"தாடி பாலாஜியின் மனைவி" இதெல்லாம் எதுக்கு போடுறீங்க.. நானும் ஃபேமஸ்தானே.. நித்யா பளீச்
சென்னை: என்னை தாடி பாலாஜியின் மனைவி என ஏன் அழைக்கிறீர்கள், நானும் பிரபலம்தான் என நித்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை மாதவரம் சாஸ்திரி நகரில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா தனது மகள் போஷிகாவுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவர் வசித்து வருகிறார்.
இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருவதாக தெரிகிறது. தாடி பாலாஜி , நித்யாவிடம் சண்டையிட்டால் கூட எதிர் வீட்டில் வசிக்கிறாரே என்ற ரீதியில் கூட மணி தட்டி கேட்கமாட்டாராம். நின்று வேடிக்கை பார்ப்பாராம்.

தாடி பாலாஜி
ஒரு முறை தாடி பாலாஜி, நித்யாவை அடித்த போது கூட அவர் தடுக்கவில்லையாம். தன்னை காப்பாற்றும்படி மணியிடம் கேட்டும் அவர் தலையிடாமல் வேடிக்கை மட்டும் பார்த்தாராம். இதிலிருந்தே நித்யாவுக்கும் மணிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. தனது வீட்டில் நடக்கும் விஷயங்களை எதிர் வீட்டில் இருக்கும் மணி வேவு பார்த்து தாடி பாலாஜியிடம் சொல்வதாக நித்யா குற்றம்சாட்டியுள்ளார்.

கார் கண்ணாடி
இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி மணியின் கார் கண்ணாடியை நித்யா கல்லெறிந்து சேதப்படுத்தியதாக சிசிடிவி காட்சிகளை கொண்டு மணி, மாதவரம் போலீஸில் புகார் அளித்தார். இந்த வழக்கில் நித்யா மாதவரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை போலீஸார் எச்சரித்து ஜாமீனில் வெளியே அனுப்பினர்.

சிசிடிவி காட்சிகள்
இந்த நிலையில் தன் மீதான சிசிடிவி காட்சிகள் எல்லாம் புனையப்பட்டவை என்றும் புனையப்பட்ட காட்சிகள் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றையும் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து நித்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த ஒரு வாரமாக எதிர்வீட்டுக்காரரான மணியுடன் கார் பார்க்கிங் பிரச்சினை இருந்து வருகிறது.

அவதூறு கருத்து
என்னையும் எனது மகளையும் அவர் தவறாக பேசி வந்தார். மணியின் காரை நான் கல்லை கொண்டு அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு, அந்த சிசிடிவி காட்சிகளும் புனையப்பட்டவை. சினிமா படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டிற்கு சென்ற போது கீழே விழுந்த சாவியை தேடினேன். அதை அவர்கள் கற்களை தேடுவதாக நினைத்து கொண்டு என் மீது பொய் புகார் கொடுத்துள்ளனர்.

சிசிடிவி காட்சி காட்டி மிரட்டல்
அந்த சிசிடிவி காட்சியை மணி குடும்பத்தினர் என்னிடம் காட்டி நிறைய பணம் கேட்டனர். அதற்கு நான் மறுத்தேன். இதனால் எனது பெயரை களங்கப்படுத்த இப்படி ஒரு புகாரை கொடுத்துள்ளார்கள். நான் இதை போலீஸில் கூறியும் அவர்கள் அதை கேட்காமல் என்னை கைது செய்துவிட்டார்கள். பாலாஜியுடனான பிரச்சினையின் போது என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதை நான் கொடுக்காததால் என்னை பழிவாங்குகிறார்கள் என நித்யா தெரிவித்தார்.

நானும் ஃபேமஸ்தான்
மேலும் கடைசி வரை எதிர் வீட்டுக்காரருடன் என்ன பிரச்சினை என்பதை நித்யா சொல்லவே இல்லை. அதை நிருபர்கள் கேட்டும் கண்டுகொள்ளாத நித்யா, பாஜக குறித்தும் அதில் தான் சேரப்போவது குறித்தும், அண்ணாமலை குறித்தும் பேசினார். மேலும் இறுதியாக நித்யா கூறுகையில் செய்தி வெளியிடும் போது தாடி பாலாஜியின் மனைவி என என்னை குறிப்பிடாதீர்கள். நானும் ஃபேமஸ்தான் என நித்யா தெரிவித்தார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications