தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள்-வரைவு வாக்காளர் பட்டியல் ரிலீஸ்- பெண் வாக்காளர்கள் அதிகம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெறும். பின்னர் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். அடுத்த ஆண்டு மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இப்பட்டியலில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம். மொத்தம் 3.10 கோடி பெண்வாக்காளர்கள் உள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் 6.52 லட்சம் பேர் வாக்காளர்கள். தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி இது. கீழ்வேளூர் தொகுதியில் மிக குறைவாக 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 6.2 கோடி பேர் வாக்காளர்கள் இருந்தனர். இந்த ஆண்டு வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளடு.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் ஆகியவையும் இன்றே தொடங்கப்பட உள்ளது. 17 வயது நிரம்பியவர்கள் அனைவருமே தங்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு பின்னர் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்கும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவை வாக்குச் சாவடி அதிகாரிகளிடம் நேரடியாகவும் கொடுக்கலாம். வாக்காளர் பட்டியலுக்கான தேர்தல் ஆணைய இணையத்திலும் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யலாம்.
மேலும் நவம்பர் மாதத்தில் மொத்தம் 4 நாட்கள் சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். இந்த சிறப்பு முகாம்களிலும் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை வழங்கலாம். தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் முதல் விண்ணப்பங்கள் பெறுதல் வரையிலான பணிகள் டிசம்பர் 9-ந் தேதி முடிவடையும். பின்னர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி 5-ந் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications