சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரடங்கு தளர்வுகள் அபத்தமானவை; கொத்துக் கொத்தாக கொரோனா பரவும் - டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கு தளர்வுகள் அபத்தாமனவை என்றும் கொத்து கொத்தாக கொரோனா பரவவே வகை செய்யும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளதாவது:

Dr Ramadoss opposes Lockdown restrictions

நாளை முதல் தளர்வில்லா ஊரடங்கு என்பதால் நேற்றும், இன்றும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு தளர்வுகள் அபத்தமானவை. அனைத்து கடைகள், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொத்துக் கொத்தாக கொரோனா பரவுவதற்கே இது வழிவகுக்கும்!

சென்னையிலிருந்தும், பிற நகரங்களிலிருந்தும் 4500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதும், வழக்கமான போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டதும் தேவையற்றவை. இவை தமிழகத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கொரோனாவை ஏற்றுமதி செய்து விடும்.

தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கொரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதை தவிர்ப்பதற்காகவே கடுமையான ஊரடங்கு வலியுறுத்தப்பட்டது.

ஆனால், தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஒரு வாரத்தில் படிப்படியாக பரவ வேண்டிய கொரோனாவை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் பரவச் செய்வதற்கான ஏற்பாடு தான். ஒரு வார ஊரடங்கால் கிடைக்கும் நன்மையை இரு நாள் தளர்வு தகர்த்து விட்டது என்பதே உண்மை. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
PMK Founder Dr Ramadoss has opposed to the Lockdown restrictions in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X