லிப் டூ லிப்.. நடிகை ராஷி கண்ணாவுக்கு முரட்டு முத்தம்.. போஸ்டரை கூட விடாத போதை ஆசாமி.. அடடா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்தார் படத்தில் நடிகர் கார்த்திகிற்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை ராஷி கண்ணாவின் போஸ்டருக்கு பொது இடத்தில் போதை ஆசாமி லிப் டூ லிப் என முரட்டு முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

மது.. நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு தரும். மதுப்பழக்கம் உயிரை கொல்லும் என்றாலும் கூட பலரும் இன்னும் அதனை நாடி சென்று போதையில் மிதப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அரசு விடுமுறை தினங்களில் டாஸ்மாக் கடை மூடப்பட்டாலும் கூட பலர் பிளாக்கில் அதிக விலைக்கு மதுபானம் வாங்கி போதை ஏற்ற மட்டும் மறப்பதே இல்லை. இன்னும் சிலரோ அரசு விடுமுறையை முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கு ஏற்ப தங்களுக்கு தேவையான மதுவை வாங்கி ‛ஸ்டாக்'வைத்து கொள்வதையும் வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.

போதை ஆசாமிகளின் அட்டூழியம்

போதை ஆசாமிகளின் அட்டூழியம்

மதுபானம் வாங்கி குடிப்பதற்கே இத்தகைய திட்டமிடலுடன் செயல்படும் இவர்கள் போதை தலைக்கேறினால் மட்டும் சும்மாவா இருப்பார்கள். சாலையில் படுத்து தூங்குவது, பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை மறிப்பது, பொதுவெளியில் பிறரை ஆபாசமாக திட்டுவது என போதை ஆசாமிகள் செய்யும் அட்டூழியத்தை கூறினால் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

போதை ஆசாமியின் முத்தம்

போதை ஆசாமியின் முத்தம்

அந்த வகையில் தான் தற்போது மது குடித்து போதையில் மதி மயங்கி தள்ளாடிய ஒருவர் நடிகை ராஷிகண்ணாவின் போஸ்டருக்கு லிப் டூ லிப் என முரட்டு முத்தம் கொடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றிய விபரம் வருமாறு: தீபாவளியையொட்டி நடிகர் கார்த்தி நடிப்பில் சர்தார் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடித்துள்ளார். படம் திரையிடப்படும் விபரங்கள் அடங்கிய போஸ்டர்கள் தமிழகத்தின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. போஸ்டரில் நடிகர் கார்த்தியுடன், நடிகை ராஷி கண்ணா இருக்கும் படம் இடம்பெற்றுள்ளது.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

இந்நிலையில் அந்த வழியாக குடிபோதையில் நடந்து சென்ற ஒருவர் ராஷி கண்ணாவின் படத்தை உற்று நோக்கினார். திடீரென்று அங்கேயே நின்ற அந்த ஆசாமி நடிகை ராஷி கண்ணாவின் போஸ்டருக்கு முத்த மழை பொழிந்தார். லிப் டூ லிப் முத்தம் கொடுக்க அவர் குதித்து குதித்து முத்தங்களை பதித்தார். போஸ்டரில் கார்த்தியின் படம் இருந்தாலும் கூட அதில் கவனம் செலுத்தாத போதை ஆசாமி ராஷிகண்ணாவை மட்டுமே ரசித்தார்.

நடந்தது எங்கே?

நடந்தது எங்கே?

இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையம் அருகே நடந்ததாக கூறப்படுகிறது. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட தற்போது இது வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்து சிரிக்கும் நெட்டிசன்கள் ‛‛முரட்டு குடிக்காரராக இருந்தாலும் கூட கவனம் சிதறாமல் ராசிகண்ணாவுக்கு மட்டுமே முத்தம் கொடுக்கிறார் என ஆச்சரியப்படுவதுடன், இந்த மதுப்பிரியர் கொஞ்சமல்ல ரொம்பவே வில்லங்கமான நபராக இருப்பார்போல என கருத்துகளை கூறி வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் வேதனை

சமூக ஆர்வலர்கள் வேதனை

இதுமட்டுமின்றி இன்னும் சிலரோ.. தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் உள்ளது.. இப்போவே இப்படி என்றால் தீபாவளியில் மதுவும், மாமிசமும் தின்று மதுப்பிரியர்கள் செய்யும் அட்டூழியம் இன்னும் எல்லை மீறுேமோ என அச்சத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார். அதேபோல் சமூக ஆர்வலர்கள் ‛‛மதுப்பழகத்தால் சமூகம் மிகவும் மோசமான நிலைக்கு செல்கிறது. இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வேதனையை பகிர்ந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+