ஈரேழு லோகத்திலும்.. ஒரே கம்பெனி நம்ம முரசொலி கம்பெனிதான்.. வெற்று சவடால்தானா.. ராமதாஸ் பொளேர்!
ட்வீட் போட்டு முக ஸ்டாலினை டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்
சென்னை: "அகில இந்தியாவில் மட்டுமல்ல.... ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டிடத்தில் இருந்து கொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி.... நம்ம முரசொலி கம்பெனி தான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது!" என்று முக ஸ்டாலினை ராமதாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
பிரச்சாரம் செய்துட்டு இருந்த முக ஸ்டாலின், அசுரன் படம் நைட் ஷோ போய் பார்த்தார்... பஞ்சம் நிலம் தொடர்பான படம் அது.. படத்தை பார்த்ததோடு இல்லாமல், அதை பாராட்டி ட்வீட்டும் செய்தார்.
அப்போது ஆரம்பித்தது இந்த விவகாரம்.. பஞ்சமி நில விவகாரம் முரசொலி ஆபீஸ் வரை வந்து நின்றது.. விவகாரத்தை ஆரம்பித்தது பாமக தலைவர் ராமதாஸ்தான்.

பஞ்சாயத்து
"முரசொலி ஆபீஸ் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம்... அதனால் ஸ்டாலின் உரியவர்களிடம் அந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும்" என்று பஞ்சமி தொடர்பான பஞ்சாயத்தை ஆரம்பித்தார் ராமதாஸ். இதையடுத்து "முரசொலி ஆபீசுக்கு பட்டா இருக்கு.." என்று சொல்லி, அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டு ராமதாசுக்கு பதிலடி தந்தார் ஸ்டாலின்.. ஆனால் டாக்டர் அப்போதும் விடவில்.. "மூலப்பத்திரம் எங்கே? அதை முதல்ல வெளியே எடுங்க" என்று அடுத்த லெவலுக்கு போனார்.

அறக்கட்டளை
இவர்களுக்கு நடுவில், முரசொலி ஆபீசை இடத்தை மீட்டு உரியவர்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும்" என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு பாஜக தரப்பு சென்றது... இந்த விசாரணையில், "அந்த இடம் அஞ்சுகம் பதிப்பகத்துக்கு சொந்தமானது... முரசொலி அறக்கட்டளை வாடகைக்குதான் இயங்கி வருகிறது... அந்த நிலத்தை முறையாக நில உரிமையாளர்களிடமிருந்து அஞ்சுகம் பதிப்பகம் வாங்கியுள்ளது.

மீண்டும் விமர்சனம்
அஞ்சுகம் பதிப்பகம் பெயருக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது" என்ற விளக்கமும் தரப்பட்டது. இத்தோடு விவகாரம் முடியும் என்று பார்த்தால் முடியவில்லை.. திரும்பவும் ஆரம்பமாகி உள்ளது.. அதுவும் டாக்டர் ஐயாவேதான் ஆரம்பித்துள்ளார்... இந்த விவகாரத்தை விமர்சித்து திமுக தலைவரிடம் 4 கேள்விகளை கேட்டுள்ளார். ஒன்றுக்கு நாலாக தெறிக்கவிட்ட ட்வீட்டுகள் இவைதான்:
|
சவால்
"முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா?"
|
ஒப்பந்தம்
"முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத் தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா?"

ஆர்எஸ் பாரதி
ஏற்கனவே பொய் தகவலை பரப்பியதால் ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறி வந்தார்.. இப்போது இத்தனை ட்வீட்டுகளுக்கு திமுக தரப்பில் என்ன பதிலடி வரப்போகிறதோ தெரியவில்லை. ஆனால் ராமதாஸ் கேட்ட இந்த கேள்விகள் எல்லாம் அறிவாலயத்தை எட்டி உள்ளதாம்!
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications