Veeralakshmi: விஜய் ரசிகர்களுக்கு யாரும் பெண் கொடுக்காதீங்க! காதலிக்காதீங்க! வீரலட்சுமி ஆவேசம்
சென்னை: விஜய்யின் ரசிகர்களுக்கு தயவு செய்து திருமணத்திற்காக யாரும் பெண்ணை கட்டிக் கொடுக்காதீர்கள், அது போல் ரசிகைகளுக்கு மாப்பிள்ளையையும் கொடுக்காதீர்கள் என தமிழர் முன்னேற்றப் படை தலைவி வீரல்டசுமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து வீரலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: விஜய் மீது யாரும் அவதூற பரப்பவில்லை. நடந்ததைதான் விமர்சிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் தமிழர்களை சுட்டுக் கொன்றதை எதிர்த்து நான் என் கட்சியினருடன் போராட்டம் நடத்தினேன்.
அப்போது அந்த போராட்டத்தில் ஒரு கலவரம் நடந்தது. அப்போது நானே என் கட்சி பொறுப்பாளர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். மேலும் அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டதால் என்னையும் கைது செய்ய உத்தரவிட்டதை அடுத்து நானாகவே காவல் நிலையத்தில் சரண்டர் ஆகி, புழல் சிறையில் 20 நாட்கள் இருந்து ஜாமீனில் வெளியே வந்து, 10 ஆண்டுகளாக அந்த வழக்கை நடத்தி வெற்றி பெற்றேன்.
ஒரு பெண்ணான நானே போராடிய நிலையில் விஜய் ஏன் அங்கிருந்து ஓடி ஒளிந்தாரு, கரூர் சம்பவம் அவரால்தான் நடந்தது. ஒரு கூட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை. ஒரு கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டால் அதற்கேற்ப போலீஸ் குவிக்க மாட்டார்கள். தொண்டர்களும் நிர்வாகிகளும்தான் பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.
காலை 11.30 மணி கூட்டத்திற்கு லேட்டாக விஜய் வந்தார். சரி வந்ததும் நிறைய பேர் உயிரிழக்கிறார்கள் என்பதை விஜய் ரசிகர் ஒருவர் விஜய்க்கு சைகை மூலம் காட்டினார். அதையும் விஜய் பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு அதிகாரி விஜய்யிடம் போய் உயிரிழப்புகளை கூறினார். ஆனால் விஜய் அங்கிருக்கும் மக்களை அங்கிருந்து கலைந்து போக சொல்லாமல் அவர் முதலில் தப்பியோடினார்.
விஜய் செய்தது மனிதாபிமானமற்ற செயலாகும். விஜய்க்காக 41 பேர் உயிரிழந்த நிலையிலும் அவரது கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடி அரை கம்பத்தில் பறக்கவில்லை. எந்த வாகனம் 41 பேர் காவு வாங்கியதோ அந்த பிரச்சார வாகனத்திற்கு ஆயுத பூஜை கொண்டாட்டத்தை நடத்தியுள்ளனர்.
41 உயிர்களுக்கு நீதி கிடைக்க, இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எந்த தடையும் ஏற்படாதவாறும் , இதனால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நபர்களை கைது செய்ய கோரி காவல் நிலையத்திற்கு வந்துள்ளேன்.
விஜய்க்கு ரசிகனாக இருப்பவரை தமிழகத்தில் எந்த பெண்ணும் காதலிக்காதீங்கள், திருமணம் செய்யாதீர்கள். அது போல் விஜய்யின் ரசிகைக்கு தமிழகத்தில் யாரும் மாப்பிள்ளை கொடுக்காதீர்கள், எந்த ஆண்மகனும் காதலிக்காதீர்கள். கரூர் மரணங்களுக்காக விஜய்க்கு தமிழக மக்கள் கொடுக்கும் சரியான தண்டனை இதுதான்.
பாஜக அனுப்பிய உண்மைக் கண்டறியும் குழுவில் இருந்தது ஹேமமாலினி. அவருக்கு கரூர் குறித்து என்ன தெரியும். அவர் பேசும் பாஷை நமக்கு புரியாது, நாம் பேசும் மொழி அவருக்கு புரியாது. அப்படியிருக்கும் போது அவரை எதற்காக அனுப்பினார்கள். இவ்வாறு வீரலட்சுமி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
-
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications