கிட்ட கிட்ட நெருங்கி.. அபிநயா முகத்தை பார்க்க போன அஜித்.. அந்த ஃப்ரீஸர் பாக்ஸை தொட்டதுமே.. அடகடவுளே
ஃப்ரீஸர் பாக்ஸில் ஷாக் அடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது
சென்னை: இறந்துபோனவருக்கு அஞ்சலி செலுத்தவந்த நபரும், திடீரென இறந்துபோன சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியையும, பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது?
சென்னை திருவொற்றியூர், ராஜா கடை திருச்சினாங்குப்பத்தை சேர்ந்தவர் அபிநயா.. 16 வயது சிறுமி.. ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார்.
இவருக்கு கடந்த சில தினங்களாகவே காது வலி இருந்து வந்துள்ளது.. அதனால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.. தொடர்ந்து சிகிச்சையும் தரப்பட்டு வந்தது.

ஓகே ஓகே
ஆனால், அபிநயாவுக்கு காது வலி சரியாகவேயில்லை.. அதனால், ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லவும், அதற்கு குடும்பத்தினரும் சம்மதித்துள்ளனர்.. உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டது... ஆனால், 2 நாட்களுக்கு முன்பு அபிநயா இறந்து விட்டார்.. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.. காது வலிக்காக வந்தால், ஆபரேஷன் வரை கொண்டு சென்று, மகளை உயிரிழக்க செய்துவிட்டார்களே? தவறான ஆபரேஷனால்தான் அபிநயா இறந்ததாக சொல்லி, உறவினர்களும்,அந்த பகுதி மக்களும் கொந்தளித்தனர்..

அபிநயா பரிதாபம்
ஆபரேஷன் செய்தபோது, அபிநயாவுக்கு இதயதுடிப்பு அதிகமாகிவிட்டதாம்.. அதனால், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அதற்கு பிறகு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிகிறது.. இதனால், அபிநயாவின் உடலை வாங்க மறுத்து, மருத்துவமனை முன்பு போராட்டமும் நடத்தினர். இதையடுத்து, தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்த பிறகு, போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்..

ப்ரீசர் பாக்ஸ்
பின்னர், உறவினர்களிடம் அபிநயாவின் சடலம் ஒப்படைக்கப்பட்டது.. இதையடுத்து, அபிநயாவின் இறுதி சடங்குக்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர்.. அவரது இல்லத்திலேயே அபிநயாவின் உடலை ஃப்ரீசர் பெட்டியில் வைத்திருந்தனர்.. அந்த பகுதி மக்கள் மொத்த பேரும் திரண்டு, அஞ்சலி செலுத்தி வந்தனர்.. அப்போது அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவரும் அபிநயாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அஜித்துக்கு 19 வயதாகிறது.. ப்ரீசர் பெட்டியில் உள்ள அபிநயாவின் முகத்தை கிட்ட போய் பார்க்க போனார்..

கரண்ட் ஷாக்
அப்போது, ப்ரீசர் பாக்ஸில் கை வைத்தார்.. திடீரென ப்ரீசர் பாக்ஸில் மின்சாரம் பாய்ந்துவிட்டது.. இதில், அஜித் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.. இதனால் அங்கிருந்தோர் பதற்றமும், குழப்பமும் அடைந்தனர். ப்ரீசர் பாக்ஸில் கரண்ட் பாய்ந்துள்ளது என்பதை அறியாத சிலர், பெட்டியை யதேச்சையாக தொடவும், அவர்களுக்கும் மின்சாரம் தாக்கியது... அப்போதுதான், பாக்ஸில் கரண்ட் பாய்ந்துள்ளது அறிந்து அதிர்ச்சியானார்கள்.. அஜித் உட்பட மொத்தம் 5 பேருக்கு கரண்ட் ஷாக் அடித்துள்ளது..

ஃப்ரீஸர் பாக்ஸ்
இதில், 5 பேரையுமே மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால், பலத்த காயமடைந்த அஜித், மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.. மற்ற 4 பேருக்கும் தீவிரமான சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது-.. ஏற்கனவே, காது வலிக்கு சென்ற மாணவியை சடலமாக தந்துவிட்டார்களே என்று அந்த பகுதி மக்கள் ஆத்திரத்தில் உள்ளநிலையில், தோழிக்கு அஞ்சலி செலுத்த சென்ற இளைஞர் அஜித்தும் கண்ணெதிரே சுருண்டு விழுந்து உயிரிழந்ததால் அம்மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.. திடீரென நடந்த இந்த 2 அநியாயமான மரணங்களின் அதிர்ச்சியில் திருவொற்றியூரே உறைந்து போயுள்ளது..!!
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications