₹ தேவநாகரி எழுத்து என்பதால் பட்ஜெட்டில் ரூபாய் லோகோவை தமிழில் மாற்றினோம்- ஜெயரஞ்சன் அசால்ட் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் ரூபாய் லோகோ மாற்றப்பட்டுள்ளது மிகப் பெரும் விவாதத்தை உருவாக்கி உள்ளது. தமிழக பட்ஜெட்டில் ரூபாய்க்கான குறியீடான ₹ என்ற இலச்சினை பயன்படுத்தப்படுவதற்கு பதிலாக தமிழில் ரூபாய் என எழுதப்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் ரூ என்ற குறியீடு தமிழக பட்ஜெட்டில் பயன்படுத்தப்படுவது குறித்து தமிழ்நாடு திட்டக் குழுவின் துணைத் தலைவரான பொருளியல் அறிஞர் முனைவர் ஜெயரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2025- நாளை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் நாளைய பட்ஜெட்டில் அதிரடியான சலுகைகளை உள்ளடக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

tamilnadu budget 2025 budget 2025 rupee 2025 2025

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு முதல் முறையாக இன்று பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டது. தமிழ்நாட்டின் நிதிநிலைமை உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கியதாக இந்த பொருளாதார ஆயறிக்கை வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட பின்னர் திட்டக் குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக ஜெயரஞ்சன் கூறியதாவது: பொதுவாக பட்ஜெட்டில் நிதிநிலை குறித்த விவரங்கள் இடம் பெறும்; மத்திய அரசிடம் கிடைக்கப் பெற்ற நிதி எவ்வளவு? தமிழ்நாட்டுக்கான வருமானம் எவ்வளவு? உள்ளிட்டவை இடம் பெறும். அதேநேரத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் ஒவ்வொரு துறையிலும் எத்தகைய மாற்றங்கள் உருவாகி இருக்கிறது என்பதை விளக்குவதுதான் பொருளாதார ஆய்வறிக்கை.

சட்டசபையில் துறைசார்ந்த மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் போது துறைசார் வல்லுநர்கள் கருத்து தெரிவிப்பது வழக்கம்; ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் பொருளாதார நிலைமையை விவரிக்கிறது இந்த பொருளாதார ஆய்வறிக்கை. அதாவது தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லக் கூடியதுதான் பொருளாதார ஆய்வறிக்கை.

உதாரணமாக, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% என்ற அளவில் நிலையாக இருக்கிறது. இந்த பொருளாதார வளர்ச்சி எப்படியான மாற்றம் அடையும் என்பதை சொல்கிறது ஆய்வறிக்கை. தனிநபர் வருமான, சர்வதேச சிக்கல்களின் தாக்கம் ஆகியவற்றையும் பொருளாதார அறிக்கை பேசுகிறது. இவ்வாறு முனைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பட்ஜெட்டில் ₹ என்ற ரூபாய் லோகோ மாற்றப்பட்டு ரூபாய் என்பதைக் குறிப்பிடும் வகையில் தமிழில் ரூ என ஏன் குறிப்பிடப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒரே வரியில், தேவநாகரி (இந்தி. சமஸ்கிருத எழுத்துகளை எழுதப் பயன்படுத்துகிற முறை) எழுத்தான ₹ என்பதால் அதனைத் தவிர்த்து தமிழில் ரூ என பயன்படுத்துகிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+