Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா.. டாக்டர் தீபா சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்ப்பிணிகள் நொறுக்குத்தீனிகளை சாப்பிடலாமா, சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது தவறானது என அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா கூறுகையில் கர்ப்ப காலத்தில் அதிக பசிப்பதால் நொறுக்குத் தீனிகளை சாப்பிடலாமா என நிறைய கர்ப்பிணிகள் கேட்கிறார்கள். அப்படி சாப்பிடலாம் எனில் என்னென்ன சாப்பிடலாம் என ஆலோசனை கூறுமாறு கேட்கிறார்கள்.

முதலில் வள்ளிக்கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக்கிழங்கு, இதில் மிகவும் சுவையும் ஆரோக்கியமும் இருக்கும். இதில் பீட்டா கரோட்டீன் காணப்படுகிறது. இதை நாம் உள்ளுக்குள் எடுத்துக் கொள்வதால் விட்டமின் ஏ அதிகரிக்கிறது. குழந்தையின் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவும். அனிமல் பேஸ்டு விட்டமின் ஏ வை விட இந்த வள்ளிக்கிழங்கு மிகவும் நன்மையை தரும். மலச்சிக்கல் ஏற்படாது.

சர்க்கரை

சர்க்கரை

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் அதிகரிக்காது. சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது தவறான விஷயம். கணையத்தில் இன்சுலின் அளவை சீர்படுத்தும். முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிகள் மாலை நேரங்களில் 3 வேகவைத்த முட்டைகளை எடுத்துக் கொள்ளலாம்.

மிளகுத்தூள்

மிளகுத்தூள்

3 முட்டைகளை கட் செய்து மிளகுத்தூள் போட்டு வெங்காயம், தக்காளி, கேரட் ஆகியவற்றை பச்சையாக துண்டு துண்டாக நறுக்கி போட்டு சாப்பிடலாம். இதன் மூலம் 80 கலோரிகள் கிடைக்கும். முட்டையில் புரதச்சத்துடன் காலின் என்ற பொருள் இருக்கிறது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

மூளை வளர்ச்சி

மூளை வளர்ச்சி

இந்த காலின் குறைவாக இருந்தால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கோ முதுகு தண்டுவடத்திலோ பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு முழு முட்டையில் 147 மில்லிகிராம் காலின் அளவு இருக்கும். கர்ப்ப காலத்தில் 450 மில்லி கிராம் தேவைப்படுகிறது. அது போல் புரதம் நிறைந்த இன்னொரு உணவு மீன். குழந்தையின் மூளை, கண் வளர்ச்சிக்கு இது உதவும்.

சாலட்

சாலட்

மாலை நேரங்களில் கீரை சூப் குடிக்கலாம். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கீரை சூப் குடிக்கலாம். விட்டமின் ஏ, சி, கே, கால்சியம், இரும்பு, பொட்டாசியம், ஃபோலேட் ஆகியவை இருக்கிறது. இதை நாம் தினமும் எடுத்துக் கொள்வதால் இரும்பு, கால்சியம் குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கும். அடுத்தது புரொகோலியை சாலட்டாக செய்து சாப்பிடலாம். வாரத்தில் ஒரு நாளாவது இதை சேர்த்துக் கொள்ளலாம்.

3 முதல் 4 லட்டுகள்

3 முதல் 4 லட்டுகள்

மாலை நேரங்களில் உலர் கொட்டைகளை லட்டு போல் செய்து சாப்பிடலாம். சிறு தானியங்களை நன்கு வறுத்து அரைத்து அதில் சிறிது நெய் விட்டு உலர் பழங்கள், கொட்டைகளை நறுக்கி போட்டு வெள்ள பாகை போட்டு உருண்டைகளாக பிடித்து சாப்பிடலாம். தினமும் கர்ப்பிணிகள் 3 முதல் 4 லட்டுகளை சாப்பிடலாம். இதில் செலினியம், விட்டமின் 17 ஆகியவை அதிகமாக இருக்கும்.

45 சதவீதம்

45 சதவீதம்

அது போல் பொட்டுக் கடலையை லேசாக வறுத்துவிட்டு அதில் தேங்காய் துருவி போட்டு, உலர் கொட்டைகள், கொஞ்சம் சத்து மாவு, வெள்ளம் சேர்த்து லட்டு செய்து சாப்பிடலாம். கர்ப்பிணிகள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுவதை தண்ணீர் அதிகம் குடித்தலின் மூலம் தடுக்கலாம். ரத்தத்தின் அடர்த்தியை தண்ணீர் மூலம் மட்டுமே 45 சதவீதம் அதிகரிக்கும்.

Recommended Video

    மன அழுத்தம், பிபி, சுகர் குறையும்.. டிப்ஸ் சொல்கிறார் டாக்டர் தீபா
    மனதை சந்தோஷமாக வைக்க..

    மனதை சந்தோஷமாக வைக்க..

    பிரஸ் ஜூஸ்களில் வெள்ளம், தேன் கலந்து எடுத்துக்கலாம். மனதையும் சந்தோஷமாக வைக்க மெலோடி மியூசிக், காமெடிகளை கேட்கலாம், பார்க்கலாம். நல்ல புத்தகங்களை படிக்கலாம். கண்ணாடி வளையல்களை நிறைய போட்டு அதன் சப்தத்தை குழந்தை வயிற்றிலிருந்து கேட்கும் வகையில் செய்ய வேண்டும் என டாக்டர் ஒய் தீபா தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+