மதுராந்தகத்தில் மோடிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிறுமி! நெகிழ்ச்சியில் கையை நீட்டி பிரதமர் சொன்ன வார்த்தை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருக்கிறார். மதுராந்தகத்தில் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த சிறுமி செய்த செயலால்.. பிரதமர் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
மோடி பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் சிறுமி ஒருவர்.. மோடியின் தாயாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, அதை கொடுக்க காத்திருந்திருந்தார். இதனை கவனித்த மோடி.. "சிறுமி ஒருவர் எனது தாயாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு எனக்கு கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார். நண்பர்களே அந்த புகைப்படத்தை வாங்கி என்னிடம் கொடுங்கள்.

சிறுமியின் முகவரியையும் பெற்று கொடுங்கள். நான் சிறுமிக்கு வாழ்த்து கடிதத்தை அனுப்புகிறேன். எனது தாயாரின் புகைப்படத்தை கொண்டுவந்ததற்கு நன்றி" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications