Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இடிக்குதே".. ஓபிஎஸ் பக்கம் ஓடிப்போன தீர்ப்பு.. ஆடிப்போன எடப்பாடி.. சங்கடத்தில் பாஜகவா..? அதெப்படி?

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தீர்ப்பு அண்ணாமலைக்கு நெருக்கடியை தருமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தீர்ப்பு, கொங்கு மண்டலத்தை மொத்தமாக பாதிக்கக்கூடியதாக அமையலாம் என்கிறார்கள்.. இதனால் பாஜகவுக்கும் லேசாக சறுக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்... எப்படி?

Recommended Video

    ADMK-வை மீட்டு விட்டோம்... OPS ஆதரவாளர் Vellamandi Natarajan *Politics | Oneindia Tamil

    சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக, அதிமுகவில் ஜுன் 23-க்கு முன்பிருந்த நிலையே நீடிக்கும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

    அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

     சப்போர்ட்

    சப்போர்ட்

    இன்றைய தினம் வந்துள்ள தீர்ப்பும் தற்காலிகமானது மட்டுமே.. ஓபிஎஸ்ஸுக்கு தற்காலிக நிம்மதியை தரலாம்.. ஓபிஎஸ்ஸுக்கு பாஜக சப்போர்ட் உள்ள நிலையில், அதே ஆதரவுடன் தன்னுடைய அடுத்தக்கட்ட அரசியலை கொண்டு செல்லலாம் என்று எடப்பாடி தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது.. அதேசமயம், எடப்பாடி பொறுத்தவரை, அவரிடம் உள்ள முக்கிய ஆதரவாளர்கள்தான் அவருக்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.. இந்த 90 சதவீத ஆதரவாளர்களை தன்பக்கம் கொண்டு வர எடப்பாடி கிட்டத்தட்ட ஒரு வருட காலம், தீவிரமான அரசியலை முன்னெடுத்திருந்தார்.

     ஓபன் டாக்

    ஓபன் டாக்

    இந்த ஆதரவாளர்களை வைத்துதான், அதன் கூட்டணி கட்சிகளும் மதிப்பீடு செய்கின்றன.. பாஜக மேலிடம் இன்று எடப்பாடியை புறக்கணிப்பதாக தகவல்கள் பரபரத்து வருகிறது என்றால், இந்த ஆதரவாளர்களின் பலம்தான் காரணம்.. அதேசமயம், மேலிடம் அப்படி நினைத்தாலும், எடப்பாடியை தவிர்த்துவிட்டு, தமிழக பாஜகவால் அரசியல் செய்ய முடியாது என்றும் கருத்துக்கள் வெடித்து வருகின்றன.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், அண்ணாமலைக்கு இன்றைய தினம் வந்த அதிமுகவின் தீர்ப்பு, ஒருவகையான சறுக்கல் என்றே சொல்கிறார்கள்.

     தனி மவுசு

    தனி மவுசு

    அதிமுகவில் நடந்து வரும் ஒவ்வொரு நிகழ்வும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. காரணம், அதிமுகவை பாஜக மறைமுகமாக அழிக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருவதால். தற்போது அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகள் பாஜகவுக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அகில இந்திய பாஜகவை பொறுத்தவரை ஓபிஎஸ் மீது பிரதமர் மோடி தனிப்பட்ட பாசம் வைத்துள்ளார். ஓபிஎஸ், எப்போதுமே மறுபேச்சு பேசாமல் எதையும் கேட்டுக் கொள்வார், செய்து காட்டுவார் என்பதால் பாஜக மத்தியில் அவருக்கு தனி மவுசு உண்டு.

    கெமிஸ்ட்ரி

    கெமிஸ்ட்ரி

    அதேசமயம், தமிழக பாஜகவைப் பொறுத்தவரை அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிச்சாமிதான் முக்கியமானவராக தெரிகிறார்.. அவருக்குததான் அண்ணாமலை முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகிறது. காரணம் இருவரும் கொங்கு மண்டலம் என்பதால் இருக்கலாம். அதிமுக பொதுக்குழுவில் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து அண்ணாமலை முதலில் போய்ப் பார்த்தது எடப்பாடியாரைத்தான். எடப்பாடியாருக்குத்தான் அவர் அதிகம் முக்கியத்துவம் தரவும் செய்கிறார். தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பு எடப்பாடியாருக்கு எத்தனை ஏமாற்றமோ அதே அளவில்தான் அண்ணாமலைக்கும் ஏமாற்றம் தரும்.

    வீக்னஸ்

    வீக்னஸ்

    காரணம், எடப்பாடியார் பலவீனமடைவது அண்ணாமலைக்கும் கூட ஒரு வகையில் சறுக்கல்தான். என்னதான் ஓபிஎஸ்ஸுடன் சுமூக உறவில் அண்ணாமலை இருந்தாலும் கூட, இபிஎஸ்ஸுடன் இருக்கும் கெமிஸ்ட்ரி, ஓபிஎஸ்ஸுடன் வர வாய்ப்பில்லை. பாஜகவை பொறுத்தவரை கொங்கு மண்டலத்தைத்தான் அது பெரிதும் நம்பியுள்ளது. தெற்கில் சில பகுதிகளில்தான் அக்கட்சிக்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கொங்கு மண்டலத்தில் அதிமுக ஆதரவுடன், கூடவே பாஜகவுக்கும் தனிப்பட்ட ஆதரவு இருப்பதால் அந்தப் பகுதியை சேர்ந்த எடப்பாடி பலமாக இருந்தால்தான் பாஜகவுக்கும் லாபம்.. இதனால்தான் அண்ணாமலைக்கு ஓபிஎஸ்ஸை விட எடப்பாடி பழனிசாமி முக்கியமானவராக இருக்கிறார்.

    ஸ்கெட்ச்

    ஸ்கெட்ச்

    தற்போதைய தீர்ப்பு இபிஎஸ்ஸுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை.. அப்பீல் சென்றாலும் அதற்கான வலுவான காரணங்களை எடப்பாடி தரப்பு கையில் வைத்துள்ளது.. அதனால், இன்றைய தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு நிரந்தரமாக பலத்தை கொடுக்க வாய்ப்பில்லை என்பதால் விரைவில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் பலம் பெறக் கூடும். அதைத்தான் அண்ணாமலையும் விரும்பக் கூடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+