சபாஷ்! எங்களுக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கோவில் இடிப்பு-ஸ்டாலினுக்கு தி.க. வீரமணி பாராட்டு!
சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் புதியதாக கட்டப்பட்ட சிவசக்தி விநாயகர் கோவில் இடிக்கப்பட்டதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. சென்னை மாநகரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் புறப்படும்; சென்னைக்கு வரும் தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரைதான் இயக்கப்படும் என்பதுதான் புது அறிவிப்பு. ஆனால் கிளாம்பாக்கம் என்பது சென்னையில் இருந்து 40 கிமீ தொலைவில் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிளாம்பாக்கத்துக்கு செல்வதோ, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்குள் வருவதோ சிரமமாக இருக்கும் என பொதுமக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பகுத்தறிவாளர் கழகம்: இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் திராவிடர் கழகத்தின் பகுத்தறிவாளர் கழகம் புதிய பஞ்சாயத்தை கூட்டியது. இது தொடர்பாக பகுத்தறிவாளர் கழகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், இது தொடர்பாக பகுத்தறிவாளர் கழகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தமிழ்நாடு அரசால் மிகச் சிறப்பாக – மக்கள் நலன்கருதி கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய வளாகத்தில் கோவில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது – அதிர்ச்சியை அளிக்கக் கூடியதும் – அரசு ஆணை மீறலுமாகும்.
கோவிலை இடிக்க கோரிக்கை: அறிஞர் அண்ணா முதலமைச்சராக வந்த நிலையில், அரசு அலுவலகங்களிலோ, வளாகத்திலோ எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்று சுற்றறிக்கை தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டது. நீதிமன்றங்களும், அரசு வளாகத்திற்குள் எந்த மதத் தொடர்பான கோவிலையும் கட்டக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளன. இந்த நிலையில், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் 'திராவிட மாடல்’ அரசுக்குச் சொந்தமான கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதனை உடனே அகற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இன்றேல், நீதிமன்றம் வாயிலாகப் பரிகாரம் காண நேரிடும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடக் கூடாது; இவ்வாட்சியின் காவலர்கள் நாங்கள்! என வலியுறுத்தப்பட்டிருந்தது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விநாயகர் கோவில் இரவோடு இரவாக இடித்து அகற்றம்- பெரியாரிஸ்டுகள் ஹேப்பி!
இந்து முன்னணி போராட்டம்: இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவோடு இரவாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கட்டப்பட்டிருந்த சிவசக்தி விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது. இந்த கோவிலை இடிக்க இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பாக ஒன்று திரண்டு போராட்டமும் நடத்தினர். இப்போராட்டத்துக்கு நடுவே கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கோவில் கட்டுவதா? இடித்து தள்ளுங்க.. கொந்தளிக்கும் 'கருஞ்சட்டைகள்'!
கி.வீரமணி நன்றி: தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கி.வீரமணி கூறுகையில், சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தமிழ்நாடு அரசால் மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய வளாகத்தில் அரசு விதிகளுக்கு எதிராக கோவில் ஒன்று கட்டப்பட்டு இருந்ததைச் சுட்டிக்காட்டி- அதனை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்துக்கு என விடுதலையில் (9.1.2024) முதல் பக்கத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. சட்டப்படியான நமது கோரிக்கையை ஏற்று அக்கோவில் அகற்றப்பட்டுவிட்டது என்ற செய்தி அறிந்து, "சமூக நீதிக்கான சரித்திர நாயகர்" மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications