலாளர் என்று போட்டுக் கொண்டுள்ளார் எடப்பாடி.. விரைவில் பொதுச்செயலாளர் என்பதை நிலைநிறுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. அம்மா ஆட்சி, அம்மாவின் வழி, அம்மாவின் நல்லாசி என்று சொல்லி கொண்டே, அம்மாவின் பதவியையும் தூக்கி எறிந்துவிட்டார்.

டேமேஜ் C
அடுத்து ஓபிஎஸ்ஸையும் தூக்கி எறிந்துவிட்டார்.. இப்போதைக்கு எடப்பாடியுடன் இருப்பது சிவி சண்முகமும், கேபி முனுசாமியும்தான்.. இன்றைக்கு அவருக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகள்கூட, எடப்பாடி மீதான பாசத்தினாலோ, நன்மதிப்பினாலோ கிடையாது.. தங்களுக்கு ஏதாவது பதவியை எடப்பாடி தரக்கூடும் என்ற எதிர்பார்ப்பினால்தான்.. மற்றபடி தொண்டர்களின் ஆதரவு எடப்பாடிக்கு முழுமையாக இருப்பதாக தெரியவில்லை.. அப்படிப்பார்த்தால் அன்றைக்கு 155 இடங்களை பெற்றிருந்த அதிமுக, எடப்பாடியின் நாலரை ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு 75 தொகுதிகளாக குறைந்துவிட்டதே எப்படி? இதற்கு பிறகு, நடந்த எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லையே ஏன்? அதனால், எடப்பாடிக்கு, நிஜமான செல்வாக்கு கட்சிக்குள் இல்லை என்பதே உண்மை.

டேமேஜ் D
அதேபோல, ஓபிஎஸ்ஸும் தன்னுடைய அரசியலை இனியாவது மாற்றிக் கொள்ள வேண்டும்.. "ஒருங்கிணைப்பாளர்" என்ற தன்னுடைய உரிமையை விட்டுக்கொடுக்காமல், அதற்கேற்றவாறு அதிகாரங்களை செலுத்தி ஓபிஎஸ் கடந்த நாலரை வருடங்களில் பணியாற்றியிருந்தால், இன்று அவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது.. தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருந்துவிட்டு, இன்று பதவி, பொறுப்பு, வேண்டும் என்று மல்லுக்கட்டுவது நியாயம் இல்லை.. அதனால், இனிமேல் கட்சி பிரச்னையை நேரடியாகவே இறங்கி ஓபிஎஸ் சந்திக்க வேண்டும்..

கழியும் கணக்கு
இனியும் நீதிமன்றத்தை நம்பியிருக்க கூடாது.. அதுமட்டுமல்ல, திமுகவை வலுவாக எதிர்ப்பவர்கள் யாரோ, அவர்களைதான் அதிமுக தொண்டர்கள் விரும்புவார்கள். அவர்களைதான் தங்களுக்கான தலைவராகவும் ஏற்றுக்கொள்வார்கள்.. ஆனால் ஓபிஎஸ், அவரது மகனும் திமுகவுடன் இணங்கி செல்வதை அதிமுக தொண்டர்கள் ரசிக்கவில்லை.. இந்த தவறையும் ஓபிஎஸ் திருத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறினர்.
-
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்?












Click it and Unblock the Notifications