வெளிநாடு தப்ப முயலும் ஜாபர் சாதிக்? போதைப்பொருள் தடுப்புத்துறை வைத்த செக்.. ‛லுக் அவுட்’ நோட்டீஸ்
சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் டெல்லி கைலாஷ்பார்க் பகுதியில் உள்ள குடோனில் மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் அதிரடியா சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதோடு இந்த போதைப்பொருள் கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஜாபர் சாதிக் திமுக சென்னை மேற்கு மண்டல அயலக அணியின் அமைப்பாளராக செயல்படுவது தெரியவந்தது. அவரை கைது செய்ய அதிகாரிகள் விரைந்தனர்.
இதையடுத்த ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் தான் தேடப்படுவதை அறிந்த ஜாபர் சாதிக் தலைமறைவானர். அவரது தேடி சென்னை வந்த அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு சீல் வைத்தனர். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது வரை ஜாபர் சாதிக் எங்கிருக்கிறார்? என்பது தெரியவில்லை. அவர் வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இதனால் அவர் வெளிநாடு தப்பித்த செல்ல திட்டமிடலாம் என மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் நினைக்கின்றனர்.
இதற்கிடையே தான் ஜாபர் சாதிக் இந்தியாவை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் அவரது போட்டோவுடன் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி அவர் விமான நிலையம் சென்று வெளிநாடு செல்ல முயன்றால் அதுபற்றிய தகவல் உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை குழுவுக்கு வழங்குவார்கள். இதன்மூலம் ஜாபர் சாதிக்கிற்கு மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் செக் வைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications