பட்டா வாழ்நாளில் வாங்க முடியாது.. வீட்டு மனை வாங்கும்போது... மறந்தும் இந்த தவறை செய்துவிட வேண்டாம்
சென்னை: நிலத்தின் வகை என்னவென்று தெரியாமல் வாங்கிவிட்டு அவதிப்பட வேண்டாம்.. நீர் நிலை ஆக்கிரமிப்பு நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் போது பார்க்கிற்கு ஒதுக்கப்பட்ட நிலம், வீட்டு மனைகள் அமைக்கும் போது அரசுக்கு வழங்கப்பட்ட விளையாட்டு மைதான நிலங்கள், ரேஷன் கடை, பூங்கா போன்றவை அமைக்க ஒதுக்கப்பட்ட நிலங்கள், கள்ளர் ஜாதி நிலங்கள், ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள், பஞ்சமி நிலங்களை தயவு செய்து வாங்கிவிட வேண்டாம்..
நிலமற்ற ஏழை பட்டியல் பிரிவு மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக 1892-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசால் இலவமாக வழங்கப்பட்ட நிலங்களை பஞ்சமி நிலம் அதாவது டி.சி நிலம் 0 (Depressed Class Land) என்று அழைக்கிறார்கள்.. A.D.Patta - Adi Dravidar Patta இந்த நிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

ஆங்கிலேயர் இந்திய அரசின் வருவாய்த்துறை பதிவேடுகளில் உள்ள விளை நிலங்களில் பஞ்சமி நிலம் என்பதை தனியாகவும், மற்ற நில வகைகளை நத்தம் புறம்போக்கு, புறம்போக்கு, மானாவாரி, தரிசு, நீர்ப்பாசன சாகுபடி நிலம் என்றும் வகைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை பட்டியலினம் மற்றும் பழங்குடியினரின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த தமிழகத்தில், 12 லட்சம் ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஆர்டிஐ தகவலின் படி, தற்போது பஞ்சமி நிலங்கள் மொத்தம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 133 ஏக்கர் மட்டுமே கண்டறியப்பட்டிருக்கின்றன.
ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 113 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் 11 ஆயிரத்து 556 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. மாற்று சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் பரப்பளவு சுமார் 11, 556 ஏக்கர் என்று கூறப்படுகிறது. இதில் சுமார் 933 ஏக்கர் நிலங்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பஞ்சமி நிலங்களை பொறுத்தவரை, பயிர் செய்தோ அல்லது வீடு கட்டிக் கொண்டோ பட்டியல் சமூக மக்கள் அனுபவிக்க முடியும். பஞ்சமி நிலங்களைப் பிற சமூகத்தினர் வாங்க இயலாது. அப்படியே மாற்று சமூகத்தினர் ஆக்கிரமித்தாலும் வாங்கினாலும் அது செல்லாது என்பது சட்டமாகும்.
எனவே நீங்கள் வாங்க போகும் நிலம் பஞ்சமி நிலம் என்பதை எப்படி அறிய முடியும்: எப்போதுமே இடம் வாங்க போகிறீர்கள் என்றால், முதலில் போக வேண்டிய இடம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகும். அங்கு தான் சம்பந்தப்பட்ட மனை அல்லது இடம் பதிவேடுகளை புத்தகங்களில் பதிவேற்றி வைத்திருப்பார்கள். அங்கு போய் நீங்கள் வாங்க போகும் நிலத்தின் சர்வே நம்பரை சொன்னால் போதும், அந்த நிலம் கண்டிசன் நிலம், கிரயம் தடை செய்யப்பட்ட நிலமா, டி.சி நிலமா (பஞ்சமி), கள்ளர் நிலமா, ஆதிதிராவிடர் நிலமா, கோயில் நிலமா அல்லது எந்த மாதிரியான நிலம் என்ற குறிப்புகள் கண்டிப்பாக இருக்கும். இப்படி குறிப்புகள் இருந்தால் எச்சரிக்கையாக செயல்படமுடியும்.
நீர் நிலை ஆக்கிரமிப்பு நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் போது பார்க்கிற்கு ஒதுக்கப்பட்ட நிலம், வீட்டு மனைகள் அமைக்கும் போது அரசுக்கு வழங்கப்பட்ட விளையாட்டு மைதான நிலங்கள், ரேஷன் கடை, பூங்கா போன்றவை அமைக்க ஒதுக்கப்பட்ட நிலங்கள், கள்ளர் ஜாதி நிலங்கள், ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள், பஞ்சமி நிலங்களை தயவு செய்து வாங்கிவிட வேண்டாம். என்னதான் பட்டாவே இருந்தாலும் மேற்கண்ட நிலங்களை மறந்தும் வாங்கிவிட வேண்டாம். நிலம் தொடர்பாக முழு தகவல்களை அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆர்.எஸ்.எல்.ஆர் (ReSettlement Land Record - RSLR) ஆவணத்தை பெற்று பாருங்கள். உங்களுக்கு நிலத்தின் வகை, பல வருடம் முன்பு எப்படி இருந்தது என்பதை தெளிவாக அறிய கிராம கணக்கு முக்கியம் ஆகும். இதில் தான் நிலத்தின் வகையை தெளியாக அறிய முடியும்
நகர்ப்பகுதிகள் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வாங்கிய அல்லது வாங்க விரும்பும் குறிப்பிட்ட மனை அல்லது நிலம் குறித்து சந்தேகம் எழும் நிலையில் பட்டா, சிட்டா, அடங்கல் அ-பதிவேடு மற்றும் RSLR ஆகிய ஆவணங்களை கண்டிப்பாக பாருங்கள். இப்படி வில்லங்கமான நிலங்களை வாங்கியவர்கள் எப்படியாவது விற்க வேண்டும் என்று இப்போது பார்க்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட நிலங்களை வாங்கி சிக்கிக்கொள்ளாதீர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications