புட்டு புட்டு வைத்த கிருஷ்ணசாமி.. "சொன்னேனே கேட்டீங்களா? அவங்க தலைமை செயலகம்" வந்தாங்களே".. என்னாச்சு
சென்னை: தலைமை செயலகத்துக்குள் சோதனை நடத்த அதிகாரிகள் சென்றபோதே, செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கையை முதல்வர் ஸ்டாலின் எடுத்திருக்க வேண்டும் என்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி,
பழனி தண்டபாணி நிலையத்தில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார்.

முக்கியமாக செந்தில் பாலாஜி விவகாரத்தில் திமுக நடந்து கொண்ட விதம் குறித்து, விமர்சித்திருந்தார்.. அத்துடன் செந்தில் பாலாஜி மீதான புகார்களை லிஸ்ட் போட்டு விவரித்தார்.. கிருஷ்ணசாமி தன்னுடைய பேட்டியில் சொன்னதாவது:
தமிழகத்தில் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் மோசடிகளை ஏற்கனவே ஆளுநரிடம், நாங்கள் தந்துள்ளோம்..
இல்லாவிட்டால் அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டின் முன் தலைகுனிந்து நிற்கவேண்டி வரும்...
முறைகேடு: தமிழகத்தில் உள்ள மதுக்கடை பார்களில் போலியான முகவரியை கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்துள்ளார். செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக இன்று முதல்வர் பேசுவது தவறு.. கைதுக்கு பயந்து நெஞ்சுவலி என்று செந்தில் பாலாஜி நாடகமாடுகிறார்... முறைகேடாக சம்பாதித்த பலநூறு கோடி ரூபாயை பல்வேறு நாடுகளில் ஹவாலா மூலமாக முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கைது: செந்தில்பாலாஜி நியாயமானவர் என்றால் கைதினை சட்டபூர்வமாக சந்திக்க வேண்டும். செந்தில்பாலாஜி மீது தமிழக மக்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.. அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்... 2016ம் ஆண்டில் அதிமுகவில் இருந்த செந்தில்பாலாஜி மீது குற்றம் சுமத்தி, ஸ்டாலின் அன்று கரூரில் பேசியிருந்தார்.. இப்போது, அவருக்கு ஆதரவாக பேசுவது எப்படி? திமுகவிற்கு வந்ததுமே, செந்தில்பாலாஜி புனிதராகி விட்டாரா?
நான் அப்பவே சொன்னேன்.. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்திருந்தால், அந்த ஆபத்து உங்களுக்கும் வந்து விடியும் என்று சொன்னேன்.. இப்போது நேற்று முன்தினம் செந்தில்பாலாஜியிடம் சட்டப்படி விசாரணை நடத்தியிருக்கிறார்கள்..
நிரபராதி: பிறகு தலைமை செயலகமும் போனாங்க.. ஆனால், தலைமை செயலகம் அதிகாரிகள் போனபிறகாவது, செந்தில் பாலாஜி மீது முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கணும்.. "அமைச்சரவையில் இருந்து இப்போதைக்கு செந்தில் பாலாஜியை நீக்கி வைக்கிறேன், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளட்டும்.. அதில், அவர் தன்னை நிபராதி என்று நிரூபித்துக்கொண்டு வரட்டும் என்று சொல்லணுமா? இல்லையா? முதல்வர் சொல்லவேயில்லையே.
திமுகவின் பகுத்தறிவுக்கும், முற்போக்குக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பகுத்தறிவற்ற செயல்களில் மட்டுமே திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழக மக்களை சினிமா, மது மயக்கத்திற்கு அடிமையாக்கி திமுக ஆட்சி நடத்துகிறது. தற்போது இளைஞர்களிடம் சினிமா மோகம் குறைந்து வருவதால் டாஸ்மாக்கிற்கு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் சயனைடு கலந்திருப்பது தெரிய வந்ததுள்ளது" என்றார் கிருஷ்ணசாமி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications