"மது குடிக்காதீங்க" ராமதாஸ் கோரிக்கை.. "மண்டைல எங்கய்யா ஏறபோகுது.. எல்லாத்துக்கும் காரணம் திமுகதான்"

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மது அருந்துவதால் கொரோனா வைரஸ் குறையும் என்பது அபத்தம்.. இந்த மாதிரி வதந்தியெல்லாம் நம்பக்கூடாது.. டாக்டர்கள் சொல்வதைதான் கேட்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் அட்வைஸ் வழங்கி உள்ளார்.. "இதெல்லாம் மண்டையில ஏறாது அய்யா.." என்றும், "பொய்யான தகவலை பரப்பியது, சாராய ஆலைகளை வைத்து நடத்துறது திமுக தான் அய்யா.." என்றும் ராமதாசுக்கு பலரும் பதிலளித்து வருகின்றனர்.

கொரோனாவின் தாக்கத்தின் பீதி தலைதூக்கி உள்ளது... இதன் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி வருகிறது. இந்தியாவில் இயங்கும் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களால் முயன்ற வரை கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு கொடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள், செல்போனிலிருந்து காலர் டியூன் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.. ஆனால் அந்த காலர் டியூன் ஆங்கிலத்தில் உள்ளது.

காலர் டியூன்

காலர் டியூன்

இதற்குதான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதை பற்றின சிக்கல் குறித்து விளக்கி ஒரு ட்வீட் போட்டிருந்தார்.."கொரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த செல்பேசி காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது. ஆனால், நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்பேசியை பயன்படுத்தும் நிலையில், ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாகப் பயனளிக்காது. மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும்!" என்று கேட்டு கொண்டிருந்தார்.

பறவை காய்ச்சல்

பறவை காய்ச்சல்

அதேபோல, "கேரளத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பறவைக் காய்ச்சலும் பரவி வருவதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்!"

வழிமுறைகள்

வழிமுறைகள்

"கேரளத்திலிருந்து வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளித்து சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும். பறவைக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஊடகங்கள் வழியாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்றும் அடுத்தடுத்த கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு ட்வீட்களை போட்டு யோசனைகளையும் தெரிவித்துள்ளார்.

மது அருந்த கூடாது

இதில் இன்னொரு ட்வீட் தனியாக பதிவிட்டுள்ளார்.. அதுதான் முக்கியமான ட்வீட்... சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் மது அருந்தினால் போதும் என்று சோஷியல் மீடியாவில் தகவல் ஒன்று பரவியது.. இது வைரலானது அடுத்து உலகம் முழுவதும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.. ஆனால் உலக சுகாதார நிறுவனம் இதை உடனடியாக மறுத்தது. மது அருந்துவதால் எந்த வைரஸையும் அழிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியது!

ராமதாஸ் ட்வீட்

இதையேதான் டாக்டர் ஐயாவும் தெரிவித்துள்ளார்.. "மது" என்றதும் முதல் ஆளாக கொந்தளித்து வந்து ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "மது அருந்துவதால் கொரோனா வைரஸ் குறையும் என்பது அபத்தம் என உலக சுகாதார நிறுவனம் விளக்கம். கொரோனாவுக்கான மருத்துவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பாமல், பரப்பாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்!" என்று அட்வைஸ் தந்துள்ளார். ஆனால் ராமதாஸின் இந்த ட்வீட்டிற்கு கமெண்ட்கள்தான் வித்தியாசமாக வந்து விழுகின்றன..

சிறப்புதான்

சிறப்புதான்

"மது அருந்தினால் திராவிட வைரஸ் மகிழும்..!" என்கிறார் ஒருவர்.. "மக்கள் நலனில் அக்கறை கொண்ட மருத்துவர் ஐயா அவர்கள் எப்போதுமே சிறப்புதான்" என்று பாராட்டியுள்ளார் மற்றொருவர். "அதெல்லாம் மண்டையில ஏறாது அய்யா... குடிச்சி குடிச்சி எல்லாம் மலிங்கி போச்சி...." என்று சலித்து போய் தெரிவித்துள்ளார் இன்னொருவர்.. மருத்துவர் தானே? எதாவது ஆலோசனை வழங்கலாமே என்று உரிமையான கமெண்ட்டுகளும் விழுகின்றன... "பொய்யான தகவலை பரப்பியது, தமிழகத்தில் சாராய ஆலைகளை வைத்து நடத்தும் திமுகவினர் தான் அய்யா.." ஒருவர் ராமதாசிடம் திமுகவை போட்டு தந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+