ஸ்டாலின் ரூமில் "கால்" வைத்த ஓபிஎஸ் மகன்.. எம்பி பதவி பறிபோகிறதா.. வேற ரூட்டை எடுக்கிறாரா எடப்பாடி?
ஓபிஎஸ் மகன் ஓபிஆரின் எம்பி பதவிக்கு சிக்கல் வருமா? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்
சென்னை: ஓபிஆரின், எம்பி பதவி குறித்தும் எடப்பாடி தரப்பு ஏதாவது சிக்கலை உண்டுபண்ணுமா? என்ற சந்தேகத்தை சிலர் கிளப்பி விட்டு வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி சென்றுள்ளார்.. இதற்கான காரணங்கள் என்னவென்று இதுவரை உறுதியாக தெரியவில்லை.
அதேசமயம், அதிமுகவில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காகவும், வேறு சில முக்கிய வேலைகள் தொடர்பாகவும் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஓபிஆரை கட்சியில் இருந்து நீக்கம் செய்தது எடப்பாடி டீம்.. மேலும், ரவீந்திரநாத்தை, அதிமுக உறுப்பினராகவே கருதக்கூடாது என்று கூறி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

ரிசல்ட்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை ஏற்கக் கூடாது என்று ஓபிஎஸ்ஸும் பின்னாடியே பதில் எழுதி கடிதம் எழுதினாலும், இந்த ரிசல்ட் என்ன ஆனது என்று தெரியாமலேயே இருந்தது.. சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதம் நிராகரிக்கப்பட்டதாக சொன்னார்.. ஆனால், அது உறுதியான தகவலா என்று தெரியாமல் இருந்த நிலையில்தான், டெல்லியே அதை உறுதிப்படுத்தியது..

ரவீந்திரநாத்
சமீபத்தில் நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் ஓபி ரவீந்திரநாத் கலந்து கொண்டு பேசினார்.. ஒருவேளை இவர் சுயேச்சையான எம்பியாக பேசுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதையும் டெல்லி அப்போதே கன்பார்ம் செய்தது.. நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான "சன்சத்" டிவியில் அதிமுக எம்பி என்றே பெயரிடப்பட்டு, ஓபிஆர் பேச்சை ஒளிபரப்பினார்கள்.. ஆக, எடப்பாடி எழுதிய கடிதம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதுடன், அதிமுக எம்பியாகவே ஓபிஆர் தொடர்கிறார் என்பதும் உறுதியாகிவிட்டது.

லெட்டர்
ஓபிஆரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து நீக்கிய, அதன் தகவலை மக்களவை சபாநாயகருக்கு எடப்பாடி டீம் ஏற்கனவே அனுப்பியிருந்தது.. இதற்கு ஓபி ரவீந்திரநாத் குமார் பதில் கடிதமும் எழுதியிருந்தார்.. அதில், அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் இருப்பதால் இந்த கடிதத்தை ஏற்க கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். எனினும், தன்னுடைய டெல்லி பயணத்தில் இதற்கான அழுத்தத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு தருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது...

சுயேச்சையா?
ஆனால், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் யாருடைய தலைமையை ஆதரிக்கிறதோ அதன் அடிப்படையிலேயே சபாநாயகர் முடிவெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.. எனவே, கட்சிக்குள் ஏகப்பட்ட பூசல்கள் நிலவினாலும், ஓபிஆர் இப்போதும் அதிமுக உறுப்பினராகவே தொடர்கிறார்.. மக்களவை செயலக விதிகளின்படி கட்சி மேலிடத்தால் ஒரு எம்பி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அது சபாநாயகரால் ஏற்கப்பட்டால், அந்த எம்பி மக்களவையில் சுயேச்சை எம்பி ஆக கருதப்படுவார்... ஆனால், முக்கிய மசோதாக்கள் மற்றும் அலுவல்களில் உரையாற்றும் வாய்ப்பு, பிற கட்சிகளுக்கு தரப்படும் பிரதிநிதித்துவம் போல இல்லாமல் அவருக்கு கடைசியாகவே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

திமுக Or பாஜக?
இதனிடையே, பதவி பறிபோகும்பட்சத்தில், ஓபிஆர் பாஜகவில் இணைந்துவிடுவாரா? அல்லது திமுகவில் இணைந்துவிடுவாரா? என்ற சந்தேகங்களை சிலர் சோஷியல் மீடியாவில் எழுப்ப துவங்கி உள்ளனர்.. "அதிமுகவில் தனக்கான எதிர்காலம் வெளிச்சமாக இல்லாதபட்சத்தில், பாஜகவிலும் அவர் இணையலாம்.. அப்படி ஓபிஆர் கட்சிக்குள் வந்தாலும் அவரை அரவணைக்க திமுகவும் தயாராகும்.. காரணம், தேனியை பல வருடங்களாகவே மீட்டெடுக்க முடியவில்லை.. தங்கத்தமிழ்செல்வன் இன்றுவரை அதற்காக முயன்று கொண்டிருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல், இதெல்லாம் அரசியல் என்பதால், யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிலைப்பாடுகள் மாறலாம்.. அந்தவகையில், ஓபிஆர் நிறம் விரைவில் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றெல்லாம் கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications