நீங்க கவலைப்படாதீங்க.. தழுதழுத்த வைகோ.. கையை பிடித்த திருமா.. திடீரென வீட்டுக்கு போய்.. கலக்கம்
வைகோ கையை பிடித்து திருமா அன்பாக விளக்கம் அளித்துள்ளார் .
சென்னை: நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டிற்கு சென்ற விசிக எம்பி தலைவர் திருமாவளவன் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பு இரண்டு கட்சியினர் இடையிலும் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களாக திருமா தெரிவிக்கும் பல்வேறு கருத்துக்கள் அரசியல் ரீதியாக விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் பாமக - திமுக இணைந்தால் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம் , அதேபோல் பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டோம் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்தார். சென்னையில் பாஜகவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது திருமா இதை தெரிவித்தார்.
அதில், பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம், என்று கூறி இருந்தார்.

விவாதம்
அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் இருக்க மாட்டோம். இந்தியாவில் யாருக்காவது இப்படி சொல்ல தைரியம் இருக்கிறதா?, தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த யுத்தம் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவிற்கும் இடையிலான யுத்தம். நான் கருத்தியல் ரீதியாக சவால் விடுகிறேன். கருத்தியல் ரீதியாக மோதிக்கொள்ள தயாரா? கருத்தியல் ரீதியாக சண்டை போட தயாரா? ஓட ஓட விரட்டி அடிப்போம், என்று கூறினார். திமுக - பாமக நெருக்கம் ஆகி வருவதாக செய்திகள் வந்த நிலையில்தான் திருமா இப்படி கூறினார். அதாவது திமுகவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பது போல அவரின் பேச்சு இருந்தது. இது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று திருமா விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

முற்றுப்புள்ளி
இந்த நிலையில்தான் சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசுகையில், தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் தலைவர்களில் யாரையும் பிரபாகரன் நம்பவில்லை, என்று கூறினார். இதற்கு செய்தியாளர்.. அப்படி என்றால் வைகோவையும் நம்பவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு திருமா பதில் சொல்லாமல் கடந்து சென்றார். இதனால் வைகோவை திருமா விமர்சனம் செய்வது போன்ற தொனி ஏற்பட்டது. இணையத்தில் மதிமுகவினர் பலர் திருமாவை விமர்சனம் செய்ய தொடங்கினர். பலர் வரிசையாக திருமாவிற்கு எதிராக போஸ்ட் செய்தனர்.

போஸ்ட்
மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கூட.. இந்த பேட்டி எங்களுக்கு வருத்தத்தை கொடுப்பதாக கூறினார்.இந்த நிலையில்தான் வைகோவிற்கு போன் செய்து திருமா தனது பேட்டி பற்றி விளக்கி உள்ளார். ஆனால் மனம் கேட்காத திருமா பின்னர் நேரடியாகவும் சென்று வைகோவிடம் விளக்கி உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டிற்கு சென்ற விசிக எம்பி தலைவர் திருமாவளவன் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார். வைகோ கையை பிடித்து திருமா அன்பாக விளக்கம் அளித்துள்ளார் . இதற்கு பின் செய்தியாளர்களிடம் தழுதழுத்த குரலில் பேசிய வைகோ, திருமா என்னுடன் அன்பாக பழக கூடியவர்.

விவாதம்
அவரின் பேட்டியை வைத்து தேவையற்ற விவாதங்களை தவறாக செய்து வருகின்றனர். தவறான விவாதம் உலவிக்கொண்டு இருக்கிறது. அவர் என்னை மிகப்பெரிய உயரத்தில் வைத்து இருப்பதாக கூறினார். அதை கேட்டதும் என் மனதிற்கு குளிர்ச்சியாக இருந்தது. நீங்கள் கவலைப்பட வேண்டாம், எந்த வருத்தமும் இல்லை என்று கூறினேன். அவரிடம் போனில் பேசியும் கூட அவர் என்னிடம் வந்து பின்னர் நேரில் விளக்கம் அளித்தார். நாங்கள் பல விஷயங்களை பேசினோம், என்று வைகோ அன்பாக கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications