சாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி
பெண்ணை கட்டி வைத்து அடித்த சம்பவத்துக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: "சாந்தியை கரண்ட் கம்பத்தில் கட்டி வைச்சு அடிச்சாங்களே.. இதை ஏன் யாருமே கண்டிக்கவில்லை.." என்று கேள்வி எழுப்பி, "இது முற்போக்கு முகமூடிகளுக்கு இது சமர்ப்பணம்" என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி பொன்னுசாமி- செல்வி. இவர்களின் 25 வயதுடைய பெரியசாமி என்ற மகன், அதே ஊரை சேர்ந்த கொளஞ்சி என்பவரின் மகள் பவளியை காதலித்து வந்துள்ளார்.
விஷயம் வீட்டுக்கு தெரிந்ததும், பவளிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துவிட, காதலர்கள் இருவரும் சில நாள்கள் முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டனர். இதனால் இரு குடும்பத்தினர் இடையே பிரச்னை இருந்து வந்தது. 2 தினங்களுக்கு முன்பு பெரியசாமியின் தாய் செல்வியை, பவளியின் தந்தை கொளஞ்சி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

செல்வி
மேலும் "ஏன் உன் மகன் என் மகளை இன்னும் வீட்டிற்கு அழைத்து வந்து விடவில்லை, உன் மகன் என் மகளை எங்கே வெச்சிருக்கான்?" என்று கேட்டு செல்வியை சகட்டுமேனிக்கு திட்டி அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்தும் தாக்கினார். இது சம்பந்தமான போட்டோக்கள், வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளிவந்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொதிப்பு
வட மாநிலங்களில் மட்டுமே இதுவரை இப்படி நடக்கும் கொடூரம் நம்ம ஊரிலும் நடந்துள்ளதை பார்த்து, அதிலும் ஒரு பெண்ணை கட்டி வைத்து அடிப்பதை பார்த்து தமிழக மக்கள் கொதிப்படைந்தார்கள். இந்த சம்பவத்துக்குத்தான் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து, மற்ற அரசியல் கட்சி தலைவர்களையும் இது சம்பந்தமாக கேள்வி கேட்டுள்ளார்.

மின் கம்பம்
தன்னுடைய ட்விட்டர் பதிவில், "விருத்தாசலத்தை அடுத்த கிராமம் ஒன்றில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து மணந்ததற்காக அதே சமுதாய இளைஞனின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்திருக்கிறார் பெண்ணின் தந்தை. இது கண்டிக்கத்தக்கது. இதற்கு எதிராக எவரும் குரல் கொடுக்கவில்லை. முற்போக்கு முகமூடிகளுக்கு இது சமர்ப்பணம்!" என்று பதிவிட்டுள்ளார்.
|
ஒரே சமூகம்
காதலுக்கு தாம் எதிர்ப்பு இல்லை என்று பொதுவாக டாக்டர் ராமதாஸ் சொன்னாலும், எங்காவது, யாராவது காதலித்து, அதன்மூலம் வன்முறை நடந்தால் முதல் ஆளாக வந்து குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட ஜோதி ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். இருந்தாலும் டாக்டர் இந்த விஷயத்தில் தலையிட்டு கேள்வி எழுப்பி உள்ளது சரியானதே.

சங்கர்
குறிப்பிட்ட சாதி என்பதால், அது சார்ந்த கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்திருக்க வேண்டும். மேலும் செல்வியை கட்டிப் போட்டு அடித்த கொடூரத்துக்கு தங்கள் எதிர்ப்பினை அனைத்து கட்சி தலைவர்களுமே உடனடியாக தெரிவித்திருக்க வேண்டும். அதனால் ராமதாஸ் எழுப்பிய இந்த கேள்வி சரியானதே.. இருந்தாலும் அன்று சங்கர் துடிக்க துடிக்க வெட்டி கொன்றபோது, செய்தியாளர்கள் கேள்வி கேட்டதுக்கு "வேற கேள்வி இருந்தா கேளுங்கன்னு" டாக்டர் பேசியதும் நம்மால் மறக்க முடியவில்லைதான்!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications