இலவசங்கள் வழக்கு: நீங்கதான் புத்திசாலி கட்சி என்று நினைக்கிறீர்களா? திமுகவிடம் தலைமை நீதிபதி காட்டம்
சென்னை: இலவசங்கள் தொடர்பான வழக்கில் திமுக தரப்பு வழக்கறிஞர் எம்பி வில்சனிடம் தலைமை நீதிபதி ரமணா முக்கியமான கேள்விகளை எழுப்பினார். நீங்கள் மட்டும்தான் புத்திசாலி கட்சி என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா... நீங்கள் பேசுவதை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை என்று நினைக்காதீர்கள் என்று தலைமை நீதிபதி விமர்சனம் வைத்தார்.
அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்க கூடாது. இலவசங்களை வழங்கும் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜகவை வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்த திமுக, ரிட் மனு மூலம் தங்களையும் மனு தாரராக சேர்த்துக்கொண்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு வைத்த வாதத்தில், இலவசங்களை நாங்கள் முற்றிலுமாக எதிர்க்கவில்லை. ஆனால் அனைத்து திட்டங்களையும் இலவசமாக வழங்க கூடாது. இது மக்களை பாதிக்கும்.
இப்படி இலவச திட்டங்கள் வழங்கப்படுவதால் மற்ற திட்டங்கள் சிக்கலுக்கு உள்ளாகிறது. மற்ற வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாமல் போகிறது என்று தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம்
இந்த வழக்கில் நேற்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம்,இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது. அப்படி வழங்கும் கட்சிகளை தடை செய்வது பற்றி ஆலோசிக்க முடியாது, என்று உறுதியாக கூறியது. அதே சமயம் இலவசங்கள் என்றால் எது என்று வரையறுக்க வேண்டும். கல்வியை இலவசமாக வழங்குவது இலவச திட்டமா? அல்லது அடிப்படை உரிமையா என்று பார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

வேறு வேறானவை
இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வேறு வேறானவை. அவற்றுக்கு இடையில் மெல்லிசான கோடு போட வேண்டும். இலவசங்கள் காரணமாக மாநிலங்களின் பொருளாதாரம் பாதிக்கிறதா என்று பார்க்கக் வேண்டும் முறையற்ற இலவசங்கள் தொடர்பான அறிவுப்புகள் சரியா என்பதை ஆராய அமைப்பு ஒன்றை வேண்டுமானால் உருவாக்கலாம். இலவச மின்சாரம், இலவச தண்ணீர் ஆகியவை நலத்திட்டங்களா என்று பார்க்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் வாதம் வைத்தது.

திமுக மனு
இந்த வழக்கில் இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்த திமுக, ரிட் மனு மூலம் தங்களையும் மனு தாரராக சேர்த்துக்கொண்டது. இலவசங்கள் காரணமாக மக்களின் அடிப்படை பொருளாதாரம் உயரும். இதற்கு பொருளாதார ரீதியாக சான்றுகள் உள்ளன. மக்களை வறுமையில் இருந்து மீட்டு எடுக்க இலவசங்கள் உதவியாக இருக்கும் என்று வாதம் வைத்தது. இன்று இந்த வழக்கில் திமுக சார்பாக எம்பி வில்சன் வாதிட வந்தார்.

ரமணா கோரிக்கை
திமுக வழக்கறிஞர் எம்பி வில்சன் வாதிடும் போது தலைமை நீதிபதி ரமணா குறுக்கிட்டு முக்கிய கருத்து தெரிவித்தார். அதில், உங்கள் கட்சியை பற்றி நான் நிறைய சொல்ல வேண்டும். நீங்கள் மட்டும்தான் புத்திசாலி கட்சி என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா?. நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் காதில் வாங்காமல், கேட்காமல் இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள், என்று குறிப்பிட்டார். யார் பெயரையும் குறிப்பிடாமல் தலைமை நீதிபதி விமர்சனம் வைத்தார்.

வழக்கறிஞர் காட்டம்
இலவசங்களுக்கு எதிரான மனு தாக்கல் செய்தவரின் வழக்கறிஞரும் திமுகவிற்கு எதிராக வாதம் வைத்தார். இலவசங்களுக்கு எதிரான மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், உங்கள் தமிழ்நாடு நிதி அமைச்சர் பேசுவதை நாங்கள் டிவியில் பார்த்தோம். அவர் உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக பேசுவதை பார்த்தோம். அவர் அப்படி பேசுவது தவறு, என்று குறிப்பிட்டார். பிடிஆருக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வெளிப்படையாக கருத்து எதுவும் சொல்லாத நிலையில், வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் நிதி அமைச்சர் என்று குறிப்பிட்டு விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications