பார்க்கிங்கில் பைக்கை நிறுத்துறீங்களா? போலீஸ் வெளியிட்ட முக்கிய வார்னிங்.. பாய போகும் அபராதம்!
சென்னை: சென்னையில் மால்கள், கடைகள் போன்ற இடங்களில் உள்ள பார்க்கிங்கில் பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துகிறீர்கள் என்றால் இனி கொஞ்சம் யோசித்து நிறுத்துங்கள். ஏனென்றால் அபராதம் விதிக்க போலீஸ் புதிய முறை ஒன்றை கையில் எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக குறைவாக இருந்த அபராத கட்டணங்கள் பல உயர்த்தப்பட்டு உள்ளன.

உதாரணமாக ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடுவது மிகப்பெரிய குற்றம்.
இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும். முக்கியமாக டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
தீயணைப்பு வண்டி, அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றெல்லாம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது இன்னொரு விதிமீறல் ஒன்றிற்கான அபராத தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மால்கள், கடைகள் போன்ற இடங்களில் உள்ள பார்க்கிங்கில் பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துகிறீர்கள் என்றால் இனி கொஞ்சம் யோசித்து நிறுத்துங்கள். ஏனென்றால் அபராதம் விதிக்க போலீஸ் புதிய முறை ஒன்றை கையில் எடுத்துள்ளது.
அந்த வகையில் தவறான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி உள்ளீர்கள் என்றால் அதற்கு பார்க்கிங்கில் வைத்தே போலீஸ் அபராதம் விதிக்க தொடங்கி உள்ளது. முன்பெல்லாம் தவறான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி உள்ளீர்கள் என்றால் அதை சாலையில் பார்த்து, வாகனங்களை நிறுத்தி, அதன்பின் பைன் போடுவார்கள்.
ஆனால் இப்போது அப்படி இல்லை. போலீஸ் குழு குழுவாக பார்க்கிங் உள்ளே சென்று சோதனை செய்வார்கள். அங்கே இருக்கும் வாகனங்களில் தவறான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி உள்ள வாகனங்களை சோதனை செய்வார்கள்.
அதில் தவறான நம்பர் பிளேட் இருக்கும் வாகனங்களை கண்டுபிடித்து பைன் விதிப்பார்கள். கார்களுக்கும் இது பொருந்தும். இதற்கான பில் உங்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டு இருக்கும்.
இதை ஒரு முறை கட்ட தவறினால் அடுத்த முறை 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் சென்னையில் டிராபிக் சிக்னல்களில் 'ஸ்டாப்லைன்' கோட்டை தாண்டி நிற்க கூடாது. அப்படி நின்றால் அது விதி மீறல். இந்த குற்றத்திற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன் இந்த குற்றத்திற்கு அபராதம் விதிக்கப்படவில்லை. இனி 500 ரூபாய் வாங்கப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டாப்லைன்' கோட்டை தாண்ட கூடாது என்பது தொடர்பாக நேற்று சென்னை முழுவதும் 287 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை போலீசார் மேற்கொண்டனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications