கிரகண நேரத்தில் சாப்பிடக் கூடாதா? சென்னையில் வரும் 25-ல் மூடநம்பிக்கை ஒழிப்பு ஒன்று கூடல்: கி.வீரமணி
சென்னை: கிரகண நேரங்களில் மூடநம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுவதாகவும் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவும் சென்னையில் வரும் 25-ந் தேதி பெரியார் திடலில் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
மக்களை அறியாமையிலிருந்து வெளியேற்றி, அறிவு வெளிச்சம் தந்து அறிவை அகண்டமாக்கிடும் ஆக்கப்பூர்வ பணியை அரசுகள்கூட செய்யாமல், அந்த அறியாமைக்கு மதவெறிப் பூண்களைப் போட்டு ''எப்படி ஜொலிக்கிறது பார்த்தீர்களா? எங்கள் 'பாரத புண்ணிய பூமி!'' என்று கூறுகிறார்கள்! 'புனித கங்கை'யைச் சுத்தப்படுத்த இதுவரை செலவழித்த தொகை இருபதாயிரம் கோடி! உண்மையிலேயே 'புனிதம்' (Holy) என்றால், அதனைச் சுத்தப்படுத்தவேண்டிய அவசியம் எப்படி ஏற்படும் என்ற பகுத்தறிவுக் கேள்வியை எவரும் எழுப்புவதில்லை! ஆனால், உலகில் மற்ற நாட்டவர் தமது அறிவியல் ஆற்றலால் கண்டுபிடித்துத் தந்த தொழில்நுட்பத்திற்கு ''ஆயுத பூஜை'' நடத்துவதே நமது நாட்டின் 'தனிப்பெருமை!'

5 ஜியும் கிரகணமும்
ஒருபுறம் 5ஜி என்ற தகவல் தொழில்நுட்பப் புரட்சியை இங்கு பயன்படுத்திக் கொண்டே, மற்றொருபுறம் அறிவியலுக்கு நேர்மாறாக 'கிரகணம்' என்பது - ராகு, கேது என்ற பாம்புகள் விழுங்குவதால் ஏற்படுவது என்ற கற்பனையைப் பரப்பி, மக்களின் அறிவை நிரந்தர 'அடகுப் பொருளாக' ஆக்கி, மூடத்தனத்தினை மூலதனமாக்கி, மக்களைச் சுரண்டிவரும் புரோகித பார்ப்பன வர்க்கம்! இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுவது என்ன?

அரசியல் சாசனம் சொல்வது?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) பிரிவு கூறுவது என்ன? அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) என்ற தலைப்பில், ''அறிவியல் மனப்பாங்கை வளர்த்துப் பரப்புதல், எதையும் கேள்வி கேட்டு அறியும் திறனை வளர்ப்பது, மனிதநேயம், சீர்திருத்தம் என்பவற்றை மக்களிடையே பரப்புவது ஒவ்வொரு குடிமகன்(மகள்) கடமையாகும்'' என்று கூறியுள்ளது. அதன்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியில் இருந்து அரசோச்சுபவர்கள், '''கிரகணம்' போன்றவை ஏன் ஏற்படுகின்றன? இதனால், கர்ப்பிணிப் பெண்கள் கருவுக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது; அதுபோலவே, உண்ணுவதற்கு அந்த நேரத்தில், எந்தத் தடையும் கிடையாது'' என்று அரசு இயந்திரங்கள்மூலம் நாட்டு மக்களுக்குப் பரப்பவேண்டாமா?
அந்த அரசமைப்புச் சட்டத்தினைக் காப்பது உள்பட இத்தியாதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டவர்கள் 'அடிப்படைக் கடமை' என்பதால், அதனை நிறைவேற்றவேண்டாமா? செய்ய முனையாதது மட்டுமல்ல; இதைச் செய்யும் நம்மீதும் தடுப்புக் கணைகளை ஏவலாமா?

மூடநம்பிக்கை
''தாய்மார்களே, கர்ப்பிணிகளே வெளியே வராதீர்கள்! அந்த நேரத்தில்'' என்று அச்சுறுத்திடுவது அறிவியலுக்கு விரோதமான போக்கல்லவா! இரட்டை வேடம்; இரட்டை நாக்கு! திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் மற்றும் சில முற்போக்கு அமைப்புகளும் 'கிரகணம்' ஏற்படும்போதெல்லாம் அதுபற்றிய மூடநம்பிக்கையை தோலுரித்துக் காட்டும் - நடைமுறைச் செயலை - உண்டு காட்டுவது, கருவுற்ற தாய்மார்களை அருகில் அமர்த்தி உணவு உண்ணச் செய்வது, அவர்களுக்கு முன்பு எப்படி பாதுகாப்பாகக் குழந்தைப் பேறு அமைந்தது என்றும் விளக்க உரைகளையும், நடைமுறை உண்மை (By Demonstration) மூலம் காட்டி வருகிறோம்.

சென்னையில் கிரகண நேர்த்தில்..
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தன்று சென்னை பெரியார் திடலில் நடத்தப் பெற்ற நிகழ்வில் கர்ப்பிணியாகப் பங்கேற்ற இ.ப.சீர்த்தி, 2020 ஜூன் மாதத்தில் மகிழன் என்ற ஆண் மகவை ஈன்றார். குடும்பத்துடன் அவர்கள் நலமாகவே உள்ளனர். அவர்களும் இம்முறை நம் நிகழ்வில் பங்கேற்பர்! இம்முறை சென்னை பெரியார் திடலில், 25.10.2022 அன்று மாலை 5.30 மணிக்கு கிரகணம் ஏற்படும் நேரத்தில், மூடநம்பிக்கை ஒழிப்பு, சிற்றுண்டி, அறிவியல் செயல் விளக்க நிகழ்ச்சியை எனது தலைமையில் கழகத் தோழர்கள் நடத்திக் காட்டி, மூடநம்பிக்கையின் முதுகெலும்பை உடைப்போம்! மூடநம்பிக்கையை ஒழிக்க விரும்புவோர் இந்நிகழ்வில் நம்முடன் வந்து பங்கேற்கலாம்! வாய்ப்புள்ள ஊர்களிலும் திராவிடர் கழகத்தினர், பகுத்தறிவாளர் கழகத்தினர் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களும் இதனை நடத்தி, அறிவியல் மனப்பான்மையினை வளர்ப்பதோடு, அறியாமை இருளை விரட்டி, அச்சம் என்பது மடமை என்பதை உணர்த்த ஆயத்தமாவோம்! தோழர்களே, ஏராளமாக பாலின வேறுபாடின்றி, கட்சி வேறுபாடின்றி வாரீர்! வாரீர். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications