அடேங்கப்பா! ஒரே ஒரு முருங்கை விலை ரூ. 50.. சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ ரூ. 400-க்கு விற்பனை!
சென்னை: காய்கறி சந்தைகளில் கடந்த சில மாதங்களாக முருங்கைக்காய் (முருங்கை) (முருங்கை காய்) உரிய விலை கிடைக்காமல் உதாசீனப்படுத்தப்பட்டு உதறித் தள்ளப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய நிலவரத்தில் முருங்கைக்காய் அதி உச்ச விலையைத் தொட்டு வருகிறது. ஒரே ஒரு முருங்கைக்காய் ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் விலை ரூ. 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரு300க்கு விற்பனை செய்யப்பட்டது.
அன்றாட உணவில் முருங்கைக்காய் மிக முக்கியமான காய்கறிகளில் ஒன்று, தமிழ்நாட்டில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிகம். இதனால் வேடசந்தூரில் முருங்கை பதப்படுத்தும் மையமும் அமைக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுகும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் குஜராத்தில் இருந்தும் தமிழ்நாட்டின் பல சந்தைகளுக்கு முருங்கைக்காய் கொண்டு வரப்படுகிறது.
தற்போது மழை காலம், பனிப்பொழிவு என்பதால் முருங்கை வரத்து வெகுவாக குறைந்துள்ளது. முருங்கை பிஞ்சுகள் கீழே உதிர்ந்து விழுவதால் முருங்கை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறி சந்தைகளுக்கான முருங்கைக்காய் வரத்து குறைந்து வருகிறது. இதனால் கோயம்பேடு, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சந்தைகளில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரு முருங்கைக்காய் விலை ரூ50 முதல் ரூ55 வரை விற்பனை செய்யப்பட்டது. 1கிலோ முருங்கைக்காய் ரூ400 வரை விற்பனையானது. கடந்த சில நாட்களாக ரூ250 முதல் ரூ350 வரை விற்பனையான ஒரு கிலோ முருங்கைக்காய் இன்று ஒரேயடியாக ரூ400 -க்கு விற்பனையானது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications