Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெட்டுப்போன ஸ்வீட் 100 கிலோ.. பிரபல இனிப்பு கடைக்கு போன ஆபீசர்ஸ்.. தமிழக அரசு தந்த வாட்ஸ்அப் நம்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று, இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக கலெக்டர்கள் உத்தரவிட்டிருந்த நிலையில், தீபாவளியின் போது தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது குறித்து புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதுகுறித்து தமிழக உணவுப்பாதுகாப்புத் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் நேற்று முதல் நடந்து வருகின்றன.. இன்றும், நாளையும் வடமாநிலங்களில் தீபாவளி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது... பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு விற்பனை பலகாரக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடிகிறது.

TN Gov food safety sweet

இன்றும், நாளையும் தீபாவளி

தீபாவளி கொண்டாட்ட மனநிலையில் மக்கள் இருக்கும் சூழலில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. நேற்றைய தினம், தெலுங்கானாவில் திடீர் சோதனையில் இறங்கினர்.

இனிப்புகள் உற்பத்தி செய்யப்படும் இடங்கள், அவை விற்கப்படும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் ஆய்வு நடத்தினர். மொத்தமுள்ள 33 மாவட்டங்களிலும் உள்ள பலகாரக் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி, இனிப்புகள், பலகாரங்கள் தரமானதாக உள்ளதா? தீங்கு விளைவிக்கும் நிறமிகள் சேர்க்கப்பட்டதா? என்றெல்லாம் ஆய்வு செய்தனர்.

கெட்டுப்போன ஸ்வீட்

இறுதியில் 95 கடைகளில் ஜிலேபி,லட்டு போன்றவைகளில் விதிகளை மீறி செயற்கை நிறிமிகள் சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல கலப்பட நெய் சேர்த்து, இனிப்புகள் தயார் செய்யப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்தனர்.. இதையடுத்து உணவு பாதுகாப்பு விதிகள் மீறப்பட்ட குற்றச்சாட்டில், அங்கிருந்த அனைத்து இனிப்புகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. கிட்டத்தட்ட 100 கிலோவுக்கு கெட்டுப்போன மற்றும் காலாவதியான இனிப்பு பொருட்களை கைப்பற்றி அவற்றை அங்கேயே அழித்தனர்.

சுகாதாரமற்ற முறையில் இயங்கிய பலகாரக்கடை உரிமையாளர்களை எச்சரித்த அதிகாரிகள், அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசையும் வழங்கிவிட்டு சென்றார்கள்..

அதேபோல தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மாநிலம் தழுவிய சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.. இதில் நேற்றைய தினம், ரூ.5 கோடி மதிப்புள்ள காலாவதியான கெட்டுப்போன ஸ்வீட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

தமிழக மாவட்ட ஆட்சியர்கள்

நம்முடைய தமிழகத்திலும், அனைத்து மாவட்ட கலெக்டர்களும் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்தபடியே இருந்தனர்..

அந்த அறிக்கையில், "இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள், உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளை உபயோகிக்கக்கூடாது ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்‍யை மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக்கூடாது.

சைவம், அசைவம் குறியீடு

பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களில், தயாரிப்பாளரின் முழு முகவரி, தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சைவ மற்றும் அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக, https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் படி, தங்களது வணிகத்தை பதிவு பெற்று கொள்ள வேண்டும். மேலும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்திருந்தனர்.

தமிழக அரசு அறிவிப்பு

இந்நிலையில், தமிழக உணவுப்பாதுகாப்புத் துறையும் முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளருத.. தீபாவளிக்கு தரமில்லாத உணவுப் பொருட்களை விற்றால் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண்ணை தமிழக உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், "தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி பதிவு செய்யாமல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

புகாருக்கு வாட்ஸ்அப் நம்பர்

விதிகளை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தரமான பொருட்களைக் கொண்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும், கலப்படம் இல்லாமலும் உணவுப் பொருட்களை தயாரிக்க வேண்டும். தின்பண்டத்தின் பெயர், உற்பத்தி தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் தரமில்லாத உணவுப் பொருட்கள் விற்கப்படுவதை அறிந்தால், 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளிக்கலாம்" என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+