ஏழைங்க வண்டி வாங்க கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இளைஞரின் தாயார்
சென்னை: பொறுமையாக போ என அட்வைஸ் பண்ணுங்க.. இல்லைன்னு சொல்லல.. அதற்காக ஏழ்மையாக உள்ளவங்க வண்டி வாங்க கூடாது என ரூல்ஸ் எதுவும் இருக்கிறதா? ஏழ்மையாக இருந்தால் இந்த வண்டியை வாங்க கூடாதா? தேவையின்றி யாரும் தப்பு தப்பாக பேச வேண்டாம் என கேடிஎம் பைக் வாங்கிய அஜய் என்ற வாலிபரின் தாய் கூறியுள்ளார்.
அஜய் என்ற இளைஞர் ரூ.2.72 லட்சம் மதிப்பிலான பைக் வாங்கி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு கடும் விமர்சனங்களை சிலர் தெரிவித்து இருந்தனர். பைக்கை பெற்றோரிடம் அடம்பிடித்து வாங்கியதாகவும், இந்த மாதிரி இளைஞர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுத்து பெற்றோர்கள் வாங்ககிக்கொடுக்க கூடாது என்றும் விமர்சனம் செய்து இருந்தனர். இந்த நிலையில் தான் அவரது தாய் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

விவசாயி மகன்
அரியலூர் மாவட்டம் கோரியாம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி அமுதா. இவர் விவசாயம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் அஜய். இவர் அருகில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
அஜய்க்கு கே.டி.எம் பைக் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. இதற்காக நீண்ட நாட்களாக பணம் சம்பாதித்து வந்து இருந்துள்ளார். படிக்கும் நேரத்திலேயே வேலைக்கு சென்று சிறிதளவு பணம் சேர்த்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது அத்தையுடன் ஷோரும் சென்று கே.டி.எம் பைக் வாங்கியிருக்கிறார்.
நீண்ட நாள் ஆசை பலித்தது என்பதால், அந்த பைக் வாங்கும்போது பைக்கிற்கு மாலை அணிவித்து வீடியோ எடுத்துள்ளார். பின்னர் இதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்போது இந்த வீடியோ டிரெண்ட் ஆனது. அந்த வீடியோவில் அஜய்யின் அத்தை தனலட்சுமி கழுத்தில் நகை கூட இல்லாமல் இருந்தது. இதனா இதை வைத்து சிலர் விமர்சிக்க தொடங்கினர்.
இந்த பைக் வாங்க கூடாதா?
மேலும் பலரும் அம்மா அப்பாவை கஷ்டப்படுத்தி இவ்வளவு பெரிய தொகை செலவு செய்து பைக் வாங்க வேண்டுமா? என விமர்சனமும் செய்ய தொடங்கினர். 2.72 லட்சம் கொடுத்து இந்த பைக் எதற்கு எனவும் சில நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. சிலர் ஏன் வாங்கக் கூடாதா என்றும் ஆதரவாக பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தன் மகனுக்கு ரூ.2.72 லட்சம் மதிப்பிலான பைக் வாங்கியது குறித்து அஜய்யின் தாய் அமுதா விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஏழ்மையாக இருந்தால் ஏன் இந்த பைக் வாங்க கூடாதா என்று கூறியுள்ளார். எங்கள் உழைப்பு பணத்தில் வாங்கிய பைக்கில் யாருக்கு என்ன பிரச்சனை? எங்களை பற்றி யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கேள்வி எழுப்பினார். அவரது தாய் அமுதா கூறியதாவது:-
அசிங்கமாக கமெண்ட் செய்கிறார்கள்
என் பையன் ஆசைப்பட்டு இருக்கிறான். வண்டி வாங்கி கொடுத்து இருக்கிறோம். அவ்வளவு தான். என் பையனை பொறுமையாக போக சொல்லியிருக்கிறேன். நிறைய பேர் அசிங்கம் அசிங்கமாக கமெண்ட் செய்கிறார்கள். தயவு செய்து எல்லாரிடமும் கேட்டுக்கிறேன்.. என் பையனை விமர்சிக்காதீங்க.. அட்வைஸ் பண்ணுங்க வேகமாக போக வேண்டாம் என்று..
ஆனால் அதற்காக ஏழ்மையாக இருந்தால் இந்த வண்டியை வாங்க கூடாதா? ஏழ்மையாக உள்ளவங்க வண்டி வாங்க கூடாது என ரூல்ஸ் எதுவும் இருக்கிறதா? அப்படி எதுவும் இல்லைல்லா.. என் பையன் ஆசைப்பாட்டான் வாங்கி கொடுத்து இருக்கிறேன்.. அவ்வளவு தான். தேவையின்றி யாரும் தப்பு தப்பாக பேச வேண்டாம். என்று கூறினார்.












Click it and Unblock the Notifications