பெண் விபச்சாரி என்றால் ஆணுக்கு பெயர் "விபச்சாரன்".. சொன்னதும் பெரியார்தான்.. சீமானுக்கு திக பதிலடி!
சென்னை: தந்தை பெரியார் பேசாத பல கருத்துகளை அவர் பேசியதாக சொல்லிக் கொண்டு திரியும் கூட்டத்தினர், பெண் விபச்சாரி என்றால் அந்த ஆணுக்கு பெயர் "விபச்சாரன்" தானே என்று பெரியார் சொன்னதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சியினருக்கு திராவிடர் கழகம் பதிலடி தந்துள்ளது.
இது தொடர்பாக திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி கூறியிருப்பதாவது: ஆணாதிக்க சமூகத்தில், எந்த வார்த்தை சொன்னால் பெண்களே சக பெண்ணை இழிவாக நினைப்பார்கள் என்பதை தெரிந்துக் கொண்டும், தான் செய்த கேவலமான குற்றத்திற்கு தண்டனை உறுதி என்று தெரிந்து பயத்தின் உச்சத்தில் கதறி துடிக்கும் விபச்சாரன் சீமான்.

அய்யோ எங்க அண்ணனை விபச்சாரன் என்று எப்படி சொல்லலாம் என்று அலறிக்கொண்டு எங்களை திட்ட கெட்ட வார்த்தை தேடாதீர்கள். 'சீமான்' என்ற சொல்லே நிகழ்கால அரசியல் சூழலில் மாபெரும் கெட்ட வார்த்தைதான்!
தந்தை பெரியார் பேசாத பல கருத்துகளை அவர் பேசியதாக சொல்லிக் கொண்டு திரியும் கூட்டமே, அதில் உண்மையாக அவர் சொன்ன ஒன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பெண் விபச்சாரி என்றால் அந்த ஆணுக்கு பெயர் "விபச்சாரன்" தானே என்றார்.
விரும்பிய பெண்ணை கிஞ்சித்தும் அறமின்றி பேசும் 'விபச்சாரன் சீமான்'.
பொது வெளியில் இதுபோன்ற கேடுகெட்ட, பெண்களுக்கு எதிரான பேச்சை பேசும் யாராய் இருப்பினும் அவர்கள் மனிதர்கள் இல்லை என்று அறிக! இவ்வாறு மதிவதனி தெரிவித்துள்ளார்.
நடிகை வழக்கில் சீமான் பேசிய சர்ச்சை கருத்துகள் என்ன?
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், நான் தான் உண்மையில் கம்யூனிஸ்ட்.. ஏனெனில் நீங்க செய்ய வேண்டிய வேலைகளை நான் செய்து கொண்டிருக்கிறேன்.. "Enjoyment without Responsibility" பற்றி நீங்கதான் பேசுறீங்க.. எவனாவது பாசத்துக்கு புள்ளைய பெத்துக்குவானா தேவைன்னா அப்படியே போய்ட்டு வந்துடனும்.. குடும்பம் என எவனாவது வாழ்ந்துகிட்டு இருப்பானா? Enjoyment without Responsibility என அய்யா ஆங்கிலத்திலேயே சொல்கிறாரே" என்று சொன்னது யார்? பெரியார் சொன்னதாக இப்ப இருக்கிற ஒரு அய்யா சொல்கிறார். Enjoyment without Responsibility என சொன்னது உங்க பெரியார்.. அப்படிப்பட்ட பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கீங்க..Enjoyment without Responsibility-ல் உங்க Responsibility என்ன?அம்மையார் கனிமொழிக்கும் சேர்த்துதான் கேட்கிறேன்.. கம்யூனிச தோழர்களுக்கும்தான் கேட்கிறேன் என கூறியிருந்தார்.
அதேபோல என் மீது பலாத்கார புகார் தெரிவித்த நடிகை பாலியல் தொழிலாளி.. அவ பாலியல் தொழிலாளி என்பதற்கான ஆதாரங்களை நான் காட்டவா? 15 ஆண்டுகள் நான் கண்ணியமாக இருந்த போது நீங்கள் எல்லாம் என்ன ** செய்தீர்கள்? அவ தான் பொண்ணா.. அவளுக்குதான் மனசு இருக்கா? எங்கள் வீட்டில் பெண்கள் இல்லை? எங்களுக்கு நீதி இல்லையா? என்றும் சீமான் கூறியிருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications