யானை வாயில் தலையை விட்டுக்கொண்ட டிரம்ப்.. இந்தியாவை சீண்டி தவறு செய்துவிட்டார்.. வல்லுனர் வார்னிங்
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய இறக்குமதிப் பொருட்கள் மீது 50% வரி விதித்திருக்கும் நிலையில், பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் இது குறித்து அமெரிக்காவிற்கு தனது கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தியாவைப் பற்றி துளியும் கவலைப்படுவதில்லை. இதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தியா நம்முடன் நெருக்கமாக இருக்க வேண்டும். சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பில் அமெரிக்காவுடன் சேர்வதால், இந்தியா நீண்டகால பாதுகாப்பைப் பெறாது. இந்தியாவிற்கு அமெரிக்கா தேவை இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு இந்தியா தேவை. இந்தியா உலகில் சுதந்திரமான நிலைப்பாடு கொண்ட ஒரு பெரிய சக்தி. டிரம்ப் வரிகள் குறித்துச் செய்யும் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது,

இந்தியா சீனாவுடன் நெருக்கமாக விடக்கூடாது. நம்முடன் நெருக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் டிரம்ப் அதற்கு எதிராக செயல்படுகிறார். அதை அனுமதிக்க கூடாது" என்று கூறினார்.
நான் இந்தியாவில் இருந்தபோது இந்தியா அமெரிக்கா நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு நல்ல பங்காளியாக இருக்கும் என்றேன். ஆனால் அப்படிப்பட்ட இந்தியாவை அமெரிக்கா பகைத்துக்கொள்வது சரியாக இருக்காது என்று கூறி உள்ளார்.
டிரம்ப் இந்தியா மோதல்
இந்தியாவிடம் வைத்துக்கொள்ளாதீர்கள்.. ரொம்ப ஆபத்தான முடிவு.. என்று ஜேபி மோர்கன் சேஸ் & கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்தது கவனம் பெற்றுள்ளது. டிரம்ப் இப்போது வரி விதிப்பு எச்சரிக்கைகளை விடும் நிலையில் ஜேபி மோர்கன் சேஸ் & கோ வார்னிங் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை பெருமளவில் வாங்குவதுடன், வாங்கப்பட்ட எண்ணெயின் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு விற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரால் கொல்லப்படும் மக்கள் குறித்து இந்தியர்களுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்.. ரஷ்யாவிடம் இந்தியா குறைந்த விலைக்கு எண்ணெய் வாங்கி அதை மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கிறது" என்று எச்சரித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் வெளியுறவுத்துறைக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமான சரிவை இருநாட்டு உறவு எட்டி உள்ளது.
இந்தியா மீது அமெரிக்கா வரி
அமெரிக்காவின் இந்த 50% வரிவிதிப்பு, இன்று (ஆகஸ்ட் 27, 2025) இந்திய நேரப்படி காலை 9:31 மணிக்கு அமலுக்கு வந்துள்ளது. இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக 25% சேர்க்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடன் பொருளாதாரத் தொடர்பு வைத்துள்ள நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் வரிவிதிப்பு நடவடிக்கையின் உச்சமாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த புதிய வரிவிதிப்பை, இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தியா மீது டிரம்ப் வரி போட காரணம்.. இந்தியா மீது வரி போட்டால் இந்தியா நிறுவன பொருட்களை, இந்திய உற்பத்திகளை அமெரிக்கர்கள் வாங்குவதை குறைப்பார்கள் என்ற எண்ணம்.
அதாவது இந்திய பொருட்களின் விலை அதிகமாக உள்ளது என்று மக்கள் வாங்க மாட்டார்கள் என்று டிரம்ப் நினைத்தார். இதையடுத்தே இந்தியா மீது டிரம்ப் கடுமையான வரிகளை விதித்துள்ளார். ஆனால் இது அமெரிக்காவின் சில்லறை வியாபாரிகளையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications