Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரப்பான், சோரியாசிஸிஸ், பொடுகு தொல்லையா?.. இருக்கவே இருக்கு அருமருந்து.. சொல்கிறார் டாக்டர் கவுதமன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடலில் ஏற்படக் கூடிய எல்லாவிதமான தோல் நோய்களையும் நீக்குவது எப்படி என்பது குறித்து வர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கவுதமன் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    தோல் நோய்களை குணப்படுத்த அருமருந்து.. டாக்டர் கவுதமன் பரிந்துரைக்கும் சிவனார் மருந்து கசாயம் - வீடியோ

    இதுகுறித்து டாக்டர் கவுதமன் கூறுகையில், உடலில் ஏற்படக் கூடிய எல்லாவிதமான தோல் நோய்களையும் நீக்கக் கூடிய அருமருந்து சிவனார் வேம்பு கசாயம் ஆகும். பொதுவாக ஆயுர்வேத மருத்துவத்தில் 3 வகையான சிகிச்சை முறைகள் உள்ளன.

    ஒன்று வியாதி விபரீதம் என சொல்வோம்- அதாவது நோய்க்கு நேரடியான மருந்துகளை கொடுத்தல், இன்னொன்று ஹேத்து விபரீதம் என சொல்வோம்- நோய் ஏன் ஏற்படுகிறது, இதை எப்படி குறைக்கலாம்? என்பதாகும்.

     இரு வேலைகள்

    இரு வேலைகள்

    மூன்றாவது உபயார்த்த காரியம் என்பதாகும். அதாவது ஒரு மருந்து இரு வேலைகளை செய்யக் கூடியதாகும். இந்த 3 வகைகளின் அடிப்படையில்தான் ஆயுர்வேதத்தில் சிகிச்சைக்கு திட்டமிடப்படுகிறது. உபயார்த்த காரியம் என்பது சிறப்பு சிகிச்சை எனப்படுவதாகும். அதாவது ஒருவருக்கு ஏற்படும் குறிப்பிட்ட நோய்க்கு சிகிச்சை அளிப்பதாகும்.

     தோல் நோய்

    தோல் நோய்

    சிலருக்கு கைகளில் தோல் நோய் இருக்கும், சிலருக்கு கால்களில் தோல் நோய் இருக்கும். முகத்தில் ஒரு தோல் நோய் இருக்கும். ஒரே உடம்பில் இரண்டு அல்லது மூன்று வகையான தோல் நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு. அதை குறைக்கும் வழிமுறைகளை பார்க்க வேண்டும். அப்போது நமக்கு குழப்பம் ஏற்படும்.

     சோரியாசிஸ்

    சோரியாசிஸ்

    ஒரு கரப்பான் இருக்கும். அதே நேரத்தில் ஒரு சோரியாசிஸ் இருக்கும். தலையில் பொடுகு பிரச்சினையும் இருக்கும். கரப்பானுக்கு மருந்து கொடுத்தால் அது சோரியாசிஸ்ஸை அதிகரிக்கும். சோரியாசிஸுக்கு மருந்து கொடுத்தால் தலையில் பொடுகு அதிகரிக்கும். இது போன்ற குழப்பமான நிலையில் நாம் செய்ய வேண்டும்.

     மருந்து

    மருந்து

    நோய்க்கான காரணத்தையும் குறைக்க வேண்டும். நோயையும் குறைக்க வேண்டும். உடலையும் சுத்தப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் செய்யக் கூடிய ஒரு மருந்தை கொடுக்க முடியுமா என நினைக்கும் போது இருக்கவே இருக்கிறது சிவனார் வேம்பு கசாயம்.

     தோல் வறட்சி

    தோல் வறட்சி

    இந்த கசாயத்தை குடித்தால் உடலில் ஏற்படக் கூடிய எந்த தோல் நோயாக இருந்தாலும் அதை போக்கும். கரப்பானாக இருந்தாலும் சரி, சோரியாசிஸாக இருந்தாலும் சரி, பொடுகாக இருந்தாலும் சரி தோல் வறட்சியாக இருந்தாலும் சரி வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி அவற்றை இந்த கசாயத்தை குடித்தால் விரட்டி விடலாம்.

     நோய்கள் சவால்

    நோய்கள் சவால்

    சில தோல் நோய்கள் சவாலாக இருக்கும். ஒரு 47 வயது பெண் பூப்படைந்தவுடன் அடிபாதத்தில் தோல் கருப்பாகவும், காலின் முட்டி முதல் முட்களை போர்த்தியது போன்று இருப்பதாகவும் இதற்காக நிறைய வைத்தியம் பார்த்துவிட்டடதாகவும் அது சரியாகவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் அந்த முட்கள் போன்ற இடத்தில் குளிர்ந்த காற்று பட்டுவிட்டால் மிகவும் வலியை கொடுக்கும் என்றும் வேதனை தெரிவித்தார்.

     100 நாட்கள்

    100 நாட்கள்

    பின்னர் அவருக்கு நான் சிவனார் வேம்பு கசாயத்தை கொடுத்தேன். காலை ஒரு வேளை உணவுக்கு முன்பு, இரவு ஒரு வேளை உணவுக்கு முன்பு என எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். ஒரு 100 நாட்கள் அவர்களை குடிக்குமாறு கூறினேன். அதனுடன் உடலை சுத்தப்படுத்தும் உணவு முறைகளையும் அவருக்கு அறிவுறுத்தினேன்.

     கை, கால்கள் முட்கள்

    கை, கால்கள் முட்கள்

    100 நாட்கள் கழித்து அவர் என்னை வந்து பார்த்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அப்போது 40 சதவீதம் அந்த முட்கள் குறைந்து இயல்பான தோல் அமைப்புக்கு வந்துவிட்டது. தொடர்ந்து 6 மாதங்கள் சாப்பிட சொன்னேன். பின்னர் அந்த கை, கால்களில் முட்கள் போன்று இருந்த நிலை முற்றிலும் குறைந்துவிட்டது.

     குத்தல் வலி

    குத்தல் வலி

    ஆனால் அந்த கருமை நிறம் மட்டும் மாறவில்லை. அதே நேரத்தில் குத்தல் வலி போன்றவை இல்லை. வெளிப்புறத்தில் தேங்காய் எண்ணெய் மட்டும் தடவுங்கள் என கூறியிருந்தேன். இந்த கசாயம் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன:

    • வேப்ப மரப்பட்டை
    • பூவரசன்பட்டை
    • சிவனார் வேம்பு
    • இவை மூன்றையும் 3 கிராம் அளவுக்கு எடுத்து 300 மில்லி தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து அதை 100 மில்லியாக காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வர அனைத்து தோல் நோய்களும் கட்டுப்படுத்தப்படும் என டாக்டர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+