”வெளியாகிறது திராவிட மாடல் நூல்” முப்பெரும் விழாவுக்கு தயாராகும் திமுக.. அடுத்தடுத்து அதிரடி!
சென்னை: திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் நூல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு அரசு நிகழ்ச்சிகளிலும், ஒவ்வொரு திட்டத்தின் தொடக்க விழாவிலும் திராவிட மாடல் என்று பேசி வருகிறார்.
திராவிட மாடல் என்பது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் அனைவருக்கும், அனைத்து மாவட்டங்களுக்கும் சமமான வளர்ச்சியை ஏற்படுத்துதல் என்பதாகவே விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

திமுக முப்பெரும் விழா
இந்த நிலையில் திராவிட மாடல் பற்றிய கொள்கை, கோட்பாடு நூல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் முப்பெரும் விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணா பிறந்தநாள், பெரியாரின் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டும், செப்டம்பர் 16 திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும், செப்டம்பர் 17 பெரியாரின் பிறந்த நாளையும் சேர்த்து முப்பெரும் விழா திமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

விருதுகள்
இந்த நாளில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், பொதுக் கூட்டத்தை நடத்துவதும் வழக்கம். அத்துடன் முப்பெரும் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

டி.ஆர்.பாலுவுக்கு விருது
2022ம் ஆண்டு செப்.15ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதன், அண்ணா விருது இரா.மோகன், கலைஞர் விருது டி.ஆர்.பாலு எம்.பி., பாவேந்தர் விருது புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு, பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

கருணாநிதியின் கடிதங்கள்
இந்த முப்பெரும் விழாவின் போது 1968ம் ஆண்டு முதல் 2018 வரையில், திமுக தொண்டர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய 4041 கடிதங்களின் தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட உள்ளது. இதுமட்டுமல்லாமல் 21,510 பக்கங்களில் கருணாநிதி எழுதிய அனைத்துக் கடிதங்களும் தொகுக்கப்பட்டு, 54 தொகுதிகளாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட மாடல் நூல்
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் கொள்கை, கோட்பாடுகள் அடங்கிய நூல் செப்.15ல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் கோட்பாடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய உரைகளின் மையக் கருத்தை தொகுத்து திமுக புத்தகமாக வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. இந்த நூல் வெளியான பின்னர், திராவிட மாடல் குறித்து அனைத்து தரப்பினரும் எளிதாக புரிந்துகொள்வர் என்று திமுகவினரால் பேசப்பட்டு வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications