Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஒரு ஆண்டு கனவு!" பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு.. தூண்டியதே டாக்டர் சரவணன் தான்.. பாஜக பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பாஜக பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்திய எல்லைகளில் கடந்த சில காலமாகவே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்,

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் மதுரை ராணுவ வீரர் லட்சுமணனும் ஒருவர்! அவரது உடல் நேற்று சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 செருப்பு வீச்சு

செருப்பு வீச்சு

முன்னதாக ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பிய போது நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவினர் இறுதி அஞ்சலி செலுத்தக் காத்திருந்த நிலையில், பாதுகாப்பு கருதி பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திய பின்னரே மற்றவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என போலீசார் கூறியதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

 அமைச்சர் பிடிஆர்

அமைச்சர் பிடிஆர்

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தியாகியின் உடலை அடக்கம் செய்துள்ளோம். இந்த நேரத்தில் பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் குறித்துப் பேசுவது சரியாக இருக்காது. பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் பற்றிப் பேச விரும்பவில்லை. யார் இப்படி பிணத்தை வைத்து அரசியல் செய்யக் காத்திருந்தனர் என எல்லாருக்கும் தெரியும்" என்று மட்டும் கூறி இருந்தார்.

 பாஜகவில் இருந்து விலகல்

பாஜகவில் இருந்து விலகல்

இந்தச் சூழலில் நேற்று நள்ளிரவில் மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை நேரடியாக அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தார். நேற்று நடந்த சம்பவம் குறித்து வருத்தும் தெரிவித்துள்ளார். காலை நடந்த சம்பவம் மன அமைதியைக் கெடுத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மத வெறுப்பு அரசியல் தனக்குப் பிடிக்கவில்லை என்றும் இனியும் பாஜகவில் தொடர மாட்டேன் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

 டாக்டர் சரவணன்

டாக்டர் சரவணன்

மதுரையில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் சரவணன், திமுக சார்பில் கடந்த 2016ஆம் ஆண்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில், டாக்டர் சரவணன் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட போதிலும், அவர் தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து மதுரை மாநகர் பாஜக தலைவராகச் செயல்பட்டு வந்தார்.

 பரபர குற்றச்சாட்டு

பரபர குற்றச்சாட்டு

இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. அதிலும் தேசியக் கொடி பொருத்தப்பட்ட அமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பானது. இதற்குத் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சூழலில் தான் நேற்று நடந்த செருப்பு வீச்சு சம்பவத்திற்குக் காரணமே டாக்டர் சரவணன் தான் என்று பாஜக பரபர குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

Recommended Video

    Minister PTR | பாஜகவினர் தாக்குதலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்
     ஒரு வருட கனவு

    ஒரு வருட கனவு

    இது தொடர்பாக பாஜகவின் மாநில ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல்குமார், "நேற்று மதுரையில் நடந்த விரும்ப தகாத நிகழ்வை தூண்டியதே டாக்டர் சரவணன் தான். ஆதாயத்திற்காக மீண்டும் தி.மு.கவில் இணையும் 1 வருட கனவு மற்றும் மதுரை அமைச்சர் மூர்த்திக்கு எதிரான ஒருங்கிணைப்பையும் தனது அடிப்பொடிகளை வைத்து நேற்று மதுரையில் நாடகம் நடத்தி விட்டார் சரவணன்" என்று பதிவிட்டுள்ளார்,

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+