சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மே 31ம் தேதி வரை.. தமிழகத்திற்கு விமானத்தை இயக்க வேண்டாம்.. தமிழக அரசு ஸ்பெஷல் கோரிக்கை.. ஏன்?

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மே 31ம் தேதி வரை விமான சேவையை தொடங்க வேண்டாம் என்று தமிழக அரசு மத்திய அரசின் விமான போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மே 31ம் தேதி வரை விமான சேவையை தொடங்க வேண்டாம் என்று தமிழக அரசு மத்திய அரசின் விமான போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

Recommended Video

    Flight Service To Chennai | சென்னையில் பயணிகள் விமான சேவை தொடங்குமா?.. நீடிக்கும் குழப்பம்..

    நாடு முழுக்க வரும் திங்கள் கிழமையில் இருந்து விமான போக்குவரத்து தொடங்குகிறது. முதல் கட்டமாக பெரு நகரங்களுக்கு இடையே மட்டும் விமான போக்குவரத்து செயல்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி வருகிறது.

    முக்கியமாக ஏற்கனவே விமான போக்குவரத்துக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி உள்ளது. அதோடு டிக்கெட் விலைக்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானின் கராச்சியில் பயங்கர விபத்து.. குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்பாகிஸ்தானின் கராச்சியில் பயங்கர விபத்து.. குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்

    தமிழ்நாடு என்ன

    தமிழ்நாடு என்ன

    அதன்படி தமிழகத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து விமான போக்குவரத்து தொடங்க உள்ளது. இதற்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சென்னை விமான நிலையத்திற்கு செல்லும் விமானங்களுக்கான புக்கிங் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மே 31ம் தேதி வரை விமான சேவையை தொடங்க வேண்டாம் என்று தமிழக அரசு மத்திய அரசின் விமான போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

    கோரிக்கை என்ன

    கோரிக்கை என்ன

    அதன்படி தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகம் இருக்கிறது. இப்போது விமான போக்குவரத்தை தொடங்கினால் கேஸ்கள் இன்னும் அதிகரிக்கும். இது சரியாக வராது. அதனால் விமான போக்குவரத்தை 31ம் தேதிதான் தொடங்க வேண்டும். சென்னையில்தான் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. அதனால் அங்கு தளர்வுகளை கொண்டு வர முடியாது. அங்கு பேருந்து வசதியும் இல்லை.

    வேறு விமான நிலையம்

    வேறு விமான நிலையம்

    இதனால் சென்னை விமான நிலையத்திற்கு விமானத்தை இயக்க முடியாது. அதேபோல் தமிழகத்தில் வேறு விமான நிலையத்திற்கும் விமானத்தை இயக்க முடியாது. ஏனென்றால் வெளிமாநிலத்தில் இருக்கும் பலர் சென்னையை சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழகத்தின் பிற மாவட்ட விமான நிலையங்களுக்கு சென்றால், அங்கிருந்து சென்னைக்கு வர போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால், கொரோனா மேலும் பரவ தொடங்கும்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இது ஆபத்தானது என்று தமிழக அரசு தனது கடிதத்தில் குறிப்பிடத்தக்கது. அதேபோல் மத்திய விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள இந்த கடிதத்தில், விமானத்தில் இப்படி வரும் நபர்களை தனிமைப்படுத்த அவசியம் இல்லை. அவர்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறியுள்ளது. இதனால் கொரோனா பரவல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    பதில் இல்லை

    பதில் இல்லை

    இதையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு விமான போக்குவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் மத்திய விமான போக்குவரத்து துறை இதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்து உள்ளது.

    English summary
    Don't start flight service till May 31 in Tamilnadu asks TN govt to Center government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X