Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபரேஷன் சசிகலா.. "பவர்" கைமாறுதா? பாஜகவின் மாஸ்டர் பிளானில் "பிரபலம்".. கவனிக்கும் எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவின், வியூகத்துக்கும், வேகத்துக்கும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடு கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், சசிகலாவின் அரசியல் வேகம் எடுத்துள்ளது.

இந்த முறை தேர்தலில், தென்மண்டலங்களிலும் காலூன்ற தமிழக பாஜக முயன்று வருகிறது. அதனால்தான் "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற விஷயத்தை தொடர்ந்து முன்னெடுத்து வந்தது.. அதனால்தான், ஓபிஎஸ், தினகரன், சசிகலா என மூவரையுமே கைவிடாமல் இருப்பதாக தெரிகிறது.

Does VK Sasikala get a key role in AIADMK and What are the Huge Strategies of BJP

ஏற்கனவே, அமமுக டிடிவி தினகரனிடம், கூட்டணி குறித்து பாஜக மேலிடம் ஓரளவு பேசியதாக தெரிகிறது.. அத்துடன், செலவு உள்ளிட்ட விஷயங்களையும் தாங்களே கவனித்து கொள்வதாக, தினகரனிடம் உறுதி தந்துள்ளதாகவும் தெரிகிறது. அந்தவகையில், அமமுகவுக்கு 4 சீட்வரை ஒதுக்கப்படலாம் என்றும், இதனால், அமமுகவில் நிறைய நிர்வாகிகள், இந்த முறை தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகின்றன.

சசிகலா ஆபரேஷன்: அதேபோல, சசிகலாவை பொறுத்தவரை தன்னுடைய முயற்சியில் ஓரளவு வெற்றியை பெற்றுவருகிறார் என்றே சொல்லலாம்.. அன்று சிறையிலிருந்து சசிகலா வெளிவந்தபோதிருந்தே அவரை பாஜக மேலிடம் கண்டுகொள்ளாமலேயே இருந்தது..

அதிமுக தன்னை எப்படியாவது சேர்த்து கொள்ளும் என்று காத்து கிடந்த சசிகலாவுக்கு தொடர்ந்து ஏமாற்றம் கிடைத்தபடியே இருந்தது. அதனால்தான், எடப்பாடியை சமாதானம் செய்வதற்கு பதில், மேலிட பாஜகவையே சந்தித்து பேசிவிடலாம் என்று முடிவுக்கு வந்துதான், கடந்த 2 வருடங்களாகவே, ரஜினிகாந்த், விஜயசாந்தி, என்று பல புள்ளிகள் மூலமாக தூதுவிடும் படலமும் நடத்தி கொண்டிருந்தார்.

தென்மண்டலம்: இப்போது விஷயம் என்னவென்றால், தென்மண்டலங்களில் வாக்குகளை பெற்றாக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு வந்திருப்பதால், சசிகலாவின் தயவையும் ஒரேடியாக உதறி தள்ள முடியவில்லையாம். அதனால்தான், சமீபகாலமாகவே சசிகலாவுடன், மேலிட பாஜக பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக சொல்கிறார்கள்.

சமீபத்தில், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஒருவர் சசிகலாவுடன் பேசிவிட்டு போனதாகவும், இதற்கு பிறகு, மேலும் 2 அமைச்சர்கள், பாஜக மேலிட தரப்பிலிருந்து சசிகலாவிடம் பேசிவிட்டு போனதாகவும் செய்திகள் கசிந்தன. அதேபோல, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும், சில கோரிக்கைகளை கடிதம் மூலமாக சசிகலா முன் வைத்ததாகவும் சொல்கிறார்கள்.

குறிப்பாக, கட்சியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியே நீடிக்கட்டும், வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகவும் எடப்பாடி பழனிசாமியே போட்டியிடட்டும், அதற்கு பதிலாக, எடப்பாடியுடன் சேர்ந்து, பி-பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கு வேண்டும் என்றும், கட்சியில் ஏதாவது முக்கிய பொறுப்பு வேண்டும் என்றும் சசிகலா கோரிக்கையாக வைத்தாராம்.

உடனே மறுப்பு: இந்த கோரிக்கையைதான், சமீபத்தில் டெல்லி சென்றிருந்த எடப்பாடி பழனிசாமியிடம், உள்துறை அமைச்சர் வலியுறுத்தியதாகவும், இதற்கு உடனடியாக தன்னுடைய மறுப்பை எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

காரணம், B-பார்மில் கையெழுத்திடுபவர்தான், வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள்.. எனவே, இந்த விஷயத்தில் தேவையில்லாத சிக்கல் வந்துவிடும் என்பதால்தான், இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டாராம். இப்படியான தகவல்கள் எல்லாம், அரசல்புரசலாக அரசியல் களத்தில் அதிரவைத்து கொண்டிருக்கிறது.

ஆக, எப்படி பார்த்தாலும், ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு வழியில்லாத நிலையில், ஓபிஎஸ் + சசிகலா + தினகரனுடன் சேர்ந்தே பாஜக கூட்டணியை முன்னெடுக்க நிறைய வாய்ப்புள்ளதாம். அதுமட்டுமல்ல, மிகப்பெரிய அசைன்மென்ட் ஒன்று சசிகலாவுக்கு ஒதுக்கப்போவதாகவும் தெரிகிறது.. இதனால், டிடிவி தினகரனை தொடர்ந்து சசிகலா தரப்பும் பெருத்த நம்பிக்கையிலும், குஷியிலும் உள்ளதாம்.

எடப்பாடி பழனிசாமி: விரைவில் அமித்ஷா தமிழகம் வரஉள்ளதால், இவர்களின் சந்திப்பு நடக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.. இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி டீம் கவனித்தபடியே வருகிறது என்றாலும், முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்ய வேண்டுமானால், எடப்பாடி பழனிசாமி இன்னும் நீண்டதூரம் போக வேண்டியிருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+